அக்னிப்புரட்சி இன்றைய (05.05.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (05.05.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (05.05.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் விலை 15 காசுகள் உயர்ந்து லிட்டர் 92.70 ரூபாய்க்கும், டீசல் விலை 19 காசுகள் உயர்ந்து லிட்டர் 86.09 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

* செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 11 பேர் பலி.

ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக அடுத்தடுத்து உயிரிழப்பு.
நள்ளிரவில் நீடித்த ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக உயிரிழப்பு.

* கடலூர் - புதுவை மறைமாவட்ட பேராயர் கொரோனா காரணமாக உயிரிழப்பு.

பேராயர் ஆண்டகை ஆனந்தராயர் கொரோனா தொற்று காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழப்பு.

💥சென்னை  மாநகராட்சியில் ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்க ஆய்வக நுட்புனர்கள் (lab technicians),  ஊடுகதிர் நுட்பாளர்கள்(X.Ray technicians)  தேவை

நாளை,  நாளை மறுநாள் நேர்காணல் நடக்கவுள்ளது.

* பயிற்சி மருத்துவர்களையும் இறுதியாண்டு மருத்துவம் பயிலும் மாணவர்களையும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்த தமிழக அரசு முடிவு!

* தமிழகத்தில் ஆட்சியமைக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின்.

ஆதரவு எம்எல்ஏக்களின் கடிதம், அமைச்சரவை பட்டியலை ஆளுநரிடம் வழங்கினார் மு.க.ஸ்டாலின்.

* மேற்கு வங்க முதலமைச்சராக  மூன்றாவது முறையாக  மம்தா பானர்ஜி  இன்று பதவியேற்றார்.

ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஜெகதீப் தங்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

* மராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.

50% மேல் இடஒதுக்கீடு இருக்கக் கூடாது என்ற முந்தைய தீர்ப்பை மாற்றியமைக்க முடியாது - உச்சநீதிமன்றம்.

* நீண்ட காலம் பணியாற்றிய ஆயர்களில் ஒருவரான டாக்டர்.பிலிபோஸ் மார் கிறிஸ்டோஸ்டம் மார் தோமா காலமானார்.

இந்தியாவில் நீண்ட காலம் பணியாற்றிய ஆயர்களில் ஒருவரான டாக்டர் பிலிபோஸ் மார் கிறிஸ்டோஸ்டம் மார் தோமா, தனது மதம்,  இரக்கம் மற்றும் சேவையால் மில்லியன் கணக்கான இதயங்களை, குறிப்பாக ஏழை மற்றும் நலிந்தவர்களின் இதயங்களை தொட்டவர்- குடியரசு தலைவர்  ராம்நாத் கோவிந்த்

* கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மதுக் கடைகளை மூட உத்தரவிட கோரி வழக்கு.

மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

எதிர்ப்பு சக்தியை குறைக்க கூடிய மதுபான  விற்பனையை அனுமதிப்பது ஏன்- நீதிபதிகள்.

வழக்கு விசாரணையை ஜூன் 4 ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

* தமிழகத்தில் ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அழைப்பு.

இன்று நாகை அவரிக்கோட்டை சிற்றூரில் அம்மா Mini Clinic மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

* திமுக அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக மா சுப்பிரமணியனும் விளையாட்டுத் துறை அமைச்சராக சாக்கோட்டை அன்பழகனும் பொறுப்பேற்க வாய்ப்பு!

* மே 7 காலை 9 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்.

வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் எளிய முறையில் பதவியேற்கவுள்ளனர்.

* கொரோனா பரவலை தடுக்க மேலும் கட்டுப்பாடுகள்;

அரசு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் மட்டுமே பணிக்கு வர உத்தரவு-புதிய அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.

குரூப்-ஏ பிரிவில் உள்ள அரசு அதிகாரிகள் மட்டும் அனைத்து நாட்களும் பணிக்கு வர வேண்டும்.

மற்ற அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர உத்தரவு.
இந்த உத்தரவுகள் நாளை முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு.

* நாளை முதல் புறநகர் ரயில்களில் பொது மக்கள் பயணிக்க அனுமதி இல்லை.

நாளை முதல் 20ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு மின்சார ரயில்களில் அனுமதி இல்லை.

அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி.

கல்வி நிறுவன ஊழியர்கள், மாணவர்களுக்கு அனுமதி - ரயில்வே நிர்வாகம்.

* கொரோனா வெருவியின் மூன்றாம் அலை தவிர்க்க முடியாதது. எனினும் எப்போது வரும் என்பதை கணிக்க முடியாது.

விஜய்ராகவன், நடுவண் அரசின் முதன்மை அறிவியல் அறிவுரைஞர்

* நாளை முதல் செயல்படுத்தப்படவுள்ள தீவிர கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கின் போது மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து விலக்களித்து தமிழக அரசு அறிவிப்பு

* மருத்துவ அவசரநிலை என்று சொல்லக்கூடிய அளவிற்கு நிலைமை தீவிரமாக உள்ளது- ஸ்டாலின்.

உயிர்பயத்தோடு இருக்கும் மக்களைக்காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்.

தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள்.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக மோசமான இருக்கிறது.

மருத்துவ அவசரநிலை என்று சொல்லக்கூடிய அளவிற்கு நிலைமை தீவிரமாக உள்ளது

கட்டளை மையம் உடனடியாக தொடங்க உத்தரவிட்டுள்ளதாக மு.க ஸ்டாலின் அறிக்கை.

தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை கட்டணத்தில் முடிந்த அளவு சலுகை அளிக்க வேண்டும்.

ஆக்சிஜன் இருப்பு, படுக்கை வசதி குறித்தான தகவல்களை இணையத்தில் வெளியிட்டால் பயனளிக்கும்.

* நாளை முதல் TASMAC மதுக் கடைகளுக்கு நேர கட்டுப்பாடு: தமிழக அரசு அறிவிப்பு

நாளை முதல் டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு.

காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படும் என அறிவிப்பு.

ஏற்கனவே மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட்டு வந்த நிலையில் நேரம் மாற்றம்.

* கொரோனா தடுப்பு பணிகளைக் கண்காணிக்க மாவட்டங்களுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்.

அதிகாரிகள் கொரோனா பரவ வாய்ப்புள்ளவர்கள் கண்டறிந்து பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் - தமிழக அரசு.

பொது இடங்களில் கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் - தமிழக அரசு.

* 7ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை:

காலையில் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மாலையில் ஆலோசனை.

கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் புதிய கட்டுப்பாடுகள் தொடர்பாக ஆலோசனை.

காணொலி வாயிலாக ஆலோசனை நடைபெற உள்ளது.

கர்நாடகாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்தது.

கர்நாடகாவில் ஒரே நாளில் 50,112 பேருக்கு கொரோனா தொற்று.

கர்நாடகாவில் ஒரே நாளில் 346 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பெங்களூருவில் மட்டும் ஒரே நாளில் 23,106 பேருக்கு கொரோனா பாதிப்பு.

கர்நாடகாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்குகிறது.

* தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள அரசு கொரோனா சிகிச்சைக்கான கட்டணங்களை நெறிப்படுத்த வேண்டும்.

ஒரே மாதிரியான கட்டணமே அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலின் உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும் - மநீம தலைவர் கமல்ஹாசன்.

* சென்னையில் மண்டல வாரியான கொரோனோ பரிசோதனை மையங்கள்

* மே 10 முதல் LIC நிறுவனம் இனி வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்கள் மட்டுமே இயங்கும் என அறிவிப்பு

💥கொரோனா வெருவித் தடுப்பு  பணிகளை கண்காணிக்க  மாவட்ட வாரியாக அலுவலர்கள் நியமனம்

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக குடிமைப் பணியில் அலுவலர் இறையன்பு நியமிக்கப்பட உள்ளார்!

* குடிமைப் பணியில் அலுவலர் உதயசந்திரன் - தமிழக முதல்வர் (காத்திருப்பு) மு.க.ஸ்டாலின் சந்திப்பு

முதலமைச்சரின் தனிச்செயலராக குடிமைப் பணியில் அலுவலர் உதயசந்திரன்  நியமிக்கப்பட வாய்ப்பு என தகவல்

* தொகுதி அ" (Group A) பிரிவில் உள்ள அரசு அலுவலர்கள் மட்டும் அனைத்து நாட்களும் பணிக்கு வர வேண்டும், மற்ற அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர ஆணை

இந்த அறிவிப்பாணை நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிப்பு

💥தமிழ்நாட்டில் இன்று புதிதாக 23,310 பேருக்கு கொரோனா வெருவித் தொற்று கண்டறியப்பட்டுள்ளது

167 பேர் உயிரிழந்துள்ளனர்.

* தனியார் மருத்துவமனைகளில் ICU பிரிவில் மருத்துவம் பெறும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு ₹5,000 நிதி வழங்கப்படும்
அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவிப்பு

*தமிழக அரசின் ஆணையின் படி நாளை முதல் வங்கிகளில் சுழற்சி முறையில் 50% க்கு மிகாமல் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages