அக்னிப்புரட்சி இன்றைய (15.06.2021) முக்கிய செய்திகள்.
💥தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மட்டும் இன்று மது விற்பனை தொடங்கிய நிலையில் இன்று ஒரே நாளில் ₹165 கோடிக்கு மது விற்பனை.
முதலிடத்தில் மதுரை மண்டலம் ₹50 கோடிக்கு மது விற்பனை செய்துள்ளது.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.97.69 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.91.92 க்கும் விற்பனை.
* மாவட்ட கலெக்டர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை:
தமிழக மாவட்டங்களில் நடைபெறும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
* தமிழகத்தில் ரேசன் கடைகளில் இன்று முதல் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது.
கொரோனா நிவாரணத்தின் 2-வது தவணையாக 2000 ரூபாய் பெற்றுக்கொள்ளலாம்.
* சென்னை: கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபாவை கைது செய்ய சிபிசிஐடி தனிப்படை போலீசார் டேராடூன் விரைந்தனர்.
டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிவசங்கர் பாபா சிகிச்சை பெற்று வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, தனிப்படை டேராடூன் விரைந்தது.
* கோயில் நிலங்களின் உரிமை ஆவணங்களை தொடர்ந்து திருக்கோயில்களின் வரவு-செலவு விவரங்கள் பொதுமக்களின் பார்வைக்கு இணையத்தில் பதிவேற்றப்பட உள்ளன.
இதற்கான அறிவிப்பை இந்து சமய அறநிலையத்துறை விரைவில் வெளியிட உள்ளது
* தற்போது பல்நோக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக இருந்து வரும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கட்டிய தலைமை செயலக கட்டடத்தை புதிய அரசு மீண்டும் தலைமை செயலகமாக மாற்ற திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.
* சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, 10 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வு மற்றும் 12-ம் வகுப்பு உள்ளீட்டு தேர்வு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க திட்டம்.
3 மதிப்பெண்களையும் சேர்த்து வெயிட்டேஜ் முறை அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க பரிசீலனை.
* தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த மேலும் கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பில்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி.
மின் கட்டணத்திற்கு ஏற்கனவே போதுமான அளவு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது - செந்தில் பாலாஜி
* நாளை மாலை டில்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின், 17, 18ம் தேதிகளில் பிரதமர் மோடி உட்பட் பல தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்:
நாளை மாலை டில்லி வரும் ஸ்டாலின், 17, 18ம் தேதிகளில் பலரை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, மாநிலத்தின் தேவைகள் குறித்து பேச உள்ளார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவையும் அவர் சந்திக்கிறார்.
மத்திய அமைச்சர்கள் சிலரையும் சந்திக்கிறார்.
அரசியல் ரீதியில், காங்., தலைவர் சோனியா, முன்னாள் தலைவர் ராகுல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோரை சந்திக்க உள்ளார்.
* முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ 25 லட்சம் வழங்கினார்.
* சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினார்.
* புதுச்சேரி சட்டசபை சபாநாயகராக செல்வம் தேர்வு:
புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ., செல்வம் போட்டியின்றி தேர்வு.
* கொரோனா 3வது அலை - புதிய உத்தரவு.
ஒவ்வொரு குழந்தைகள் மருத்துவமனைகளிலும் 100 படுக்கைகள் தயாராக இருக்க வேண்டும்.
கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
குழந்தைகள் மருத்துவர், செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்பட வேண்டும்.
குழந்தைகள் பிரிவில் 4ல் 1பகுதி செவிலியர்களை அவசர கால பணிக்காக தயார் படுத்திடவேண்டும்- தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநர்.
கொரோனா 3-வது அலையில் 18 வயதுக்குட்பட்டவர்கள் பாதிக்கப்படுவார்கள் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
* நியாய விலைக் கடைகளில் இன்று முதல் 14 பொருட்கள் அடங்கிய மாளிகை தொகுப்பு மற்றும் ₹2000 வழங்கப்படுகிறது.
* திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் சிறைவைக்கப்பட்ட ஐசரி கணேஷ்!
முருகன் கோயிலை சட்டத்திற்கு புறம்பாக கடந்த 8 நாட்களாக EO நாராயணன் மூலம் திறந்து குடும்பத்தோடு பூசை நடத்தியதாக குற்றச்சாட்டு.
இன்று கோயிலுக்குள் சென்றவரை ஊர் மக்கள் பூட்டி சிறை வைத்துள்ளனர்.
* நாடு முழுவதும் ஒரு நாள் கொரோனா வெருவி பாதிப்பு எண்ணிக்கை 60,000 ஆக குறைந்தது...
* மத்திய அரசுக்கு ரூ.150 விலையில் கோவாக்சின் தடுப்பூசியை தொடர்ந்து வழங்க முடியாது - பாரத் பயோடெக் நிறுவனம்.
மத்திய அரசுக்கு போட்டியில்லாதா விலையான ரூ.150-க்கு கோவாக்சின் வழங்கப்படுவதாக பாரத் பயோடெக் விளக்கம் கொடுத்துள்ளது.
இதர செலவுகளை ஈடுகட்ட தனியார் சந்தையில் கூடுதல் விலையில் கோவாக்சின் விற்பனை செய்யப்படுகிறது என பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது.
* கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பொறுப்புகளில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க மாவட்ட ஆட்சி தலைவர்கள் தங்களது அதிகாரத்தை, பதவியை பயன்படுத்தி தங்களது கடமையை ஆற்ற வேண்டும்- புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் பேச்சு
* வரம்பு மீறிய வழக்கறிஞர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
பார் கவுன்சில் அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞரின் முன்ஜாமின் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வரம்பு மீறிய வழக்கறிஞர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பார் கவுன்சில் அறிக்கை அளிக்க உத்தரவு.
* கூட்டுறவு சங்கம் - தமிழக அரசு உத்தரவாதம்:
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகங்களை கலைக்கப் போவதில்லை-சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம்.
💥லோக் ஜன சக்தியின் கட்சித் தலைவர் பதவியிலிருந்து சிராஜ் பஸ்வான் நீக்கப்பட்டார்
அமைச்சர் செந்தில்பாலாஜியை அவதூறாக பேசிய வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு மீண்டும் சிறை, மற்றவர்கள் பிணையில் விடுவிப்பு
* கொரோனா பரவல் குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நகர பேருந்துகள் மட்டும் இயக்க தமிழக முடிவு.
மாவட்டத்திற்குள் மட்டும் 50% பேருந்துகளை இயக்க முடிவு. இந்த வார இறுதிக்குள் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!
💥அரசுப்பள்ளி மாணவர்களின் நலன் கருதி பொறியியல் , வேளாண்மை, மீன்வளம், சட்டம், கால்நடை உள்ளிட்ட படிப்புகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தில்லி உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு
* இரயில்கள் ரத்து
பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக வண்டி எண் 02667/02668 நாகர்கோவில் - கோயம்புத்தூர் - நாகர்கோவில் இரவு நேர சிறப்பு ரயில்,
வண்டி எண் 06729/06730 மதுரை - புனலூர் - மதுரை சிறப்பு ரயில்,
வண்டி எண் 06101/06102 சென்னை எழும்பூர் - கொல்லம் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்,
வண்டி எண் 06019/06020 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மதுரை - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்,
வண்டி எண் 06063/06064 சென்னை எழும்பூர் - நாகர்கோவில் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்,
வண்டி எண் 06065/06066 தாம்பரம் - நாகர்கோயில் - தாம்பரம் சிறப்பு ரயில்,
தஞ்சாவூர் மெயின் லைன் வழியாக இயக்கப்படும் வண்டி எண் 06157/06158 மதுரை - சென்னை எழும்பூர் - மதுரை சிறப்பு ரயில்,
வண்டி எண் 06343/06344 திருவனந்தபுரம் - மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா சிறப்பு ரயில்,
தஞ்சாவூர் மெயின் லைன் வழியாக இயக்கப்படும் வண்டி எண் 06851/06852 சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஆகியவை
ஜூன் 30 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
💥தமிழகத்தில் இன்று மேலும் 11,805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
267 பேர் உயிரிழப்பு
23,207 பேர் மீண்டனர்
* விராலிமலையில் அதிமுகவின் விஜயபாஸ்கர் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி திமுக வேட்பாளர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு.
வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்ட எண்களில் மாறுபாடு இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
* திருப்பதி கோவிலில் 22 ,23, 24 தேதிகளுக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள் ஆன்லைனில் நாளை வெளியிடப்படும்.
ஒரு நாளைக்கு 5 ஆயிரம் டிக்கெட்கள் என 15 ஆயிரம் டிக்கெட்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் - தேவஸ்தானம் அறிவிப்பு .
No comments:
Post a Comment