அக்னிப்புரட்சி இன்றைய (10.06.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (10.06.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (10.06.2021) முக்கிய செய்திகள்.

வருமான வரி பதிவு செய்ய புதுப் பொலிவுடன் கூடிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியது வருமானவரித்துறை
https://www.incometax.gov.in/

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.96.94 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.91.15 க்கும் விற்பனை.

* மாவட்ட சுற்றுப்பயணங்களின் போது தடல்புடலான விருந்தோம்பல்களை ஏற்பாடு செய்வதை மாவட்ட ஆட்சியர்கள் தவிர்க்க வேண்டுகிறேன். எளிமையான காலை மற்றும் மாலை உணவு, இரண்டு கூட்டுகள் கொண்ட தளியல் மட்டும் போதுமானது... : தலைமை செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு  வேண்டுகோள் கடிதம்

* தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வருமா? அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை.

ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் தொடர்பாகவும் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார்.

* ஆம்புலன்ஸ் விபத்து-கர்ப்பிணி உள்ளிட்ட 3 பேர் பலி.

கள்ளக்குறிச்சி : ஆலத்தூர் ஏரிக்கரை பகுதியில் மரத்தின் மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் கர்ப்பிணி பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு - 2 பேர் படுகாயம்.

* அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் மீதான குற்றச்சாட்டு தொடர்பான அறிக்கையை அரசுக்கு அளிக்க 10 நாள் காலக்கெடு நீட்டித்து  விசாரணை குழுவுக்கு அரசு ஆணை

* அமெரிக்கா : டிக்டாக், விசாட் உள்ளிட்ட 8 சமூக வலைதளங்களை தடை செய்வதற்கான ஆணையை திரும்ப பெற்றார் அதிபர் ஜோ பைடன்.

8 சமூக வலைதளங்களை தடை செய்வதற்கான ஆணையை அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பிறப்பித்திருந்த நிலையில், திரும்ப பெறப்பட்டது.

* பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.

ஜெயிலர் மதுரைக்கு மாற்றம் - புதிய கண்காணிப்பாளராக சங்கர் நியமனம்.

பாளை. சிறையில் கடந்த ஏப்ரல் மாதம் கைதி முத்துமனோ இறந்த விவகாரத்தில் 7 சிறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது கண்காணிப்பாளர் மற்றும் ஜெயிலர் இடமாற்றம்.

* தமிழகத்திற்கு மேலும் 85,000 டோஸ் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் வந்துள்ளன.

மருந்து தட்டுப்பாட்டால் 36 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்.

சென்னையில் 1060 டோஸ் தடுப்பூசி மட்டுமே கையிருப்பில் உள்ளது.

* அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 14ம் தேதி நடக்க உள்ளதாக இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அறிவிப்பு.

எதிர்க்கட்சி துணைத்தலைவர், கொறடா தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல்.

* வேலூர் : குருமலை அருகே நச்சுமேடு பகுதியில் பூட்டிய வீட்டை உடைத்து 15 சவரன் நகை, ரூ.8.50 லட்சம் ரொக்கத்தை காவலர்கள் திருடியதாக வழக்கு.

எஸ்.ஐ உட்பட 3 போலீசார் தற்காலிக பணியிடை நீக்கம் - வேலூர் எஸ்.பி. செல்வகுமார்.

* நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

* தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் முதல்வருக்கு பரிந்துரை.

கொரோனா தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்த முடிவு என தகவல்.

* தலைமைச் செயலகம் மாற்றம்..?
ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவ மனையை மீண்டும் தமிழக அரசின் தலைமைச் செயலகமாக மாற்ற உள்ளதாக செய்திகள் வருகிறது‌ என்றும் அந்த முயற்சி வேண்டாமென தமிழக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்

*:தற்போது உள்ள தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

மூன்றாவது அலையை வர விடாமல் தடுப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக அலுவலர்கள் வட்டாரம் தகவல்

* புதுச்சேரியில் மதுக்கடைகள் மூடப்படாது; தவறான தகவலை நம்ப வேண்டாம்-கலால்துறை அறிவுறுத்தல்.

மதுக்கடைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தவறான தகவல் பரவுகிறது.

இதனை நம்ப வேண்டாம்; மதுக்கடைகளை மூட கலால் துறை எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை - கலால் துறை துணை ஆணையர் சுதாகர்.

* நீட் தேர்வு தாக்கம் குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.

குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - தமிழக அரசு.

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை மூட தமிழக அரசு ஆணை.

💥NEET தேர்வு பாதிப்பு குறித்து ஆராய  9 பேர் கொண்ட குழு அமைப்பு

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில், NEET தேர்வின் தாக்கம் குறித்து அறிக்கை வழங்க ஓய்வு பெற்ற நீதியரசர் இராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட உயர்நிலை குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை

* தண்டனை கைதிகளுக்கு சிறப்பு விடுப்பு (Parole) வழங்கும்போது, விசாரணை கைதியாக சிறையில் இருந்த காலத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

* சீனாவுடனான இலங்கையின் உறவு நெருக்கம் குறித்து கவலை தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முதன்மை அமைச்சர் நரேந்திர மோதிக்கு கடிதம்

* வரும்14ம் தேதி முதல் 50 % பணியாளர்களுடன் சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து பிரிவுகளும் செயல்பட அனுமதி - சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு.

ஜூன் 30 வரை நீதிமன்ற பணிகள்   ஆன்லைனில்  தொடரும்.

14ம் தேதி முதல் அனைத்து நீதிபதிகளும் வழக்குகளை விசாரிப்பார்கள் - சென்னை உயர்நீதிமன்றம் தலைமை பதிவாளர் தனபால் அறிவிப்பு.

* சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் அரசு சார்பில் ஆஜராக மேலும் 44 வழக்கறிஞர்களை நியமித்தது தமிழக அரசு.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 29 அரசு வழக்கறிஞர்களும், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு 15 அரசு வழக்கறிஞர்களும் நியமித்து தமிழக அரசு உத்தரவு.

💥பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக குற்றச்சாட்டு!

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்லரப்பாடி ஊராட்சி செயலாளர் வேல்முருகனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ஆணை.

* தமிழகத்தில் 36 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை.
: அமைச்சர் மா சுப்பிரமணியன்

* 2020-ம் ஆண்டுக்கான குடிமைப் பணியில் நேர்முகத் தேர்வு வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் நடைபெறும் என்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

* பத்தாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில், மதிப்பெண்களை குறிப்பிடாமல் "தேர்ச்சி" என்று மட்டும் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு

"அனைவருக்கும் தேர்ச்சி" என்று அறிவிக்கப்பட்டதால், பாட வாரியாக "தேர்ச்சி" என்று குறிப்பிட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது

💥முதல்வரின் தனிப்பிரிவு இணையதளத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சிறப்பு அலுவலர்கள் மின்னஞ்சல் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் கோயம்புத்தூர், தென்காசி, மயிலாடுதுறை, சேலம், திருவாரூர், தென்காசி, திருப்பத்தூர், தேனி இராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்கள் இடம் பெறவில்லை.

💥தமிழகத்தில் இன்று இறப்பு எண்ணிக்கை 358 ஆக குறைவு!

16,813 பேருக்கு இன்று புதிதாக வெருவித் தொற்று பாதிப்பு.

1,88,664 பேர் இன்னும் மருத்துவம் பெற்று வருகின்றனர்.
32049 பேர் மீண்டனர்.

* லஞ்சம் வாங்கியதாக மத்திய பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கைது:

லஞ்சம் வாங்கியதாக மத்திய பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வி.எல்.பாஸ்கர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செயற்பொறியாளர் பாஸ்கரை மத்திய புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் மதுரையில் கைது செய்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages