அக்னிப்புரட்சி இன்றைய (14.06.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் விலை 27 காசுகள் உயர்ந்து லிட்டர் 97.69 ரூபாய்க்கும், டீசல் விலை 28 காசுகள் உயர்ந்து லிட்டர் 91.92 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
* கொரோனா தொற்று அதிகம் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும்; சலூன்கள், டாஸ்மாக் உள்ளிட்டவை திறக்க அனுமதி இல்லை.
* டில்லி மருத்துவமனையில் ‛ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி.
டில்லி இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில், ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசி, நாளை முதல் மக்களுக்கு கிடைக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஸ்புட்னிக் - வி தடுப்பூசியின் விலை, ஒரு டோஸ் 1,145 ரூபாய் என, மத்திய அரசு நிர்ணயித்து உள்ளது.
* பிரெஞ்ச் ஓபன்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் டென்னிஸ் உலகின் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச், கிரீஸ் வீரர் சிட்சிபாஸை வீழ்த்தினார்.
முதல் இரண்டு செட்களை சிட்சிபாஸிடம் பறிகொடுத்தார் ஜோகோவிச்.
அடுத்த மூன்று செட்களை 6 - 3, 6 - 2, 6 - 4 என கைபற்றி ஜோகோவிச் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றார்.
இது அவர் வென்றுள்ள 19 வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.
பிரெஞ்ச் ஓபன் தொடரில் அவர் வென்றுள்ள இரண்டாவது பட்டமாகும்.
* சர்ச்சைக்குரிய சமூக வலைத்தள பதிவர் கிஷோர் கே சாமி கைது!
முதலமைச்சர் முக ஸ்டாலின் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, அண்ணாதுரை ஆகியோரைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பியதாக திமுக குற்றம் சாட்டியதன் அடிப்படையில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த சங்கர் நகர் காவல்துறை கிஷோர் கே சாமியை கைது செய்தனர்
* பொதுமக்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்:
ஊரடங்கை கடைபிடிக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டிய கடமை மக்களுக்கு உள்ளது.
கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்பு தான் காரணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
டாஸ்மாக் கடைகளில் கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் தளர்வுகள் திரும்பப் பெறப்படும்.
போலி மது, கள்ள மது தமிழ்நாட்டை சீரழித்துவிடக்கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது.
டாஸ்மாக் கடைகள் முழுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றி இயங்கும்.
காவல்துறை கண்காணிப்பு இல்லாமலேயே மக்கள் கட்டுப்பாட்டோடு நடந்துகொள்ள வேண்டும்.
முழு ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மக்கள் நடந்துகொள்ள வேண்டும்.
பொதுப்போக்குவரத்து விரைவில் இயக்கப்படவேண்டும்; பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும்: - முதல்வர் ஸ்டாலின்.
* தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம்.
* பிற சாதியினர் அர்ச்சகர் பணி செய்ய அனுமதிக்கும் அரசின் முடிவை வரவேற்பதாக தமிழக பாஜக அறிக்கை
* முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.காமராஜ் ஆகியோருக்கு எதிராக தற்போதைய அவைத்தலைவர் அப்பாவு தொடர்ந்த வழக்குகளை திரும்பப் பெற்றார்
💥ஒரே டுவிட்டர் பதிவால் ஆசியாவின் இரண்டாவது பெரும் பணக்காரர் என்ற பெருமையை இழந்த கௌதம் அதானி
மூத்த ஊடகவியலாளர் சுசிதா தலாலின் இந்த டுவிட்டை தொடர்ந்து அதானி குழுமத்தின் அனைத்து பங்குகளும் கடும் வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன
* டாக்சிக் மதனின் யூடியூப் சேனலை முடக்க யூடியூப் நிறுவனத்திற்கு காவல்துறை கடிதம்
* நீட் தேர்வு விவகாரம் தொடர்பான ஆலோசனைக்கு பிறகு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் பேட்டி
நீட் தேர்வால் தமிழ்வழி கல்வி பயின்றோருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த தரவுகள் திரட்டப்படுகிறது.
வரும் திங்கட்கிழமை மீண்டும் ஆலோசனை நடத்தப்படும் - ஏ.கே.ராஜன்.
* விலங்குகளுக்கு உணவு கிடைக்க திட்டம் தேவை. நீதிமன்றம்
தெருவிலங்குகளின் பாதுகாப்பு, நாய்களுக்கான கருத்தடை நடைமுறையை மனிதாபிமான அடிப்படையில் செய்வதற்கு திட்டம் வகுக்க வேண்டும் - நீதிமன்றம்.
* நடிகர் செந்தில் தனது பெயரில் போலியாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகள் தொடங்கி, முதலமைச்சரை டேக் செய்து தான் சொல்லாத கருத்துக்கள் பதிவிடப்படுகின்றன - நடிகர் செந்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.
சாதாரண கணக்கே எனக்கு தெரியாது,
சமூக வலைதளத்தில் கணக்கு எப்படி இருக்கும்.
* கொரோனா தொற்று குறைந்துள்ளதால் நாடு முழுவதும் உள்ள நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்டவை 16ம் தேதி முதல் திறக்கப்படவுள்ளன -மத்திய தொல்லியல் துறை அறிவிப்பு.
* முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.காமராஜ் ஆகியோருக்கு எதிராக அப்பாவு தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் இருந்து 3 லட்சத்து 72 ஆயிரத்து 412 தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்துவதில் முறைகேடு செய்ததாக அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராகவும், ரேசன் அரிசியை நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி அதிக விலைக்கு விற்பனை செய்ததாக, அப்போதைய உணவுத்துறை அமைச்சர் காமராஜ்-க்கு எதிராகவும் தற்போதைய சபாநாயகர் அப்பாவு புகார் அளித்திருந்தார்.
இந்த மூன்று வழக்குகளும் இன்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது சபாநாயகர் அப்பாவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மூன்று வழக்குகளையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனுவை திரும்பப் பெற அனுமதித்து மூன்று வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
* அதிமுக சட்டமன்றக்கட்சியின் புதிய நிர்வாகிகள்
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் தலைமையில்
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம்
கொறடாவாக S.P. வேலுமணி
சட்டமன்ற துணைக் கொறடாவாக அரக்கோணம் திரு. சு.ரவி
சட்டமன்ற பொருளாளராக திரு.கடம்பூர் C.ராஜூ
சட்டமன்ற செயலாளராக திரு.K.P.அன்பழகன்
சட்டமன்ற துணைச் செயலாளராக திரு.B.H.மனோஜ் பாண்டியன்
ஆகியோர் தேர்வு
* அதிமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கி ஓ.பி.எஸ். - இ.பி.எஸ் கூட்டாக அறிவிப்பு.
அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமகவை விமர்சித்து புகழேந்தி நேற்று பேட்டியளித்த நிலையில், இன்று கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை.
* சசியுடன் போனில் பேச்சு: 15 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்.
உழைப்பை சுரண்டும் ஒட்டுண்ணிகள், நற்பெயரை அழிக்கும் நச்சுக்கள்- சசிகலா மீது அதிமுக கடும் விமர்சனம்.
சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய
முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உள்ளிட்ட 15பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்.
* தமிழ்நாட்டில் மேலும் 39 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு:
மனித உரிமை ஆணைய செயலாளராக விஜயகார்த்திகேயன் நியமனம்.
பதிவுத்துறை ஐ.ஜியாக இருந்த சங்கர் காதி கைவினைப்பொருள் ஆணைய சி.இ.ஓ.வாக நியமனம், நாமக்கல் முன்னாள் ஆட்சியர் மேக்ராஜ் நகராட்சி நிர்வாகத்துறை இணை செயலாளராக நியமனம்.
கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநராக டி.பி.ராஜேஷ், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை இணைச்செயலாளராக எஸ்.பழனிசாமி, அறிவியல் நகர துணைத்தலைவராக மலர்விழி நியமனம்.
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநராக ஹரிஹரன், நிதித்துறை இணை செயலாள்ராக அருண் சுந்தர் தயாளன், பட்டுப்புழு வளர்ச்சி இயக்குநராக சாந்தி நியமனம்.
* ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு:
பள்ளிகளில் பல்வேறு பணிகள் நடைபெற இருப்பதால், ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதற்கு கல்வித்துறை ஆணையர் உத்தரவு.
* மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை.
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கவுள்ளதாக தகவல்.
💥காவிரி டெல்டா பகுதிகளில் Hydrocarbon ஏலம் மீண்டும் அறிவிக்கப்பட்டிருப்பது 2020- பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்திற்கு எதிரானது. அறிவிப்பை நடுவண் அரசு திரும்பப்பெற கோரி முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை
* புதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல், அனைத்து அரசு அலுவலகங்களும் முழுமையாக இயங்கும் என அரசு அறிவிப்பு.
* 6 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக லாபம் ஈட்டியுள்ள சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி!
* புதுச்சேரியில் குறைந்து வருகிறது கொரோனா வெருவிப் பரவல்!
5% க்கும் கீழ் குறைந்தது புதுச்சேரியில் கொரோனா பொதிவு விகிதம்!
புதிதாக இன்று 309 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 பேர் உயிரிழப்பு.
* தமிழகத்தில் இன்று 12,772 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 254 பேர் உயிரிழப்பு மற்றும் 25,561 பேர் டிஸ்சார்ஜ்.
தற்போது 1,36,884 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
* புதுக்கோட்டை மாவட்ட புதிய ஆட்சியராக கவிதா ராமு நியமனம். இவர் சிறந்த நாட்டிய கலைஞர்.
சீன அதிபர் சென்னை வந்திருந்தபோது கலை நிகழ்ச்சிகளை மிக குறுகிய நேரத்தில் ஏற்பாடு செய்து பிரதமர் மோடியின் பாராட்டை பெற்றவர்
💥SBI வங்கியில் கணக்கு வைத்திருப்பவரா நீங்கள்!?
SBI வங்கி பெயரில் பொய்யாக புதியதொரு மோசடி நடைபெற்று வருகிறது.
"உங்கள் SBI கணக்கு முடக்கப்பட்டது எனவும் அருட்கூர்ந்து தங்களது KYC விவரங்களை புதுப்பிக்க கீழ் கண்ட இணைப்பை சொடுக்கவும்" என ஒரு குறுஞ்செய்தி இணையத் திருடர்களால் பகிரப்பட்டு வருகிறது. அதில் உள்சென்று உங்களது கணக்கு விவரங்களை கேட்டு ஒரு கூட்டம் பணம் பிடுங்கி வருகிறது.
அதுபோன்றதொரு குறுஞ்செய்திகளை வங்கி சார்பில் அனுப்பப்படுவதில்லை.
இது போன்ற போலி செய்திகள், இணைப்புகள் மற்றும் அறிவிப்புகள் குறித்து மேலும் தெரிந்து கொள்ள அருகில் உள்ள வங்கிக்கிளையை நேரில் சென்று அணுகவதே பாதுகாப்பானது.
No comments:
Post a Comment