அக்னிப்புரட்சி இன்றைய (07.05.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் விலை 25 காசுகள் உயர்ந்து லிட்டர் 93.15 ரூபாய்க்கும், டீசல் விலை 30 காசுகள் உயர்ந்து லிட்டர் 86.65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
* முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா வெருவித் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
* ஆளுநர் மாளிகையில் நடக்கும் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வைகோ, திருமாவளவன், ஈஸ்வரன், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வருகை.
அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டு ராவ் உள்ளிட்டோர் வருகை.
மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தனபால், நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பு.
முதலமைச்சராக பதவியேற்கும் மு.க.ஸ்டாலினின் பதவியேற்பு விழாவில் மநீம தலைவர் கமல் ஹாசன் பங்கேற்பு
* முதலமைச்சராக பதவியேற்கும் மு.க.ஸ்டாலினின் பதவியேற்பு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று கூறி தமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர்களாக துரை முருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி ஆகியோர் பதவியேற்பு.
பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
* மேற்குவங்க தேர்தலுக்கு பிறகான வன்முறை: மம்தா பானர்ஜியிடம் ஆளுநர் அறிவுறுத்தல்
* முதல்வர், 33 அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் பன்வாரிலால். வாழ்த்துகள்
தமிழகத்தின் புதிய முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். விருப்பு வெறுப்பற்ற ஆட்சியை நடத்த வேண்டும் என்று விழைகிறேன்...
* ஸ்டாலின் பதவியேற்பு: துர்கா ஆனந்த கண்ணீர்.
கவர்னர் மாளிகையில் நடந்த ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அவரது மனைவி துர்கா ஆனந்த கண்ணீர் விட்டார்.
ஆளுநர் பன்வாரிலால், 'ஐ எம்.கே.ஸ்டாலின்' என்று ஆங்கிலத்தில் கூற, 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்' என்று தொடங்கி பதவியேற்பு உறுதிமொழியை வாசித்தார்.
* சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்படும் தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறை இதுதான். அண்ணா மற்றும் கலைஞரின் புகைப்படங்கள் அறையில் இடம்பெற்றுள்ளன.
* ஆளுநருடன் தேநீர் விருந்து நிகழ்வில் முதல்வர் முக ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்
மு க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதையொட்டி வாழ்த்து தெரிவித்து மு.க.அழகிரியின் ஆதரவாளர்களால்
மதுரையில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள்.
💥முந்தைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்: தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
முந்தைய அரசிடம் கேட்க 10 கேள்வி இருக்கிறது. கடன்கள் யாரிடம் இருந்து வாங்கப்பட்டது எவ்வளவு வட்டி இதுவரை வழங்கப்பட்டது போன்றவை வெளியிடப்படும்
* முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் மு.க.ஸ்டாலின் முதன் முறையாக தலைமைச் செயலகம் வருகை - காவல்துறை அணிவகுப்பு மரியாதை உடன் வரவேற்பு.
* முதலமைச்சராக பதவி ஏற்ற பின்னர் அடுத்தடுத்து 5 கோப்புகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்
கொரோனா நிவாரணமாக குடும்பத்துக்கு ₹4000,
ஆவின் பால்விலை லிட்டருக்கு ₹3 குறைப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
நாளை முதல் அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம்.
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
மக்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை உருவாக்கி, அதற்கு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
கொரோனா நிவாரணமாக அரிசி அட்டைதாரர்களுக்கு குடும்பத்துக்கு ரூ.4000, இம்மாதமே ரூ.2000 வழங்கப்படும்.
ஆவின் பால்விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு 16 ஆம் தேதியிலிருந்து அமல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்றார் முதல்வர் முக ஸ்டாலின். முதல் கோப்பில் கையெழுத்து இட்டார்!
💥உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்திற்கு சிறப்பு அலுவலராக குடிமைப் பணியில் அலுவலர் சில்பா பிரபாகர் சதீஷ் நியமனம்.
* முதல்வரின் தனிசெயலர்களாக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்:
முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக உதயச் சந்திரன், உமாநாத், அனு ஜார்ஜ், எம்.எஸ் சண்முகம் ஆகிய 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்.
* புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் என்.ரங்கசாமி:
4 வது முறையாக புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்ற ரங்கசாமிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் பாஜகவுக்கு துணை முதல்வர், அமைச்சர்கள் பதவி.
துணை முதல்வர் உட்பட மூன்று அமைச்சர்கள் பதவியேற்பர்.
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையேயான உறவு சுமுகமாக உள்ளது - மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி.
* ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கும் சூழலில் திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்க முன் வராதது ஏன்?-உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி.
மதுரையை சேர்ந்த விரோனிகா மேரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல்.
பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்க கோரி திருச்சி எம்.பி. சிவா எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசின் பதில் என்ன ? - நீதிபதிகள்.
* முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ், சசிகலாவுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
அதிமுகவில் புதிய பதவி நியமனங்கள் மேற்கொள்ள தடை கோரிய மனுவுக்கு பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுச்செயலாளரை நியமிக்கவோ நீக்கவோ தற்போதை கட்சித் தலைமைக்கு அதிகாரம் இல்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* காவல்துறையினருக்கு நோய் தடுப்பு உபகரணம் - ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
* மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கூட்டாளி சோட்டா ராஜன் கொரோனா தொற்று காரணமாக இன்று உயிரிழந்தார்.
* சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு.
* தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம்.
புதிதாக நியமிக்கப்பட்ட தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சட்டசபை எதிர்கட்சித்தலைவரை தேர்வு செய்ய அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெறுகிறது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம்.
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம்.
* கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் ஆலோசனை.
* பொய்யுரை, புகழுரையை கேட்க நான் விரும்பவில்லை.
அதிகாரிகள் உள்ளதை உள்ளபடி முன்வைத்து பிரச்சினைகளை சந்திக்க வேண்டும்- மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்.
தமிழக மக்களின் வாழ்வாதாரம், வாழ்க்கையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.
தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய அவசர, அவசியத் தேவை ஏற்பட்டுள்ளது- முதல்வர் ஸ்டாலின்.
* சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை.
💥கொரோனா இழப்பீடு- பொது வழங்கல் திட்டத்தின் கீழ் ₹2000 வழங்குவதற்கான அரசாணை வெளியீடு
* மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி : (white board) சாதாரண கட்டண நகரப் பேருந்துளுக்கு மட்டுமே பொருந்தும்
இந்த திட்டம் (Moffusil, express ) பேருந்துகளுக்கு பொருந்தாது
- தமிழக அரசின் அரசாணையில் தகவல்
மகளிருக்கு நகர பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து வசதி நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.
* தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 26,465 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 13,23,965 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 6738 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 197 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 15,171 ஆக உயர்ந்துள்ளது.
* 'Sputnik Light' கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த நடுவண் அரசு ஒப்புதல்
💥கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு என முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு.
💥கேரளாவில் வங்கிகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் மட்டுமே செயல்பட வேண்டும் என முதல்வர் பினராயி விஜயன் ஆணை.
💥முழு ஊரடங்கு(2 வாரங்களுக்கு) / மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு குறித்த அறிவிப்பு இன்று இரவு / நாளை காலை வெளியிட வாய்ப்பு.
💥கடும் களேபரத்தில் அதிமுக கட்சி அலுவலகம்!
அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த கட்சி நிர்வாகிகள் குரல் எடப்பாடி பழனிசாமிக்கும் தொண்டர்களின் குரல் பன்னீர்செல்வத்திற்காவும் ஒலிக்கிறது
* ஆக்ஸிஜனை வழங்க கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்:
தமிழகத்திற்கு கூடுதலாக ஆக்சிஜன் ஒதுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
கேரளா, காஞ்சிக்கோடு பகுதியில் இருந்து 40 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அடுத்த 4 நாட்களுக்கு வழங்க வேண்டும்.
தமிழகத்திற்கு கூடுதலாக ஆக்சிஜன் ஒதுக்க கோரி முதன்மை அமைச்சர் நரேந்திர மோதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
கேரளா, காஞ்சிக்கோடு பகுதியில் இருந்து 40 MT ஆக்சிஜனை அடுத்த 4 நாட்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை.
* தமிழக அரசு தலைமை கொறடாவாக திருவிடைமருதூர் எம்.எல்.ஏ கோ.வி செழியன் நியமனம்
நேற்று டெல்டா மாவட்டங்களில் இருந்து அமைச்சரவையில் ஒருவருக்கு கூட வாய்ப்பளிக்க வில்லை என சொந்த கட்சியினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் இன்று கொறடா பதவி தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
* இன்றைய தென் மாநில கொரோனா வெருவித் தொற்று நிலவரம்:
கர்நாடகா - 48,781
கேரளா - 38,460
தமிழ்நாடு - 26,465
ஆந்திரா - 17,188
தெலங்கானா - 5,892
புதுச்சேரி - 1,746
(மொத்தம் - 1,38,532)
தென்மாநிலங்களில் மொத்த உயிரிழப்புகள் - 981.
கர்நாடகத்தில் மட்டும் - 592.
* அதிமுக எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் ஒத்திவைப்பு.
எதிர்க்கட்சித் தலைவர் யார் என்று முடிவு ஏதும் எட்டப்படாததால் அதிமுக எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் வரும் திங்கட்கிழமை காலை 9:30 மணிக்கு ஒத்திவைப்பு.
No comments:
Post a Comment