பிறவிப் பொய்யர்/ முதிர்ச்சியின்மை/ தீய நெடி/ மூர்க்கம்/ அறிவு ஈவு குறைபாடு :- பெரிய நடிகர்களின் ரசிகர்களை போல டுவிட்டரில் சண்டையிடும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்! - Agnipuratchi

பிறவிப் பொய்யர்/ முதிர்ச்சியின்மை/ தீய நெடி/ மூர்க்கம்/ அறிவு ஈவு குறைபாடு :- பெரிய நடிகர்களின் ரசிகர்களை போல டுவிட்டரில் சண்டையிடும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்!

Share This

பிறவிப் பொய்யர்/ முதிர்ச்சியின்மை/ தீய நெடி/ மூர்க்கம்/ அறிவு ஈவு குறைபாடு :- பெரிய நடிகர்களின் ரசிகர்களை போல  டுவிட்டரில் சண்டையிடும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்!

அண்மையில் நடைபெற்ற 43 வது GST குழு கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். பல்வேறு பரிந்துரைகளை தமிழகம் சார்பில் முன் வைத்த அவர் GST குழு கூட்டத்தில் வாக்களிக்கும் முறையில் சில திருத்தங்களை மேற்கொள்ள கேட்டுக்கொண்டார். அதாவது, தற்போது அனைத்து மாநிலங்களுக்கும் தலா ஒரு வாக்கு என்றிருக்கும் நிலையில் மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப மாநிலங்களுக்கு வாக்குகள் வழங்க வேண்டும் என்பதே. அப்போது, அவரது தொகுதியோடு கோவா மாநிலத்தை ஒப்பிட்டு பேசியதாகவும் இதற்கு கோவா போக்குவரத்து துறை அமைச்சர் கடும் எதிர்ப்பு தெரிவித்தாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தியை சுட்டிக்காட்டி கோவா மாநிலத்தை விமர்சிப்பதால் தமிழகத்திற்கு எந்த நன்மையும் விளையாது என கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நிதியமைச்சர் மேற்கொள்ளிட்டு டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.

இதற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடுமையான எதிர் விமர்சனத்தை பதிலாக தந்திருந்தார்.

"உங்களுடைய பொய்களுடனான பதிவுகளில் என்னை இணைக்காதீர்; மாற்றம் வேண்டுமெனில் உண்மையாக உழையுங்கள்"

நீங்கள் ஒரு பிறவிப் பொய்யரா அல்லது ஒரு GST குழு கூட்டத்தில் ஒருவரை அவமானப்படுத்த முடியும் என நம்பும் அறிவு ஈவு குறைபாடு கொண்ட நபரா?

நீங்கள் இரண்டுமே!

என வானதி சீனிவாசனுக்கு பதில் தந்தார்.

உங்களது அரசியல் முதிர்ச்சி மற்றும் சமூக ஒழுக்கமறை உங்களின் சொற்களில் தெரிகிறது.

தனிமனிதர்களை அவமதிப்பதும், ஏச்சு பேச்சுகளை அவர்கள் மீது வீசுவதும் தான் உங்களுடைய பண்புகளுக்கு சாட்சி.

முதிர்ச்சியற்ற, மூர்க்கமான செயல்களில் நீங்கள் மிளிர்வீர்கள். சொற்களில் கவனம் வேண்டும்

என வானதி சீனிவாசன் பதில் கொடுக்க

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வானதி சீனிவாசனின் பக்கத்தை பார்வையில் இருந்து முடக்கினார்.

நமது மாநிலத்தின் நிதி அமைச்சர் விமர்சனங்களை தாங்க இயலாதவர் என்பது சற்றே வருத்தமளிக்கிறது எனினும் என்னை முடக்கியது சில்லரைத்தனமானது

என்னை பொய்யர் என்றும் அறிவு ஈவு குறைவானவர் என்றும் நீங்கள் அழைக்கலாம் ஆனால் உண்மையை மாற்ற இயலாது.

பாஜக மூத்த தலைவர் H ராஜா மீதும் ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு மீதான தங்களது கருத்துக்கள் உங்களது அழுக்கடைந்த பண்பை காட்டுகிறது.

என வானதி சீனிவாசன் பதிவிட

அதற்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது

ஒருமுறை திமுக பேச்சாளர் ஒருவரை  பார்த்து "நீங்கள் அரசியல் செய்ய போதுமான பிணங்கள் இல்லாததால் கவலையா? என வினவியவர் நீங்கள்

தீய நெடி வீசும் போது ஒரு சாதாரண நபர் எவ்வாறு சாளரத்தை அடைப்பாரோ அது போல உங்களை டுவிட்டரில் முடக்குகிறேன்

உங்களிடம் நற்பண்பு சான்று பெறுவதென்பது பொருளற்றது. எனது நேரத்தை வீணடிக்க வேண்டாம்!

என கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த பேரிடர் காலத்தில் ஒன்று சேர்ந்து மக்கள் பணியாற்றாமல் ஒருவர் மீது ஒருவர் புழுதியை வாரி தூற்றிக் கொள்வது காண்போரை முகம் சுளிக்க வைப்பதாய் உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages