அக்னிப்புரட்சி இன்றைய (23.05.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (23.05.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (23.05.2021) முக்கிய செய்திகள்.

💥தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வெருவித் தொற்று மருத்துவத்துக்கு  கட்டணத்தை இறுதி செய்து தமிழக அரசு ஆணை.

* சென்னையில் பெட்ரோல் விலை 15 காசுகள் உயர்ந்து லிட்டர் 94.86 ரூபாய்க்கும், டீசல் விலை 25 காசுகள் உயர்ந்து லிட்டர் 88.87 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

* இன்று காலை கொத்தவால் சாவடியில் இந்த நிலை. பொறுப்பற்ற அரசின் தவறான முடிவால் இந்த நிலை. காய்கறி மற்றும் மளிகை கடைகளுக்கு தினமும் மூன்று அல்லது நான்கு மணி நேரம் அனுமதி கொடுப்பதே சிறந்தது. காய்கறி,மளிகை விலை தாறுமாறாக ஏறியுள்ளது. திட்டமிடாத ஊரடங்கால் மக்கள் அவதியுறுகிறார்கள்.
- நாராயணன் திருப்பதி, பாஜக

* தடுப்பூசி தட்டுப்பாடாக உள்ள நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கிவைத்துள்ளார் - அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு.

* நாளை முதல் ஒரு வாரம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு - மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.

* பள்ளி, கல்லூரி இறுதியாண்டு தேர்வு- ஆலோசனை:

ஒத்திவைக்கப்பட்ட +2 பொதுத்தேர்வு, சிபிஎஸ்இ பொதுத்தேர்வு, நுழைவுத் தேர்வை எப்போது நடத்துவது என்பது தொடர்பாக மத்திய அரசு காணொலியில் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

* அனைத்து மாநில கல்வித்துறை அமைச்சர்கள், கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ராஜ்நாத் சிங் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் ரமேஷ்பொக்ரியால், ஸ்மிருதி இராணி, பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

* டெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய இருந்த நிலையில் நீட்டிப்பு.

கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தால், படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் - அரவிந்த் கெஜ்ரிவால்.

* உயர்த்தப்பட்ட காய்கறி விலைகளை உடனடியாக குறைக்க வேண்டும்: தமிழக அரசு

காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை

அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக அரசு

* மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை:

கொரோனா நிவாரண தொகை அனைத்து மக்களுக்கும் முழுமையாக சென்றடைந்ததா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

காய்கறி, பழங்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் தடையின்றி கிடைப்பதை உள்ளாட்சித்துறை, வேளாண் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கைகள் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதிகார மோதல்கள் இல்லாமல் ஒருங்கிணைந்து செயல்பட்டு கொரோனா எனும் பெருந்தொற்றை வீழ்த்த வேண்டும்.

எனது முயற்சிகளால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது என தலைநிமிர்ந்து நீங்கள் சொல்லும் அளவுக்கு பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்; உங்களால் அது முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு - மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

* ஒரு வார ஊரடங்கால் கிடைக்கும் நன்மையை இரு நாள் தளர்வு தகர்த்து விட்டது - மருத்துவர் இராமதாசு அய்யா

நேற்றும், இன்றும் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு தளர்வுகள் அபத்தமானவை என்றும் ஒரு வார ஊரடங்கால் கிடைக்கும் நன்மையை இரு நாள் தளர்வு தகர்த்து விட்டது என்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா தெரிவித்துள்ளார்.

* மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை அறிவிப்பு:

மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு.

1.72 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 வழங்கப்படும் - முதலமைச்சர்.

நிவாரண தொகை மீனவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

* கட்சியினருக்கு  அதிமுக எச்சரிக்கை;
தலைமையின் கட்டளையை மீறி செயல்படும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" - அதிமுக தலைமை எச்சரிக்கை.

அதிமுகவின் அரசியல் பயணம், கட்சியின் நிர்வாகத்தை விமர்சிப்பது, தேவையற்ற கருத்து பரிமாற்றங்களில் ஈடுபடக்கூடாது.

யாராவது அத்தகைய செயல்களில் ஈடுபட்டால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவர் - ஓபிஎஸ், ஈபிஎஸ் எச்சரிக்கை

அதிமுகவில் தனிமனிதர் துதி பாடலுக்கு இடமில்லை.

அதிமுக தலைவர்களின் பெயரில் பேரவை ஆரம்பிப்பது, தலைவர்களின் படங்களை சிதைப்பது கூடாது - ஓபிஎஸ், ஈபிஎஸ்.

* கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு.

ரூ.12 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார்.
ஆக்ஸிஜனுடன் கூடிய 100 படுக்கைகளையும் திறந்து வைக்கிறார்.

* கடலூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட தமிழக துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை ‘யாஸ்’ புயலாக வலுவடையும் நிலையில் புயல் கூண்டு ஏற்பட்டுள்ளது. 

* 25ஆம் தேதி முதல் தொழிற்சாலை பணியாளர்கள் இரு சக்கர வாகனங்களில் பணிக்கு சென்று வர அனுமதி இல்லை - தமிழக அரசு.

பணியாளர்களை பணிக்கு அழைத்து வர நான்கு சக்கர வாகனங்களை ஏற்பாடு செய்ய தொழிற்சாலைகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்.

இ-பதிவு முறையில் வழங்கப்பட்ட பாஸ்களின் அடிப்படையில் நான்கு சக்கர வாகனங்களை காவல்துறையினர் அனுமதிப்பர் -  தமிழக அரசு.

* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 35,483 பேருக்கு கொரோனா உறுதி.

தமிழகத்தில் மொத்த பாதிப்பு 18,42,344 ஆக உயர்வு.

இன்று ஒரே நாளில் 422 பேர் உயிரிழப்பு.

* தமிழகத்திற்கு நீட் தேர்வு கூடாது, +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்த வேண்டும்.

மாநில கல்வி அமைச்சர்களுக்கான கூட்டத்தில், உயர்கல்வி அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்.

+2 மதிப்பெண் அடிப்படையில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு சேர்க்கை நடத்த வேண்டும்.

+2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை என்ற தமிழக அரசின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை- அரசு விளக்கம்.

* பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி நன்கொடை வந்துள்ளது. மனமுவந்து நன்கொடை அளித்தவர்களுக்கு நன்றி - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

நிவாரண நிதியிலிருந்து முதற்கட்டமாக ஆக்சிஜன் கண்டெய்னர்கள் வாங்க 50 கோடியும், கொரானா பரிசோதனை செய்யும் ஆர்.டி.பி.சி.ஆர் கிட்களை வாங்க 50 கோடியும் ஒதுக்கீடு - முதல்வர் ஸ்டாலின்.

* தமிழகத்திற்கான ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு அதிகரிப்பு:

மே 30 வரையிலான காலகட்டத்திற்கு 3.5 லட்சத்தில் இருந்து 5.6 லட்சமாக அதிகரித்தது மத்திய அரசு.

அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதலாக 22.17 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகளை ஒதுக்கியது மத்திய அரசு.

* முழு ஊரடங்கு காலத்தில் பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்களுக்கான நேரத்தை காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை என வரையறுக்க தமிழக  அரசுக்கு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் கோரிக்கை.

* காங்கிரஸ் கட்சியின் தமிழக சட்டமன்ற குழுத்தலைவராக  செல்வப்பெருந்தகை தேர்வு.

* எழுவர் விடுதலை: எதிர்ப்பாளர்களுக்கு பழ. நெடுமாறன் கண்டனம்

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :

எழுவர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் தேவையற்ற வகையில் நீண்ட காலத் தாமதம் செய்யும் பிரச்னையில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என்று கேட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருப்பதை வரவேற்கிறேன். ஆனால் தமிழகத்தில் உள்ள சில காங்கிரசுத் தலைவர்கள் இதற்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

30 ஆண்டு காலத்திற்கும் மேலாக சிறையில் வாடும் எழுவரும் உண்மையில் அந்தக் கொலையில் தொடர்பில்லாதவர்கள் என்பதை இந்த வழக்கை விசாரித்த சி. பி. ஐ-யின் உயர் அதிகாரிகளாக இருந்த ரகோத்தமன், தியாகராசன் ஆகிய இருவரும் புலனாய்வில் பல தவறுகள் இழைக்கப்பட்டதாகவும் குளறுபடிகள் நேர்ந்ததாகவும் பதவியிலிருந்து ஓய்வு பெற்றப் பிறகு பகிரங்கமாக அறிவித்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகளுக்கு தலைமை தாங்கிய நீதியரசர் கே. டி. தாமஸ் ஓய்வு பெற்ற பிறகு “இந்தியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் கொலை வழக்கில் யாரும் தண்டிக்கப்படாமல் இருந்துவிடக் கூடாது என்று நாங்கள் கருதியதால் இவர்களை நாங்கள் தண்டித்தோம்” என தாங்கள் இழைத்தத் தவறை வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டார். இந்த உண்மைகள் எவற்றையும் புரிந்து கொள்ளாமலும், காங்கிரசுத் தலைவராக இருந்த ராகுல் காந்தி எழுவரை விடுதலை செய்வதில் தனக்கு எத்தகைய எதிர்ப்பும் இல்லை என அறிவித்தப் பிறகும் மனித நேய உணர்வு சிறிதளவு கூட இல்லாமல் தமிழக காங்கிரசுத் தலைவர்கள் இவ்வாறு அறிக்கைகள் வெளியிடுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சிறைவாசிகளை நீதிமன்றங்கள்தான் விடுதலை செய்ய வேண்டுமென இவர்கள் கூறுவது வரலாறு அறியாத போக்காகும்.

ஏற்கெனவே காந்தியடிகளின் நூற்றாண்டு விழாவின் போதும் இந்தியா விடுதலை பெற்ற பொன் விழாவின் போதும் இந்திய குடியரசின் பொன் விழாவின் போதும் இந்தியா முழுவதிலும் நீண்ட காலமாகச் சிறையிலிருந்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள் அனைவரையும் காங்கிரசு அரசுகள் உட்பட பல்வேறு கட்சி அரசுகளும் விடுதலை செய்துள்ளன. எனவே குடியரசுத் தலைவர் இந்தப் பிரச்னையில் உடனடியாகத் தலையிட்டு எழுவர் விடுதலை குறித்த பிரச்னையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி தமிழக ஆளுநருக்கு அறிவுறுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

* கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பாக நடமாடும் ஊர்திகள் மூலமாக வழங்கப்படும் காய்கறிகள் விலைப்பட்டியல்.

* சென்னையில் நாளை முதல் 2635 நடமாடும் ஊர்திகள் மூலம் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி   தெரிவித்துள்ளது

நடமாடும் ஊர்திகளின் வருகை மற்றும் கூடுதல் விலை தொடர்பாக 9499932899 என்ற கைப்பேசியிலும் 044-45680200 என்ற தொலைபேசிலும் தெரிவிக்கலாம்

* பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தியே ஆக வேண்டும் சும்மா, All Pass போட்டுவிட்டு போக முடியாது

தேர்வு நடத்துவது தொடர்பாக கலந்தாய்வு மேற்கொண்டோம்.

கொரோனா பாதிப்பு குறைந்ததும் கண்டிப்பாக தேர்வு நடைபெறும்.

நடுவண் அமைச்சர்களுடனான கூட்டத்துக்குப் பின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  பேட்டி.

💥தொழிற்சாலைகளுக்கு செல்லும் பணியாளர்கள் தொழிற்சாலைகள் ஏற்பாடு செய்யும் ஊர்திகளில் மட்டுமே பணிக்கு சென்று வர வேண்டும்!

💥 மே 30 வரையில்  தமிழகத்தில் உள்ள அனைத்து (SBI, தேசிய, தனியார்) வங்கிக் கிளைகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும்! ஊழியர்கள் வேலை நேரம் மாலை 4.00 வரை மட்டுமே! : மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு

மிக அத்தியாவசிய வங்கி சேவைகளான :
1. பணம் வைப்பு மற்றும் எடுப்பு,
2.  காசோலைகள் தொடர்பு பரிமாற்றம்
3. பணப் பட்டுவாடா மற்றும்
4. அரசு வாணிப பரிமாற்றங்கள்
மட்டுமே  நடைபெறும் எனவும் வேறு பணிகளுக்கு வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வர வேண்டாம் எனவும் அறிவிப்பு.

💥 புதுச்சேரியில் தற்போது செயலில் உள்ள ஊரடங்கை மே 31ம் தேதி வரை நீட்டித்து துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆணை.

💥  விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசல், விழுப்புரம் நகரமே ஸ்தம்பித்து போனது திருவிழா போல் காட்சியளிக்கும் மக்கள் கூட்டம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages