அக்னிப்புரட்சி இன்றைய (31.05.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் விலை 25 காசுகள் உயர்ந்து லிட்டர் 95.76 ரூபாய்க்கும், டீசல் விலை 25 காசுகள் உயர்ந்து லிட்டர் 89.90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
💥நேரலையில் பகிரப்படும் நோயாளிகளின் உடல்நிலை விவரங்கள்!: நடவடிக்கை எடுக்குமா அரசு?
கடந்த ஆண்டு கொரோனா பாதித்த நபர்களின் தொலைபேசி எண்ணை பொதுவில் வெளியிட்டு சர்ச்சை எழுந்த நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு மருத்துவம் பெற்று வரும் உள்நோயாளிகளின் உடல்நிலை விவரத்தை பொதுமக்களுக்கு டிஜிட்டல் பலகை மூலமாக "சீரான நிலை", "கவலைக்கிடம்", "மிகவும் கவலைக்கிடம்" என Cricket Match Score / தேர்தல் முன்னிலை விவரம் போல வெளியிட்டு வருவது பலருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது.
* டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றம் உள்ளடங்கிய மத்திய விஸ்டா கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு.
மத்திய விஸ்டா கட்டுமான பணிகளுக்கு தடைவிதிக்க கோரிய மனுதாரர்களுக்கு ரூ 1 லட்சம் அபராதம்.
* இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்!
துபாயில் நடைபெறும் ஆசிய குத்துச்சண்டை போட்டியில் (ASBC) போட்டியில் 75 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பூஜாராணி, மாவ்லோனோவாவை(உஸ்பெகிஸ்தான்) 5-0 என்ற கணக்கில் வென்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
💥 அண்ணா பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் தேர்வு!
விருப்பமுள்ள, தகுதியான நபர்கள் annauniv.edu இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பின் நிரப்பி அதை nodalofficer2021@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தேடல் குழு அறிவிப்பு.
* பாடப்புத்தகங்கள் Door Delivery!
புதிய கல்வியாண்டுக்கான (2021-22) பாடப்புத்தகங்கள் ஆயத்தாக உள்ளன.
3.8 கோடி பாடப்புத்தகங்களை ஆசிரியர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று வழங்க பாடநூல் கழகம் ஏற்பாடு
இணைய வழி வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் முதன்மை தேவை என்பதால், வழங்கலை தீவிரப்படுத்த உள்ளது அரசு.
* அதிமுகவை கைப்பற்ற நினைக்கும் சசிகலாவின் எண்ணம் ஈடேறாது - கே.பி.முனுசாமி.
அதிமுக தொண்டர்கள் யாரும் சசிகலாவிடம் பேசவில்லை. அவர் பேசியது அமமுக தொண்டரிடம்.
அதிமுகவை திசை திருப்பி தொண்டர்களை குழப்ப நினைக்கிறார் சசிகலா.
சசிகலாவின் குடும்பம் அதிமுகவிலிருந்து விலகி இருந்தால்தான் ஜெயலலிதா ஆன்மா சாந்தியடையும் - அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி.
💥கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி குழந்தை திருமணம்: தமிழக அரசு எச்சரிக்கை.
* 2021 இறுதிக்குள் இந்தியாவில் தகுதியான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்.
பைசர் உள்ளிட்ட தடுப்பூசி நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.
இதில் வெற்றிகண்டால் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான காலக்கெடு குறையும் - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்.
💥 உலக புகையிலை ஒழிப்பு தினம்" 31.05.2021 இன்றே புகையிலை பழக்கத்தை விட்டு விலகுவேன்" என்று உறுதிமொழி எடுங்கள்.
* கொரோனா சிகிச்சைக்கான ஆயுர்வேத மருந்துக்கு ஆந்திர மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நெல்லூர் அருகே கிருஷ்ணபட்டினத்தில் ஆனந்தய்யா என்பவர் தயாரித்து வழக்கும் ஆயுர்வேத மருந்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
பக்க விளைவுகள் இல்லை என நிரூபணமானதால் கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்து தர ஆந்திர அரசு ஒப்புதல் தந்துள்ளது.
💥 குடும்ப கட்டுப்பாடு விதிமுறைகளை தளர்த்தியது சீனா:
3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீன அரசு அனுமதி.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா.
பிறப்பு விகிதம் குறைந்ததால் சீன அரசு நடவடிக்கை.
* பங்குத்தந்தை ஜெகத் கஸ்பார் என்பவர் அமெரிக்க FBI போலீசால் தேடப்படும் LTTE குற்றவாளி என ஆதாரத்தை வெளியிட்டார் சுப்ரமணிய சுவாமி MP
* கோவில் பணியில் ஈடுபட்டுள்ள அர்ச்சகர்கள் உள்ளிட்ட கோவில் பணியாளர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு.
ரூ.4,000 உதவித்தொகை, 10 கிலோ அரிசி, 15 வகை மளிகைப்பொருட்கள் வழங்கப்படும்.
ஜூன் 3ஆம் தேதி நிவாரண உதவிகள் வழங்கும் திட்டம் தொடக்கம் - அமைச்சர் சேகர்பாபு.
* ஜூன் 3 முதல் 6 வரை தடுப்பூசி போடப்படாது- ராதாகிருஷ்ணன்.
ஜூன் 3 முதல் 6-ம் தேதி வரை கரோனா தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்படும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதத்துக்கான முதல் தவணை தடுப்பூசி டோஸ் 6-ம் தேதி தான் வரும் என்பதால் மேற்கண்ட தேதிகளில் தடுப்பூசி செலுத்தப்படாது.
கடந்த மாதம் தமிழகத்திற்கு 2 மடங்கிற்கு மேல் தடுப்பூசி டோஸ் ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜூன் மாதம் 42.58 லட்சம் தடுப்பூசி டோஸ் ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
மத்திய அரசிடம் இருந்து இந்த மாதத்திற்கான 1.74 லட்சம் தடுப்பூசி டோஸ் வரவேண்டியுள்ளது.
* பாஜக அல்லாத 11 மாநில முதல்வர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்:
கொரோனா தடுப்பூசி பிரச்சினையை தீர்க்க மாநிலங்கள் ஒன்றாக நிற்க வேண்டும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்.
தடுப்பூசியை, மத்திய அரசு இலவசமாக விநியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலங்கள் கூட்டாக முன் வைக்க வேண்டும் - பினராயி விஜயன்.
* முதல் தவணை கொரோனா நிதி ரூ.2,000 பெற தமிழக அரசு அவகாசம் நீட்டிப்பு.
முதல் தவணை கொரோனா நிவாரணம் பெறாதவர்கள் ஜூன் மாதம் பெற்றுக்கொள்ளலாம் - தமிழக அரசு.
💥உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர்களாக அரிஸ்டாட்டில் மற்றும் குமணன் நியமனம்!
தொடர்ந்து பொய் செய்திகளை பரப்புவதாக கூறி புகழ்பெற்ற ஊடகவியலாளர் அர்நாப் கோசுவாமியின் ரிபப்ளிக் பாரத் தொலைக்காட்சி அலை வரிசையை முடக்கியது இங்கிலாந்து அரசு!
* சென்னை வாழ் மக்களே...
ஜூன் 2 ஆம் தேதி பராமரிப்பு காரணங்களுக்காக கீழ்கண்ட இடங்களில் இரண்டு மணி நேரம் மின்தடை செய்யப்படவுள்ளது.
* கரும்பூஞ்சை நோய்க்கு போதுமான அளவிலான மருந்துகளை வழங்கக்கோரி முதன்மை அமைச்சர் நரேந்திர மோதிக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்
💥 தமிழ்நாட்டில் இன்று 27,936 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 478 பேர் உயிரிழப்பு.
தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20.96 லட்சமாக உயர்வு - மொத்த உயிரிழப்பு 24,232.
💥ஒரே மாதத்தில் 10,000 பேருக்கு மேல் கொரோனா தொற்றால் தமிழகத்தில் உயிரிழப்பு!
மே 1 முதல் 31 வரை 10,186 பேர் உயிரிழந்துள்ளனர்.
2020 மார்ச் முதல் 2021 ஏப்ரல் வரை 14,046 பேர் உயிரிழப்பு ஏற்பட்டிருந்த நிலையில் ஒரு ஆண்டு கொரோனா இழப்பு எண்ணிக்கையை கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் நெருங்கியது தமிழகம்.
* 43-வது சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டத்தின் பரிந்துரைகள்!
1. தாமதக் கட்டணத் திட்டம், சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துபவர்களுக்கு, நிவாரணம் அளிக்கவுள்ளது.
2. ஜிஎஸ்டிஆர்-3பி & ஜிஎஸ்டிஆர்-1 ஆகிய படிவங்களைத் தாமதமாகத் தாக்கல் செய்தால் விதிக்கப்படும் தாமதக் கட்டணம், வரி செலுத்தும் காலங்களில் (2021 ஜூன் முதல்) சீரமைக்கப்படும்.
3. திட்டத்தின் கீழ் ஜிஎஸ்டிஆர்-4 படிவத்தைத் தாமதமாகத் தாக்கல் செய்யும் வரி செலுத்துபவர்களுக்கு விதிக்கப்படும் தாமதக் கட்டணம், வரி செலுத்தும் காலங்களில் (நிதியாண்டு 2021-22 முதல்) சீரமைக்கப்படும்.
4. பணி புரியும் இடத்தில் வரிபிடித்தம் (TDS) செய்யும் நிறுவனங்கள் ஜிஎஸ்டிஆர்-7 படிவத்தை தாமதமாக தாக்கல் செய்யும்போது விதிக்கப்படும் தாமதக் கட்டணம், 2021 ஜூன் முதல் சீரமைக்கப்படும்.
5. சிஜிஎஸ்டி விதிகளில், 36 (4) ஆம் விதியில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம், உள்ளீட்டு வரிக்கடனைப் பெறுவதில் தளர்வுகளை அளிக்கும்.
6. கம்பெனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வரிசெலுத்துவோருக்கு இணக்கம் தொடர்பான நிவாரணம்.
7. காலாண்டு மற்றும் மாதாந்திர வரி செலுத்தும் (QRMP) திட்டத்தின் கீழ் இல்லாத வரி செலுத்துவோருக்கு இணக்கம் தொடர்பான நிவாரணம்.
8. காலாண்டு வருவாய் தாக்கல் மற்றும் மாதாந்திர வரி செலுத்துதல் திட்டத்தின் கீழ் வரி செலுத்துவோருக்கு இணக்கம் சம்பந்தமான நிவாரணம்.
9. கலவைத் திட்டத்தின் கீழ் வரி செலுத்துவோருக்கு இணக்கம் சம்பந்தமான நிவாரணம்.
10. ஐடிசி-04 படிவத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30, 2021 வரை நீட்டிக்கப்பட்டிருப்பதால், வரி செலுத்துவோருக்கு இணக்கம் சம்பந்தமான நிவாரணம்.
* கடந்த ஆட்சியின்போது விவசாயிகளுக்கும் நஷ்டம், காய்கறியும் மக்களுக்கு சென்றடைய வில்லை.
இந்த முறை மக்கள் அனைவரும் பாராட்டும் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்களை வீடுகளுக்கே கொண்டு சேர்த்துள்ளோம் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னிர்செல்வம்.
* சென்னை ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.
போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்துள்ளது.
* கொரோனா பரவல் காரணமாக SBI இளநிலை இணையளர் பணிக்கான ஆட்சேர்க்கை முதல்நிலை தேர்வு அடுத்த அறிவிப்பு வரும் வரையில் நிறுத்தி வைக்கப்ப்படுவதாக அறிவிப்பு!
* ஜூன் மாத நியாயவிலைக் கடை பொருட்களை பெற டோக்கன் வழங்கல் தொடக்கம். நாளை முதல் 4 நாட்களுக்கு வீடுகளுக்கு சென்று டோக்கன்கள் வழங்கப்படும். நியாய விலைக் கடை ஊழியர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு, வீடுகளுக்கே சென்று டோக்கன்களை வழங்குவர்: தமிழக அரசு
* ஜூன் மாத ரேஷன் பொருட்களை பெற டோக்கன் விநியோகம் - தமிழக அரசு.
நாளை முதல் 4 நாட்களுக்கு வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்கப்படும் - தமிழக அரசு.
நியாய விலை கடை ஊழியர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு, வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்குவர்.
No comments:
Post a Comment