அக்னிப்புரட்சி இன்றைய (28.05.2021) முக்கிய செய்திகள்.
* கேரளாவில் தென்மேற்கு பருவமழை வருகிற 31ம் தேதி துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது - வானிலை ஆய்வு மையம் தகவல்
* 18 - 45 வயதினருக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக ₹85.47 கோடி மதிப்பீட்டில் 26 லட்சம் தடுப்பூசிகள் வாங்கப்பட்டுள்ளது - தேனியில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.95.28 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.89.39 க்கும் விற்பனை.
* மேலும் 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்:
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை கூடுதல் தலைமை செயலாளராக ஷிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உயர்கல்வித்துறை செயலாளராக கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
கால்நடை பராமரிப்பு, பால்வள மற்றும் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலராக ஜவஹர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சர்க்கரை உற்பத்தி துறை ஆணையர்/கூடுதல் தலைமை செயலாளராக ஹர்மந்தர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை;
* கொரோனா வெருவித் தொற்று அதிகமுள்ள கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்த மூத்த குடிமைப் பணியில் அலுவலர்களை கண்காணிப்பு அதிகாரிகளாக நியமித்தது தமிழக அரசு
கோவைக்கு வணிக வரித்துறை செயலாளர் சித்திக் நியமனம்.
திருப்பூருக்கு வேளாண் துறை செயலாளர் சமயமூர்த்தி நியமனம்.
ஈரோட்டிற்கு நில அளவை மற்றும் நில வரித்திட்ட இயக்குநர் செல்வராஜ் நியமனம்.
* ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் 30 நாட்கள் பரோலில் விடுவிப்பு.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளனை 30 நாட்கள் பரோவில் விடுவிக்க உத்தரவிட்டிருந்தார்.
புழல் சிறையில் இருந்து ஜோலார்பேட்டை இல்லத்திற்கு பேரறிவாளன் இன்று அழைத்து செல்லப்படுகிறார்.
* கொரோனா தொற்று என்றால் என்ன என்பதே மத்திய அரசுக்கு புரியவில்லை. கொரோனாவை புரிந்து கொள்ள மத்திய அரசு தவறிவிட்டது - மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
கொரோனா 2-வது அலை தாக்கும் என்று ஏற்கனவே நான் எச்சரித்தேன்.
ஆனால், எனது எச்சரிக்கையை மத்திய அரசு ஏளனம் செய்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
* தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் மருத்துவமனைகள் / முகாம்கள் பட்டியல்.
https://stopcorona.tn.gov.in/vaccine_center.php
Tamil Nadu Corona Vaccine Centers. District wise List.
* கோவையில் உள்ள 15 அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்கப்படும் என அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் இராமச்சந்திரன் அறிவிப்பு. அதற்கான செலவு முழுவதையும் திமுக ஏற்கும் எனவும் அறிவிப்பு.
* கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்தான Amphotericin B 80,000 ஊசிகள் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. அதிகம் பாதிக்கப்பட்டுள்ள குஜராத் மாநிலத்துக்கு 17330 அளிக்கப்பட்டுள்ளது.
*:தமிழக அரசின் மெத்தனத்தால் இந்தியாவிலேயே கொரோனா வெருவித் தொற்றால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. - சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
கொரோனா இறப்பை குறைத்து காட்டுகிறார்கள், இறப்பு விவரத்தை தமிழக அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
* முழு ஊரடங்கிற்கு முந்தைய தளர்வில் 6 லட்சம் பேர் ஊரகப் பகுதிகளுக்கு பயணம் செய்ததால் தொற்று அதிகரித்துள்ளது. தமிழக அரசின் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
💥பலத்த எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து கவிஞர் வைரமுத்துவுக்கு உயரிய இலக்கிய விருது வழங்குவதாக அறிவித்திருந்த நிலையில் அது குறித்து ONV பண்பாட்டு அகாதமி மீளாய்வு செய்ய உள்ளதாக அறிவிப்பு.
* பள்ளிக் கல்வித்துறை இயக்குநராக இருந்து, பொறுப்பில் இருந்து விலகிய கண்ணப்பனுக்கு புதிய பதவி.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில கூடுதல் திட்ட இயக்குனராக கண்ணப்பன் நியமனம்
* 43 வது GST குழு கூட்டம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கியது. கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு பிறகு GST குழு கூட்டம் கூடுகிறது.
* பத்திரப்பதிவில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக சேகர் ரெட்டி, துணை ஆட்சியர் உள்பட 11 பேர் மீது வேலூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப்பதிவு
காட்பாடியில் 5.27 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்ததில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு
💥கருப்பு பூஞ்சை நோய்யை கட்டுப்படுத்தவும், சிகிச்சை தொடர்பான நடவடிக்கையை மேற்கொள்ளவும் மாநில அளவில் பணிக்குழு அமைத்து தமிழக அரசு ஆணை.
* முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை பலாத்காரம் செய்ததாக துணை நடிகை புகார்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் துணை நடிகை சாந்தினி புகார்.
* கொரோனாவிற்கு தண்ணீரில் கலந்து குடிக்கும் 2 DG மருந்து பாக்கெட்டிற்கு விலை நிர்ணயம்.
கொரோனா மருந்து பாக்கெட் ஒன்றின் விலை ரூ.990ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2 DG மருந்தினை டிஆர்டிஓ மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேப் இணைந்து தயாரித்துள்ளனர்.
* கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30 ம் தேதி வரை சர்வதேச விமான சேவைக்கு தடை:
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை சர்வதேச விமான சேவைக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சர்வதேச சரக்கு விமான போக்குவரத்து சேவைக்கு தடையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* ஜூன் 30 வரை ஊரடங்கை அமல் படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை...
* தென்மேற்கு பருவமழை மே 31-ல் தொடங்குகிறதாம்.. !
இந்த ஆண்டுக்கான தென் மேற்கு பருவமழை மே 31-ம் தேதி முதல் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* கோவிட்19 ஏப்ரல்,மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் தொடர் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
* முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் மீது நடிகர் சாந்தினி பாலியல் குற்றச்சாட்டு
திருமணம் செய்வதாக கூறி,
5 ஆண்டுகள் ஏமாற்றி கருவை கலைக்க வைத்து அடித்து துன்புறுத்தினார் என காவல்துறையில் குற்றச்சாட்டு.
*:அமெரிக்க இந்திய நட்பு கூட்டணி சார்பில் தமிழகத்துக்கு 486 ஆக்சிஜன் செறிவூட்டிகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது
சேலம், திருப்பூர், ஈரோடு மாவட்டத்துக்கு தலா 50 செறிவூட்டிகளும், மீதமுள்ள 336 செறிவூட்டிகள் கோவை மாவட்டத்துக்கும் அனுப்பிவைக் கப்படவுள்ளது
* ஹிட்லரின் நாசி ஆட்சியை போன்று தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சியில் பார்ப்பனர்கள் குறி வைக்கப்படுகின்றனர் :- நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக ஆளுநருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கடிதம்
🛑 ஜூன் மாதம் முதல் 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ரேஷன் கடைகளில் பெறலாம் - முதலமைச்சர்
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் - முதலமைச்சர்
* தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் - 07.06.2021 வரை ஊரடங்கு நீட்டிப்பு.
நடமாடும் மளிகை விற்பனைக்கு அனுமதி
அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்து வரும் காய்கறி, பழங்கள் விற்பனை தொடரும் - மு.க.ஸ்டாலின்
வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் மளிகை பொருட்களை விற்கலாம் - மு.க.ஸ்டாலின்
மளிகை பொருட்களை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை விற்க அனுமதி
ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் மளிகை பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க அனுமதி
* முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான வீட்டுக்கு அருகில் அமைக்கப்படும் கோவிட் தடுப்பூசி மையங்களுக்கான வழிகாட்டுதல்கள்!
கோவிட்-19 தடுப்பூசி பாதுகாப்பானது.!
* 1.1.2017 முதல் 31.12.2019 வரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு 25.8.21 வரை புதுப்பிக்க அவகாசம் வழங்கி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
* தளர்வுகளற்ற ஊரடங்கில் காலை 10.00மணி வரை கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும். -தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள்.
கொரோனா நோய் பெருந்தொற்றினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அமுல்படுத்தப்பட்டும் நோய் பரவல் குறையாத காரணத்தால் படிப்படியாக ஊரடங்கை அதிகப்படுத்தி வந்த நிலையில் தற்போது தளர்வுகளற்ற ஊரடங்கினை ஜூன் 7ம் தேதி வரை நீட்டித்துள்ள தமிழக அரசு சிறு, குறு, நடுத்தர, நடைபாதை வியாபாரிகள் அவர்களை சார்ந்திருக்கும் தொழிலாளர்கள் என தேசத்தின் பொருளாதாரத்தை தாங்கி பிடிப்பவர்கள் குறித்து கவனிக்க தவறியிருப்பது கவலையளிக்கிறது.
ஏற்கனவே கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிலவி வரும் அசாதாரண சூழலால் வணிகப் பெருமக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து, கடை வாடகை, வங்கி கடன் என பல்வேறு இன்னல்களில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்நிலையில் மீண்டும், மீண்டும் தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பித்து கடைகளை திறக்க அனுமதி மறுப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்.
எனவே தளர்வுகளற்ற ஊரடங்கில் சிறு, குறு, நடுத்தர, நடைபாதை வியாபாரிகள் காலை 10மணி வரை கட்டுப்பாடுகளுடன் வணிகம் செய்ய அனுமதிக்க வேண்டும். அல்லது அவர்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு கடை வாடகையை ஈடு செய்யும் வகையில் கொரோனா நோய் தொற்று காரணமான தளர்வுகளற்ற ஊரடங்கு முடியும் வரை அவர்களுக்கு சிறப்பு நிதி வழங்கவும், கடைகளுக்கான மின்கட்டணம் செலுத்துவதில் இருந்து முழுமையான விலக்கு அளிக்கவும் தமிழக அரசு முன் வர வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
சு.ஆ.பொன்னுசாமி
(நிறுவனத் தலைவர்)
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.
28.05.2021 / இரவு 7.02மணி.
* தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்:
புதிய பாதிப்பு - 31,079 பேர்
குணமடைந்தோர்-31,255 பேர்
உயிரிழப்பு - 486 பேர்
No comments:
Post a Comment