அக்னிப்புரட்சி இன்றைய (17.05.2021) முக்கிய செய்திகள்
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.94.31 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.88.07 க்கும் விற்பனை.
* குஜராத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவு:
ராஜ்கோட் நகருக்கு தெற்கே 182 கி.மீ., தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவு கோலில் 3.8 ஆக பதிவான நிலநடுக்கத்தால் சேதம் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை.
டாக்டே புயல் தற்போது மிரட்டி வரும் வேளையில் இன்று அதிகாலை அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
* தமிழகம் முழுவதும் இன்று முதல்
மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இ-பதிவு கட்டாயம்:
இ- பதிவு முறை, 'சாப்ட்வேர்' மூலம் இயங்குவதால், விபரங்களை பதிவு செய்தவுடன், உடனுக்குடன் ரசீது வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனால் நெருங்கிய உறவினர்களின் இறப்பு போன்ற, அவசர தேவைக்காக பயணிப்போர், உடனுக்குடன் விண்ணப்பித்து பதிவு பெறலாம்.
* இ-பதிவு செய்வது எப்படி?
இ - பதிவு முறைக்காக உருவாக்கப்பட்டுள்ள, eregister.tnega.org என்ற இணையதளத்தில் மொபைல் எண்ணை பதிவு செய்து, மொபைல் போன் எண்ணுக்கு வரும், 'ஓ.டி.பி.,'யை பதிவு செய்ய வேண்டும்.
பின்னர் வரும் விண்ணப்பத்தில் பயண விபரங்கள், அடையாள அட்டை (ஆதார், ஓட்டுனர் உரிமம்) ஏதாவது ஒன்று, மற்றும் பயணத்திற்கான ஆவணங்கள், வாகனத்தின் எண் போன்றவற்றை, பதிவு செய்ய வேண்டும்.
அனைத்து விபரங்களையும் பதிவு செய்தவுடன், அளித்த தகவல்கள் சரிபார்க்கப்பட்டு, உடனுக்குடன் ரசீது வழங்கப்படும்.
ரசீதில், வாகனத்தின் எண், பயணி பெயர், பயணத்திற்கான காரணம், இடம் உள்ளிட்ட தகவல் இருக்கும்.
இதை பி.டி.எப்., வடிவில் பதிவிறக்கம் செய்து கொண்டு, பயணம் மேற்கொள்ளும்போது போலீசாரிடம் காண்பிக்க வேண்டும்.
💥காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துளசி அய்யா வாண்டையார் வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 93. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்த கல்வி பெற பெரும் புரட்சி செய்தவர் இவர்.
* எனது கோரிக்கையை ஏற்று தமிழகத்திற்கு ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டை அதிகரித்த பிரதமர் மோடிக்கு நன்றி
கொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு பேருதவியாக இருக்கும் -எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி.
* கொரோனா சிகிச்சைக்காக 2DG எனும் புதிய மருந்து வெளியீடு.
தண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ 2DGvகொரோனா மருந்து அறிமுகம் செய்யப்பட்டது.
2DG கொரோனா மருந்தை தயாரித்து மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் 2DG மருந்தை அறிமுகம் செய்து வைத்தார்.
2DG கொரோனா மருந்தைத் தண்ணீரில் கலந்து நோயாளிகள் குடிக்கலாம்.
கொரோனா நோயாளிகள் விரைவில் அதிலிருந்து மீள முடியும் என அறிவிப்பு.
* புதிய கல்வி கொள்கை தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை.
தமிழகத்தின் சார்பில் அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை.
புதிய கல்விக்கொள்கை ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது தமிழக அரசு.
* விழுப்புரத்தில் காவல்துறையில் பணிபுரியும் கர்ப்பிணி காவலர்களுக்கு சிறப்பு விடுப்பு தந்து எஸ்.பி ஆணை.
விழுப்புரத்தில் காவல்துறையில் பணிபுரியும் கர்ப்பிணி காவலர்களுக்கு சிறப்பு விடுப்பு தந்து எஸ்.பி ஆணையிட்டுள்ளார்.
கர்ப்பிணி காவலர்களை கொரோனாவில் இருந்து காக்க மறு உத்தரவு வரும் வரை சிறப்பு விடுப்பு தந்து உத்தரவிடப்பட்டுள்ளது.
* முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாயும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாதம் ஊதியம் வழங்கப்படும் - அதிமுக.
*:தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களின் பணிகளும் மறு உத்தரவு வரும் வரை நிறுத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் அறிவிப்பு.
* கும்பகோணம் அருகே யுடியூப் வீடியோக்களை பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து அதை வெடிக்கச் செய்து வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்ட இரு சிறுவர்கள் கைது.
கைதானவர்களில் ஒருவர் ஏற்கனவே சிறுவர் சீர்திருத்தபள்ளியில் இருந்தபோது, பீகாரைச் சேர்ந்த சிறுவனுடன் பழகி நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது குறித்து கற்றுள்ளதாக போலீஸ் தகவல்.
* கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் குறித்த விவரங்களை நேர்மையாக வெளியிட வேண்டும் -சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.
கொரோனாவில் பலியானவர்களின் உடல்களை தடுப்பு விதிகள் பின்பற்றி விரைந்து அகற்ற வேண்டும் - நீதிமன்றம்.
பலியானவர்களின் உடல்களை கண்ணியமாக நடத்த வேண்டும் - நீதிமன்றம்.
*:திருமணத்திற்காக இ-பதிவு விண்ணப்பிக்க தற்காலிக தடை.
திருமணத்திற்காக அதிகம் பேர் விண்ணப்பித்து பயணிக்கின்றனர்; இதனால் தற்காலிகமாக இ-பதிவு இணையதளத்தில் இருந்து அது நீக்கப்பட்டுள்ளது - அதிகாரிகள் விளக்கம்.
* நான் தினமும் மாட்டு சிறுநீரை குடிக்கிறேன். அதனால் எனக்கு கொரோனா இல்லை" - பாஜக எம்.பி. பிரக்யா சிங் சர்ச்சைப் பேச்சு!
* புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கொரோனா பாதிப்பால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், குணமடைந்து வீடு திரும்பினார்; ஒரு வாரம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்!
காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவரை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி - சத்திய மூர்த்தி பவனில் பல மணி நேரமாக ஆலோசனை நடந்தும் முடிவு எட்டப்படவில்லை!
* உளுந்தூர்பேட்டையை சேர்ந்த சித்த மருத்துவர் அருண்குமார் (27) கொரோனாவால் உயிரிழப்பு!
* கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் குறித்த விவரங்களை நேர்மையாக வெளியிட வேண்டும்; சடலங்களை தடுப்பு விதிகளை பின்பற்றி விரைந்து அகற்ற வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!
தமிழகத்தில் புதிய அரசு கடந்த 7ம் தேதிதான் பதவியேற்றுள்ளது; எனவே அரசை குறை கூற முடியாது - தடுப்பூசிகள் மற்றும் மருந்து ஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து!
* ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து ரயில் மூலம் 5 டேங்கர் லாரிகளில் 78.82 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இன்று தூத்துக்குடி வந்தன. தென்மாவட்ட மருத்துவமனைகள், ஆக்சிஜன் நிரப்பும் மையங்கள், தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும்!
* மே 23 அதிகாலை 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணிகளுக்காக அனைத்து வங்கி NEFT சேவைகளும் நிறுத்தி வைப்பு - இந்திய ரிசர்வ் வங்கி!
இணைய வழி கல்வியே தற்போது முதன்மையான பாட கற்பிப்பு முறையாக உள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தடையின்றி இணையவசதி கிடைக்க, அனைத்து பள்ளிகளையும் Bharat Net திட்டத்தில் இணைக்க வேண்டும்.
நடுவண் கல்வி அமைச்சர் உடனான கலந்தாய்வு கூட்டத்தில் கல்வித்துறை செயலாளர்கள் வலியுறுத்தல்.
💥நாங்கள் கூட்டத்தை புறக்கணிக்கவில்லை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நடுவண் கல்வி துறை அமைச்சகம் மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் நடத்தும் கலந்தாய்வு கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்தாக ஊடகங்களில் செய்தி பரவிய நிலையில் புறக்கணிப்பு என்ற சொல்லுக்கு பதிலாக பங்கேற்க வில்லை என்று பயன்படுத்துதலே பொருத்தமானது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
* கொரோனா முதல் அலையில் கற்றுக்கொண்ட அனுபவங்கள் மூலம் கொரோனா தொற்று மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்
:முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
💥தமிழகத்தில் இன்று புதிதாக 33,075 பேருக்கு கொரோனா வெருவித் தொற்று உறுதி
335 பேர் உயிரிழப்பு
20,486 பேர் மீண்டனர்
*:Indian Forest Service ம் முதலமைச்சரின் கீழ் உள்ள துறையில் சேர்க்கப்பட்டுள்ளது
* காலை 10 மணி வரை கடைகள் திறந்திருப்பதால் வியாபாரம் குறைவாகவே நடைபெறுகிறது
கடைகள் திறந்திருக்கும் நேரத்தை காலை 8 மணி முதல் 12 வரை என மாற்ற வேண்டும்
: முதல்வரின் தனிச்செயலாளரிடம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை
💥8 மருத்துவ கல்லூரி முதல்வர்கள் பணியிட மாற்றம்
கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி முதல்வராக சாந்திமலர் நியமனம்
* 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.
சேலம், தர்மபுரி, கடலூர், திருச்சி, மதுரை ஆட்சியர்கள் மாற்றம்.
* கேரளாவில் புதிதாக 21,402 பேருக்கு கொரோனா வெருவி பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் 87 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் ஏன் கொரோனா உயிரிழப்புகள் குறைத்து காட்டப்படுகிறது?- சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி
கொரோனா தொற்றுக்குள்ளானோர் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கையைத் திட்டமிட்டுக் குறைத்துக் காட்டுவதாகத் தமிழக அரசின் மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி
* குடிமைப் பணியில் அலுவலர் மரு. அல்பி ஜான் வர்கீசு பெருநகர சென்னை மாநகராட்சியின் (கொழுமை) துணை ஆணையராக பணியிடமாற்றம்
*:போக்குவரத்து வாகன வரி செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
* முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கொரோனா நிவாரண நிதிக்கு சன் குழும தலைவர் கலாநிதி மாறன் ரூ.10 கோடி வழங்கினார்.
💥ரெம்டெசிவிர் மருந்தை பெறுவதற்கான இணையதள முகவரியை அறிவித்தது தமிழக அரசு
தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக ரெம்டெசிவிர் மருந்து அரசு சார்பாக வழங்கப்படும் என நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
* எதிர்பார்த்த பயனை அளிக்காததால் Plasma Therapy மருத்துவ முறையை கொரோனா வெருவித் தடுப்பு மருத்துவ முறைகளில் இருந்து நீக்கியது நடுவண் அரசு
No comments:
Post a Comment