கடலூர் மாவட்டம்,பா.ம.க மாநில துணைத் தலைவரும் துணை பொதுச்செயலாளர் முத்துகிருஷ்ணன் தந்தையாருமான கடலூர் ப.சண்முகம் இறப்புச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது மறைவுக்கு பா.ம.க சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி இரங்கல் - Agnipuratchi

கடலூர் மாவட்டம்,பா.ம.க மாநில துணைத் தலைவரும் துணை பொதுச்செயலாளர் முத்துகிருஷ்ணன் தந்தையாருமான கடலூர் ப.சண்முகம் இறப்புச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது மறைவுக்கு பா.ம.க சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி இரங்கல்

Share This

கடலூர் மாவட்டம்,பா.ம.க மாநில துணைத் தலைவரும் துணை பொதுச்செயலாளர் முத்துகிருஷ்ணன் தந்தையாருமான கடலூர் ப.சண்முகம் இறப்புச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது மறைவுக்கு பா.ம.க சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி இரங்கல்  
         
பா.ம.க மாநில துணைத் தலைவர், மூத்த நிர்வாகி கடலூர் மாவட்டம், ஈச்சங்காடு ப.சண்முகம் இறப்புச் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. வன்னியர் சங்கம் தொடங்கிய காலத்திலிருந்து மருத்துவர் அய்யா அவர்களுக்கு மிக நெருக்கமாக இருந்து செயல்பட்டவர். மருத்துவர் அய்யா அவர்கள் சொல்லும் மாவட்டங்களுக்குச் சென்று கட்சி பணியாற்றியவர். பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். கட்சி வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தவர்.
      
உடல் நலக் குறைவால் கடலூர் மருத்துவமனையில் சேரும்போது  அவரிடமும் மகன் துணை பொதுச்செயலாளர் முத்துகிருஷ்ணனிடமும் பேசி மருத்துவ அதிகாரிகள், மருத்துவர்களிடமும் தீவிர சிகிச்சையளிக்க வேண்டி பேசினேன். நேற்று முதல் நாள் இரவு 12.30 மணிக்கு மருத்துவர்களிடமும் R.M.O விடமும் பேசி நன்கு சிகிச்சையளிக்க வலியுறுத்தினேன். திடீரென இறப்புச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.         
           
அவரது மறைவுக்கு பா.ம.கசார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். அவரை இழந்து சொல்லொணாத் துயரில் வாடும் மகன்கள், மகள்கள், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பா.ம.க வினர் அனைவருக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது மகன்கள் துணை பொதுச்செயலாளர் முத்துகிருஷ்ணன், இராமகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன் ஆகியோரிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages