மூச்சுத் திணறல் நோய்க்கான சிகிச்சையில் பலர் இறப்பது நாம் அறிந்ததே. அதுவும் oxygen வைத்த சில நாள்களில் சிகிச்சை பலனின்றி இறப்பது ஏன்..? - Agnipuratchi

மூச்சுத் திணறல் நோய்க்கான சிகிச்சையில் பலர் இறப்பது நாம் அறிந்ததே. அதுவும் oxygen வைத்த சில நாள்களில் சிகிச்சை பலனின்றி இறப்பது ஏன்..?

Share This

மூச்சுத் திணறல் நோய்க்கான சிகிச்சையில் பலர் இறப்பது நாம் அறிந்ததே. அதுவும் oxygen வைத்த சில நாள்களில் சிகிச்சை பலனின்றி இறப்பது ஏன்..?

இப்போது வரும் கொரோனா கிருமி தொற்றால் நமது சுவாசப் பாதை, மற்றும் நுரையீரல்களில் பாதிப்பு ஏற்படுகிறது. இரண்டு நாட்கள்வரை இங்கே இருந்து பல்கிப் பெருகும் கிருமிகள் மெல்ல தனது வேலையை காட்ட தொடங்குகின்றன.

தொண்டையில் இருந்து நுரையீரலின் ஆரம்பம்வரை உள்ள சுவாசப் பாதையில் கபத்தை அதாவது சளியை உறையச் செய்கின்றன அந்தக் கிருமிகள்.

முதல் நிலை - இவ்வாறு சிறிதளவு சளி உறையும்போது  லேசான இருமலும், தொண்டை வலியும், கரகரப்பும்  இருக்கும்.

இரண்டாம் நிலை - இந்த சளி அதிக அளவில் படிந்து சுவாசத்தை தடை செய்யும்போது லேசான மூச்சு திணறல் ஏற்படும். ஆனாலும் சமாளித்துக் கொள்ளலாம்.

மூன்றாம் நிலை - சளி இன்னும் சற்று அதிகமாக  உறையும்போது பெருமளவு காற்று செல்வது தடைபடும். இதுதான் சற்று ஆபத்தான நிலை. இப்போதுதான் நாம் மருத்துவமனைக்கு செல்கிறோம்.

அங்கே உடனே நமக்கு oxygen சிலிண்டர் வைக்கப்படுகிறது. சிலிண்டரின் உள் காற்று அழுத்தம் அதிகம்  இருப்பதால் சளியின் உறைதல் தடையையும் தாண்டி oxygen வேகமாக செல்லும். இப்போது நோயாளி சுகமாக உணர்வார்.

நான்காவது நிலை  - ஆனால், சில நாட்களில் உள்ளே உள்ள  நோயின் தன்மை அப்படியே இருப்பதால் மேலும், மேலும் சளி உறைய துவங்கி, சுவாசப் பாதையை, நுரையீரலை முழுவதும் பாதித்துவிடும்.

இப்போது சிலிண்டரில் உள்ள காற்றும் உள்ளே செல்ல முடியாமல் மூச்சு திணறல் அதிகமாகி உடனடி மரணம் நிகழ்கிறது. பிறகு வழக்கமான வாசகம்தான் "சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்".

அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்...?

நீங்கள் எப்போது இரண்டாம் நிலை அளவில் தொல்லையை உணர்கிறீர்களா... அப்போது கீழேயுள்ள பொருட்களை கொண்டு ஆவி பிடித்தல் வேண்டும்.

அடுத்து கபசுர குடிநீர் அருந்துவது.

நமது முக்கிய குறிக்கோள் சுவாசப் பாதையில் உறைந்த சளியை இளக செய்வதும், வெளியேற்றுவதும் ஆகும்.

அடுத்தது அந்தக் கிருமிக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தியை பெருக்குதல்.

இந்த இரண்டையும் செய்து விட்டால் போதும். இயல்பாக பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

இஞ்சி, மிளகு, மஞ்சள், துளசி, கற்பூரவள்ளி, பூண்டு, கல்லுப்பு, வேப்பிலை, எலுமிச்சை, ஓமம், வெற்றிலை ஆகிய பொருட்களை 2 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடியுங்கள்.

தினமும் ஒரு முறையாவது கப சுர குடிநீரை தவறாமல் அருந்துங்கள்.

இனிப்பு, புளிப்பு பொருட்களை பெருமளவு தவிர்த்து விடுங்கள்.

நன்றாக ஓய்வு எடுங்கள். தேவையான உறக்கம் கொள்ளுங்கள். 

தொற்று  ஏற்படுத்தும் கிருமியின் ph  value  5.5 to  8.0 . எனவே அதைவிட அதிக ph  value உள்ள பொருட்கள் இந்த பிரச்சினையை எளிதில் தீர்க்கும். நாம் ஆவி பிடிப்பதில் உள்ள பொருட்கள் இந்த வகையே..!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages