அக்னிப்புரட்சி இன்றைய (13.06.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.97.43 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.91.64 க்கும் விற்பனை.
💥 யூரோ கோப்பை கால்பந்து தொடர் - பின்லாந்து அணியுடனான போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் நிலைதடுமாறி விழுந்தார் டென்மார்க் வீரர் எரிக்சன்
திடலில் முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனையில் எரிக்சன் அனுமதி. தற்போது அவர் நலமுடன் உள்ளார்.
முழு நலம் பெற வேண்டி உலகம் முழுதும் உள்ள விளையாட்டு ஆர்வலர்கள் வேண்டுதல்.
எரிக்சனுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் ஊடக பசிக்கு இந்த நிகழ்வு இரையாகாதவாறு சக வீரர்கள் மறைத்து நின்று கவலை கொள்ளும் காட்சி
டென்மார்க் vs பின்லாந்து: நிறுத்தப்பட்ட யூரோ கோப்பை போட்டி மீண்டும் நடைபெற்றது
1 goal அடித்து பின்லாந்து அணி வெற்றி !!
* மதுக்கடை திறப்பு - காங்கிரஸ் எம்பி புது விளக்கம்!
TASMAC கடையில் புட்டி வாங்கியதும் சென்று விடுவார்கள். ஆனால் தேநீர்க்கடையில் தேநீரை வாங்கிக்கொண்டு அங்கே தான் இருப்பார்கள் என்பதால் தேநீர்க்கடைகள் திறக்கப்படவில்லை, TASMAC திறக்கப்பட்டுள்ளதாக காங்கிரசு கட்சியை சேர்ந்த திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்
* திருப்பதி தேவத்தானம் சார்பில் ஜம்முவில் 62 ஏக்கரில் கட்டப்படவிருக்கும் அருள்மிகு வெங்கடேஸ்வர சுவாமி ஆலயம்
இன்று பூமி பூசை நடைபெறுகிறது.
* தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட உள்ள நிலையில் வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியீடு:
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது.
மதுக்கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் கொரோனா முன்னெச்சரிகைநடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
மதுக்கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த த்தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் 6 அடி சமுக இடைவெளி இருக்க வேண்டும் - தமிழக அரசு.
* மேட்டூர் அணை பாசனத்திற்கு திறக்கப்பட்டதால் விவசாயிகளுக்கு தேவையான விதைநெல் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
- வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
* டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் விருதுக்கு https://t.co/4zPTAZq9vf என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவிப்பு.
* தமிழகத்தில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி - தமிழக அரசு.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி.
பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல இனிப்பு, காரம் விற்கும் கடைகளுக்கும் அனுமதி.
காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இனிப்பு, கார வகை கடைகள் இயங்கலாம்.
இனிப்பு, கார வகைகளை பார்சலில் மட்டுமே விற்க அனுமதி.
💥Hydrocarbon மூன்றாம் கட்ட ஏலத்தில் காவிரி டெல்டா பகுதிகள் இடம் பெற்றிருப்பதை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உழவர்கள் போராட்டம்.
* "ஒரே உலகம் ஒரே ஆரோக்கியம்" ஜி7 (G7) மாநாட்டில் முதன்மை அமைச்சர் நரேந்திர மோடி முன்னெடுப்பு
* உலகின் தலைசிறந்த 1000 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் 801 ஆவது இடம் பிடித்தது பாண்டிச்சேரி பல்கலைக்கழகம். QS World University Rankings 2022 தர வரிசை பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில் அதில் இந்தியாவை சேர்ந்த 22 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
* 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு:
நாகை ஆட்சியராக உள்ள பிரவீன் நாயர் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநராக நியமனம்.
விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை வேளாண் துறை இயக்குநராகவும், வேலூர் ஆட்சியர் சண்முக சுந்தரம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராகவும் நியமனம்.
கோவை ஆட்சியர் நாகராஜன் நில நிர்வாகத்துறை ஆணையராகவும், திருப்பத்தூர் ஆட்சியர் சிவனருள் பதிவுத்துறை ஐ.ஜி.யாகவும் நியமனம்.
திருவண்ணாமலை ஆட்சியர் சந்தீப் நந்தூரி சுற்றுலாத்துறை இயக்குநராகவும், அரியலூர் ஆட்சியர் ரத்னா சமூக நலத்துறை இயக்குநராகவும் நியமனம்.
நாளைக்கு உதயநிதி ஸ்டாலின் தான் முதலமைச்சராக வர வேண்டும் என யூ டியூப் வலைத்தள செய்தியை மேற்கோள் காட்டி முரசொலி நாளேடு செய்தி வெளியிடு
தமிழ்நாட்டு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சுதன் ஒருங்கிணைந்த கல்வித் திட்ட இயக்குநராக மாற்றம்
ஏற்கனவே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளராக இருந்த நந்தகுமார் பள்ளிக் கல்வி ஆணையராக மாற்றப்பட்டார்
💥சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட புகழ்பெற்ற யூ ட்யூப் Gamer மதன் நேரில் வந்து விளக்கமளிக்குமாறு காவல்துறையினர் அழைப்பாணை
* டெல்டா மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும்-பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு அனுமதித்தாலும், தமிழக அரசு அனுமதிக்காது.
ஆய்வு மற்றும் உற்பத்திக்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது.
தமிழ்நாட்டின் எந்த பகுதியையும் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்காக ஏலத்தில் கொண்டு வரக்கூடாது.
விவசாயிகளின் நலனையும், காவிரி படுகையின் வளத்தையும் கண்ணை இமை காப்பது போல அரசு காக்கும்.
* 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்:
சென்னை ஆட்சியராக ஜெயரானி, திருவள்ளூர் ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ், விழுப்புரம் ஆட்சியராக மோகன் நியமனம்.
புதுக்கோட்டை ஆட்சியராக கவிதா ராமு, தஞ்சை ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ், நாகை ஆட்சியராக அருண் தம்புராஜ், கள்ளக்குறிச்சி ஆட்சியராக ஸ்ரீதர் நியமனம்.
விருதுநகர் ஆட்சியராக மேகநாத் ரெட்டி, தேனி ஆட்சியராக முரளிதரன், செங்கல்பட்டு ஆட்சியராக ராகுல் நாத், தேனி ஆட்சியராக முரளிதரன் நியமனம்.
வேலூர் ஆட்சியராக குமரவேல் பாண்டியன், திருவண்ணாமலை ஆட்சியராக முருகேஷ், திருப்பத்தூர் ஆட்சியராக அமர் குஷவா நியமனம்.
நாமக்கல் ஆட்சியராக ஷ்ரேயா சிங், திண்டுக்கல் ஆட்சியராக விசாகன், கோவை ஆட்சியராக சமீரான், திருப்பூர் ஆட்சியராக வினீத், அரியலூர் ஆட்சியராக ரமண சரஸ்வதி நியமனம்.
கரூர் ஆட்சியராக பிரபு சங்கர், தென்காசி ஆட்சியராக சந்திரலேகா, ஈரோடு ஆட்சியராக கிருஷ்ன உன்னி, திருவாரூர் ஆட்சியராக காயத்ரி கிருஷ்ணன் நியமனம்.
* தமிழ்நாட்டில் இன்று 14,016 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று 25,895 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்
தமிழ்நாட்டில் தற்போது 1,49,927 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 267 பேர் பலியாகி உள்ளனர்.
தமிழ்நாட்டில் இதுவரை 29,547 பேர் கொரோனா காரணமாகப் பலியாகி உள்ளனர்.
No comments:
Post a Comment