அக்னிப்புரட்சி இன்றைய (07.06.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (07.06.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (07.06.2021) முக்கிய செய்திகள்.

* முடங்கியது இ - பதிவு இணையதளம்

இன்று முதல் தளர்வுகளுடன் ஊரடங்கு செயலுக்கு வந்துள்ளது நிலையில் சுய தொழில் செய்வோர் இ பதிவு செய்து வேலை செய்ய ஆணை.

அதிகமானோர் விண்ணப்பித்த காரணமாக இ - பதிவு இணையம் முடங்கியது.

* உத்தரப்பிரதேச பாஜக டுவிட்டர் பக்கத்தில் முதன்மை அமைச்சர் நரேந்திர மோதி மற்றும் கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரின் படங்கள் நீக்கம்!

உத்திர பிரதேசத்தில் களமிறக்கப்பட்டு இருக்கும் முன்னாள் குடிமைப் பணியில் அலுவலர் அரவிந்த் குமாருக்கு தேசிய தலைமை முதன்மைத்துவம் கொடுக்கத் தொடங்கியதால் முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிருப்தி என தகவல் வெளியாகியுள்ளது.

* 2019-2020-ம் கல்வியாண்டுக்கான பள்ளிக்கல்வி செயல்திறன் தர அட்டவணையில் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், சண்டிகர், அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய 5 மாநிலங்கள் தரவரிசைப்பட்டியலில் முதலிடம்

* திருச்சியில் கட்டுப்பாடுகளை மீறி ஊரடங்கு காலத்தில் சுற்றியவர்களின் சுமார் 7000 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைத்திருந்தனர்.

அந்த வாகனங்களை உரிமையாளர்களிடம் தேதிவாரியாக இன்று முதல் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

* இ-பதிவு இணையம் முடக்கம் -அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்.

ஒரே நேரத்தில் இன்று 60 லட்சம் பேர் இ-பதிவு செய்ய முயன்றதால் இணையதளம் முடங்கியது; இன்று மாலைக்குள் சீராகும் என்று அமைச்சர் விளக்கம்.

* வழக்கு தொடர்ந்தவருக்கு நீதிமன்றம் அபராதம்

தமிழக முதல்வர் ஸ்டாலினை அசாதாரண சூழ்நிலைகள் தவிர ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாரிகள் தொந்தரவு செய்யக்கூடாது என்ற வழக்கு தள்ளுபடி

வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் விவேகானந்தனுக்கு ரூ 10,000 அபராதம்.

ஓராண்டு பொது நல வழக்குகள் தாக்கல் செய்ய தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

* கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை கண்டறிய மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

* கரும்பூஞ்சை நோய்க்கு மருந்து வாங்க ரூ.25 கோடி ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

* அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனை உரிமம் ரத்து.

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.

* இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.

* புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு.

* புகழ்பெற்ற ஓவியர் இளையராஜா கொரோனா வெருவித் தொற்றால் உயிரிழப்பு.

* அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை 100 நாட்களில் செயல்படுத்துவோம்!- அமைச்சர் சேகர் பாபு உறுதி

* இன்று ஒரே நேரத்தில் 60 லட்சம் பேர் பதிவு செய்ய , இணைய தளத்திற்கு வந்த காரணத்தால்தான் இ பதிவு இணையதளம் முடங்கியது

விரைவில் இணையதளம் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

* தேனியில் நியூட்ரினோ மையம் அமைக்க வனவுயிர் வாரிய அனுமதி (WILDLIFE CLEARANCE) கோரி தமிழ்நாடு வனத்துறையிடம் விண்ணப்பித்துள்ளது டாடா அடிப்படை ஆராய்ச்சி மையம்

💥இன்று மாலை 5 மணிக்கு முதன்மை அமைச்சர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்!

**இன்று காலை சென்னை பிராட்வே ரோட்டில் ஆட்டோ டிரைவர் ஒருவர், பெண் உதவி ஆய்வாளரை அநாகரிகமாக பேசியுள்ளார்.

* தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு, 400-க்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா உயிரிழப்பு.

தமிழகத்தில் மேலும் 19,448 பேருக்கு கொரோனா தொற்று.

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 351 பேர் உயிரிழப்பு.

31,360 பேர் குணமடைந்தனர்.

* நியாய விலைக்கடைகள் நேரம் மாற்றம்:

நாளை முதல் முற்பகல், பிற்பகல் என இரண்டு நேரங்களில் நியாய விலைக்கடைகள் செயல்படும்.

காலை 9 மணி முதல் 12.30 மணி வரையிலும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நியாய விலைக்கடைகள் செயல்படும்.

* புனேவில் கெமிக்கல் தொழிற்சாலையில் ஏற்பட்ட  தீ விபத்தில் 12 பேர் பலி:

பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

புனேவின் உரவாடே பகுதியில் உள்ள தனியார் கெமிக்கல் தொழிற்சாலையில் இன்று மாலை தீ விபத்து.

தொழிற்சாலையில் பலர் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

* தில்லியில் 230 ஆக குறைந்தது ஒரு நாள் கொரோனா பாதிப்பு...

💥இருபதாயிரத்துக்கு கீழ் தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது!

* மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்குவதாக அறிவித்த பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி.

தடுப்பூசி செலுத்துவது, நிர்வகிக்கும் உரிமையை  மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும்- முதல்வர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages