கொரோனாவுக்கு எதிரான போரில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது, அடுத்து பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்த வேண்டும். பொதுமக்கள் தங்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு குடும்பத்தையும் பாதுகாக்க மிகுந்த கட்டுப்பாட்டுடன் முழு ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

கொரோனாவுக்கு எதிரான போரில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது, அடுத்து பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்த வேண்டும். பொதுமக்கள் தங்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு குடும்பத்தையும் பாதுகாக்க மிகுந்த கட்டுப்பாட்டுடன் முழு ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

கொரோனாவுக்கு எதிரான போரில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது, அடுத்து பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்த வேண்டும். பொதுமக்கள் தங்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு குடும்பத்தையும் பாதுகாக்க மிகுந்த கட்டுப்பாட்டுடன் முழு ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் - பாமக தலைவர் ஜி.கே.மணி
            
கொரோனாவால் ஏற்பட்டுவரும் பாதிப்பும் சேதமும் போர்க்களத்தில் உணரப்படுவது போலாகும். பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.  கிராமப்புறங்களில், ஒரு வீட்டில் இரண்டு அல்லது மூன்று பேர் காய்ச்சல் இருப்பதாகக் கூறி உள்ளூர் மருத்துவர்கள் மற்றும் மருந்துக் கடைகளிலிருந்து மாத்திரைகளை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள்.  மக்கள் சிகிச்சைக்குச் சென்றால் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியுள்ளன.  இடங்கள் இல்லை.  ஆக்ஸிஜன் இல்லை என்றநிலையே உள்ளது.  இந்த நிலையில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 
            
சென்னையில் நேற்று முதல்நாள் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்டோர் உயிர் காக்கும் சிகிச்சை பிரச்சினையையும் நாங்கள் எடுத்துக் சொன்னோம்.  இது தொடர்பாக முழு ஊரங்கு குறித்தும் அரசின் சார்பாக நடவடிக்கை எடுக்க தீவிரப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் கூட்டத்தில் தெரிவித்தார். 
           
பென்னாகரம் தொகுதியில் உள்ள பெரும்பாலான கிராமங்களிலும் தர்மபுரி மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன.  இதேபோல், சேலம் மாவட்டம் முழுவதும் கிருஷ்ணகிரி மாவட்டம் உட்பட சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை ஏற்பட்ட சேதம் சுனாமியை விட கட்டுப்பாடில்லாமல் பரவுகிறது.  பென்னாகரம் அரசு மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கை வேகமாக நிரம்பிவிட்டது. மேலும் நோயாளிகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது.  தர்மபுரி (செட்டிகரை) அரசு பொறியியல் கல்லூரி தர்மபுரி மாவட்டம் முழுவதும் பயன்படுத்தும் வகையில் சிகிச்சை மையத்தைத் தொடங்குவதற்கான செயல்முறையை விரைவுபடுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.  சேலம் மாவட்டத்திலும், பெரியார் பல்கலைக்கழக வளாகம், காவேரி கல்லூரி உட்பட அனைத்து இடங்களிலும் படுக்கைகளை அதிகரிக்க வேண்டும். 
      
சேலம் மாவட்டத்தில் உள்ள ஜெ.எஸ்.டபிள்யூ(JSW) தொழிற்சாலை அதிக ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து தேவைக்கேற்ப சேலம், தர்மபுரி மாவட்டங்கள் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களுக்கு வழங்க வேண்டும்.  இதேபோல், தமிழ்நாடு முழுவதும் ஆக்ஸிஜனுக்கான அதிக தேவையை பூர்த்தி செய்ய, சேலம் உருக்காலை, திருச்சி பெல் நிறுவனம், நெய்வேலி நிலக்கரி நிறுவனம்,பெருந்துறை தொழிற்சாலை உள்ளிட்ட பல தொழிற்சாலைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
           
தற்போது மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் வீட்டிற்குச் செல்லாமல் பொதுமக்கள் உயிரைக் காப்பாற்ற கடுமையாக உழைத்து வருகின்றனர்.  அரசு அவர்களுக்கு அதிக சலுகைகளை வழங்க வேண்டும், அவர்களை கௌரவப்படுத்த வேண்டும்.  நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருவதால், அதிகமான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை நியமிக்க வேண்டும்.  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் விழிப்புணர்வு, பாதுகாப்பு, கட்டுப்பாடு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றில் முழு அளவில் இருக்க வேண்டும்.  முழு ஊரடங்கை அனைவரும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.  ஒவ்வொரு தனிநபரும் ஒவ்வொரு குடும்பமும் இப்போது பாதுகாக்கப்பட்டால், நாளை  நன்றாக வாழ முடியும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages