அக்னிப்புரட்சி இன்றைய (08.06.2021) முக்கிய செய்திகள்.
* புதுச்சேரியில் இன்று காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை, கடற்கரை சாலையில், நடைபயிற்சி செல்ல அனுமதி.
அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து இருக்கலாம்.
மதுபானகடைகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை திறக்க உத்தரவு. பார்களில் அமர்ந்து மது அருந்த தடை விதிப்பு.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.96.71 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.90.92 க்கும் விற்பனை.
* மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரத்தில் பொதுமக்களிடம் அதிக கட்டணம் பெற்று அளவுகடந்த வருவாய் ஈட்ட நினைக்கும் மருத்துவமனைகளின் உரிமத்தை திரும்பப் பிடுங்க அரசு தயங்காது - அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிக்கை
* முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்காக ₹160 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு
* தமிழகத்துக்கு 2 நாளில் 1,03,370 கோவாக்சின் தடுப்பூசி வரவுள்ளதாக தகவல்.
வயதானவர்களுக்கு செலுத்துவதற்காக நாளை 63,370 கோவாக்சின் தடுப்பூசி தமிழகம் வருகிறது.
44 வயதானவர்களுக்கு செலுத்துவதற்காக 40,000 கோவாக்சின் தடுப்பூசி நாளை மறுநாள் வர உள்ளதாக கூறப்படுகிறது.
* மாநில வளர்ச்சி கொள்கை குழுவில் இடம் பெற்றிருக்கும் உறுப்பினர்களுக்கு ஒத்துக்கப்பட்டுள்ள துறைகள் குறித்த விவரம் வெளியீடு
* ஊராட்சி அரசு நூலகங்களில் திமுக கட்சி சார்ந்த நாளேடுகள் மற்றும் இதழ்களை வாங்க பல்வேறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
முரசொலி, தினகரன், தமிழ் முரசு , குங்குமம் உள்ளிட்ட ஏடுகளை வாங்க உரிய சந்தா கட்டணம் செலுத்த வேண்டும் என கடிதம்
* உணவகம், மளிகை கடை, பேக்கரி கடை ஊழியர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் உணவுப் பொருட்களை பார்சல் செய்யும் போது, எச்சிலை பயன்படுத்தக் கூடாது.
திருச்செந்தூர் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
* நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் மீதான குண்டர் சட்டத்தை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் ஆணை
* பேரிடர் காலங்களில் பொது மக்கள் ஆபத்துகள் குறித்து தகவல் தெரிவிக்க தனி வாட்ஸ் அப் எண் அறிமுகம்.
மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்திற்கு 94458 69848 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.
பொதுமக்கள் 1070 என்ற கட்டணமில்லா தெலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கலாம்.
* பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு தமிழக அரசுக்கு கோரிக்கை!
தமிழ்நாட்டில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள அண்ணா கிராம மறுமலர்ச்சித் திட்ட நூலகங்களுக்கு முரசொலி, தினகரன், குங்குமம், தமிழ் முரசு என திமுக ஆதரவு ஏடுகளை மட்டும் வாங்கவும், அதற்கான ஓராண்டு சந்தாவை முன்கூட்டியே செலுத்தவும் ஆணையிடப்பட்டுள்ளது. இது நியாயமற்றது!
நாளிதழ்களுக்கான சந்தா, விளம்பரம் ஆகியவற்றில் தமிழக அரசு பாகுபாடு காட்டக்கூடாது. அனைத்து ஊராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்களுக்கும் அனைத்து ஆங்கில, தமிழ் நாளிதழ்களையும் வாங்க தமிழக அரசு ஆணையிட வேண்டும்!
* பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு
💥திமுக செய்தித் தொடர்பாளர் தமிழன் பிரசன்னா மனைவி நதியா தூக்கிட்டு தற்கொலை
தனது பிறந்தநாளான இன்று காலை 11.30 மணி அளவில் தற்கொலை செய்துக்கொண்டதாக தகவல்
கொடுங்கையூர் காவல் நிலையத்தில் குற்றவியல் நடைமுறை சட்டம் 174படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
* முகக் கவசம், சானிட்டைசர் போன்ற பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்துள்ளது தமிழக அரசு.
என்-95 மாஸ்க்களை அதிகபட்சம் 22 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யக் கூடாது- தமிழக அரசு.
பிபிஇ கிட் எனப்படும் கவச உடை விலை ரூ.273 என நிர்ணயம்.
சானிடைசர் 200 மி.லி. விலை அதிகபட்சம் 110 ரூபாயாக இருக்க வேண்டும்.
சர்ஜிக்கல் மாஸ்க் ஒன்று அதிகபட்சம் ரூ.4.50க்குள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும்- தமிழக அரசு.
* Petrol, Diesel உயர்வை கண்டித்து காங்கிரசு கட்சி சார்பில் சூன் 11ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவிப்பு.
* கடலூர், இராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது
* அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பல பகுதிகளில் இணையதளம் இயங்கவில்லை.
அமேசான், தி நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட பிரபல வலைத்தளங்கள் இயங்கவில்லை.
* கடன் தவணை கால அவகாசம்: 12 மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.
6 மாத காலத்திற்கு இ.எம்.ஐ. காலஅவகாசம் கேட்டு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்: ஸ்டாலின்.
* கொரோனா வெருவித் தொற்றால் இறந்தவர்களின் இறப்பு சான்றிதழில் இறப்பு காரணம் குறிப்பிட்டு அரசு வழங்க வேண்டும் எனவும் ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகளை தமிழக அரசு சார்பில் கணக்கெடுப்பு மேற்கொண்டு சிறார் குழுக்களுக்கு தெரியப்படுத்தும் படியும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை
💥தமிழகத்தில் இன்று புதிதாக 18023 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டும் 2439 கட்டுகள் பதிவாகி உள்ளன.
409 பேர் உயிரிழப்பு
31045 பேர் மீட்பு!
கோவை, சென்னை, திண்டுக்கல் மற்றும் திருவள்ளுர் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பு.
* மறு தேர்வுக்கான அட்டவணையை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்
💥பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு?!
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறாது என அரசு அறிவித்துள்ள நிலையில் பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு முன்னர் பள்ளி அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது
* ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் உலக கடல் தினத்தையொட்டி மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் உருவாக்கிய மணற்சிற்பம்.
* 2021-22ஆம் கல்வி ஆண்டிற்கு +1 வகுப்பிற்கான சேர்க்கை குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!
* தமிழக கோவில்களுக்கு சொந்தமாக இருந்த நிலங்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
* 1985 – 87ம் ஆண்டில் கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிட்டிருந்த 5.25 லட்சம் ஏக்கர் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.
* கட்சியை தலைமையேற்று வழிநடத்த நிச்சயம் வருவேன் - சசிகலா ஆடியோ மீண்டும் ரிலீஸ்!
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா தீவிர அரசியலில் கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த எந்த விஷயமும் அதிமுகவில் நடைபெறாதகாரணத்தால் கடந்த மார்ச் மாதம் அரசியலில் இருந்து விலகி இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களாக தொண்டர்களிடம் சசிகலா தொலைபேசி வாயிலாக பேசிவருகிறார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இதுவரை 9 ஆடியோ பேச்சுக்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது 10வது ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், " கட்சியை தலைமையேற்று வழிநடத்த நிச்சயம் வருவேன், அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை" என்று தெரிவித்துள்ளார்.
*:தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மே, ஜூன் மாதங்களில் இருமடங்கு அரிசி வழங்க உத்தரவு.
கொரோனா 2வது அலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேசன் கடையில் கூடுதல் அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மே, ஜூன் மாதத்தில் ஏற்கனவே வழங்கப்படும் அளவுடன் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய தொகுப்பில் இருந்து தமிழ்நாட்டுக்கு கூடுதல் அரிசி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
* தலைமையாசிரியர்கள், பணியாளர்கள் பள்ளிக்கு வர உத்தரவு:
ஜூன் 14 முதல் அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பணியாளர்கள் பள்ளிக்கு வரவேண்டும் - பள்ளி கல்வித்துறை உத்தரவு.
No comments:
Post a Comment