அக்னிப்புரட்சி இன்றைய (18.06.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் விலை 23 காசுகள் உயர்ந்து லிட்டர் 98.14 ரூபாய்க்கும், டீசல் விலை 27 காசுகள் உயர்ந்து லிட்டர் 92.31 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
*அசாம், மேகாலயா மாநிலங்களில் அதிகாலையில் லேசான நில நடுக்கம்:
அசாமில் அதிகாலை 2.04 மணிக்கு 4.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம்.
மேகாலயாவின் மேற்கு காஜி பகுதியில் அதிகாலை 4.20 மணிக்கு 2.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு.
* தவறான செய்திகளுக்கு நிறுவனங்களையே பொறுப்பாக்கும் CTN Rules 2020 அமல்படுத்தப்பட்டது..
* சிவசங்கர் பாபாவுக்கு எதிராக புகார்கள் கொடுக்க வேண்டும் என்றால் புலன்விசாரணை அலுவலர் குணவர்மன் அவர்களின் தொலைபேசி எண். 98405 58992 மற்றும் மின்னஞ்சல் inspocu2@gmail.com -ல் குற்றச்சாட்டுகள் பதியலாம்
* கல்வித் தொலைக்காட்சியில் புதிய கல்வி ஆண்டுக்கான பாடங்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்குவது போன்றவற்றை நாளை துவக்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
* குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியதற்காக UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாணவர்கள் திகார் சிறையில் இருந்து விடுதலை
* கொரோனாவால் ஒரு உயிர் கூட பலியாகாத நிலை வரும்போதுதான் கோவில்கள் திறப்பு- அமைச்சர் சேகர் பாபு.
கோவில் நகைகள் குறித்த விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய முடியாது.
பாதுகாப்பு பிரச்சினைகள் வரும் என்பதால் ஆபரண விவரங்களை வெளியிட முடியாது- சேகர் பாபு.
*:அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவரை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
ஒரு தனிப்படை மதுரை சென்று உள்ள நிலையில், மற்றொரு தனிப்படையினர் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* டெல்லியில் சோனியாகாந்தி, ராகுல் உடன் முதல்வர் மு.க ஸ்டாலின் சந்திப்பு.
மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
மு.க ஸ்டாலின் உடன் அவரது மனைவி துர்காவும் உடன் சென்றுள்ளார்.
* யூ டியூபில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வந்த பப்ஜி மதன் கைது.
போலீசாரால் தேடப்பட்டுவந்த யுடியூபர் மதன் தர்மபுரியில் கைது செய்யப்பட்டார்.
* தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை.
மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை.
ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு வரும் 21ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் நாளை ஆலோசனை.
பேருந்து சேவைக்கு அனுமதி உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது தொடர்பாக நாளை ஆலோசனை.
* நல வாரியத்தில் பதிவு செய்யாத 3ஆம் பாலினத்தவருக்கும் கொரோனா நிவாரண நிதி-சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.
குடும்ப அட்டை இல்லாத 3ஆம் பாலினத்தவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கக் கோரி வழக்கு.
அரசின் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தவறாக பயன்படுத்த கூடாது- தலைமை நீதிபதி.
உண்மையான மூன்றாம் பாலினத்தவர்களின் பெயர், முகவரியை அளிக்க வேண்டும்-மனுதாரர் கிரேஸ் பானுவுக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு.
* அகில இந்திய காங்கிரசு கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி- முதலமைச்சர் ஸ்டாலின் தில்லியில் சந்திப்பு
* தமிழ்நாடு மின் மானுறுத்தம் மற்றும் பகிர்மானக் கழகத்தின் கடன் சுமை மட்டும் 1 லட்சத்து 33ஆயிரம் கோடி என தகவல் வெளியாகியுள்ளது
* தமிழ்நாடு அரசு வழங்கும் ₹4000 உதவித்தொகையை நடுவண், மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்க தடை விதிக்க கோரி வழக்கு
* செங்கல்பட்டு சிறையில் இருந்த சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு:
செங்கல்பட்டு சிறையில் இருந்த சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு- செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி.
போக்சோ வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்த நிலையில் சிவசங்கர் பாபாவுக்கு திடீர் உடல் நலக் குறைவு.
* காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் தனுஜா ராஜனுக்கு முன் ஜாமின் மறுப்பு.
வழக்கறிஞர் மகளுக்கு முன் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
தவறு செய்யும் வழக்கறிஞர் மீது பார் கவுன்சில் தாமாக முன் வந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விதிகளை கொண்டு வரவேண்டும்- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.
* பெண்கள் தங்கள் புகைபடத்தை Facebook, Instagram, Whatsapp போன்ற சமூக வலைதளத்தில் பதிவிடுவதை தவிர்க்கவும் என கோவை மாவட்ட Cyber குற்றப்பிரிவு காவல்துறை வேண்டுகோள்
* காடுகள், புலிகள் சரணாலயம், தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களில் உள்ள விலங்குகளை பாதுகாத்து கண்காணிக்க சுற்றுச்சூழல் துறை முதன்மை செயலர் தலைமையில் மாநில அளவிலான பணிக்குழுவை ஏற்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு
💥NEET தேர்வுக்கு அரசு சார்பில் பயிற்சி தொடர்ந்து வழங்கப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவிப்பு
NEET விலக்கை பெறுவதில் அரசு உறுதியாக உள்ளது, ஒருவேளை அரசின் நடவடிக்கைகளை மீறி நடுவண் அரசு NEET தேர்வை நடத்தினால் மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதால் அரசு பள்ளியில் கொடுக்கப்படும் NEET பயிற்சி தொடர்ந்து அளிக்கப்படும்.- மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
* கருப்பு பூஞ்சை சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்தின் உள்நாட்டு உற்பத்தி மூன்று மாதங்களில் ஐந்து மடங்கிற்கும் மேலாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் திரு Mansukh Mandviya கூறியுள்ளார்!
* சென்னை மக்களே: நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு...
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக, இதுவரை பராமரிப்புப் பணிகளுக்காக மின்தடை அறிவிக்கப்படாத நிலையில், சென்னையில் நாளை முதல் அந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.
இது குறித்து மின்சார வாரியம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சென்னையில் 19.06.2021 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 01.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
பட்டாபிராம் பகுதி : ராஜிவ்காந்தி நகர், லட்சுமி நகர், பாலாஜி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
திருமுல்லைவாயில் பகுதி : லட்சுமிபுரம் கோனிமேடு, காந்திநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்
மணலி புதுநகர் பகுதி: மணலி நியூ டவுன், கே.ஜி.எல் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்
மேலூர் பகுதி : பட்டமந்திரி, வள்ளுர், அத்திப்பட்டு.
அடையார் பெசன்ட் மற்றும் அடையார் சாஸ்திரி நகர் பகுதி: டி.எம்.எம். தெரு, அண்ணா காலனி, வண்னன்துரை, எம்.ஜி ரோடு, லட்சுமிபுரம்.
வேளச்சேரி மேற்கு மற்றும் மையப் பகுதி : 100 அடி சாலை, லட்சுமி நகர், எம்.ஜி.ஆர். நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.
வேளச்சேரி கிழக்கு பகுதி : டான்சி நகர், அண்ணா நகர், அண்ணா நகர் விரிவு, அன்னை இந்திரா நகர், VGP செல்வா நகர் மற்றும் விரிவு, பாலமுருகன் நகர், வீணஸ் காலனி.
ஐ.டி கோரிடர் பகுதி: ஈ.டி.எல். பகுதி, சோளிங்கநல்லூர் பகுதி, தரமணி பகுதி, துரைப்பாக்கம் பகுதி, எழில் நகர் பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
புழல் பகுதி : வள்ளுவர் நகர், பாரதிதாசன் நகர் மற்றும் சுற்றியுள்ளபகுதிகள்.
ஸ்டான்லி பகுதி : அம்பேத்கார் நகர், ஸ்டான்லி நகர், ஜெயராம் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
சைதாப்பேட்டை பகுதி; ரெங்கராஜாபுரம், தாமஸ் நகர், காக்கன்புரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
போரூர் பகுதி : கெருகம்பாக்கம், போரூர், காரம்பாக்கம், மாங்காடு, குன்றத்துhர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
நீலாங்கரை பகுதி : ப்ளு பீச் ரோடு, சீ வியுவ் அவென்யூ, கேசுரினாடிரைவ் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
பாலவாக்கம் பகுதி : சின்ன நீலாங்கரிகுப்பம், ரங்கரெட்டிகார்டன், மேட்டு காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
கிண்டி பகுதி : மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், டி.ஜி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
கே கே நகர் பகுதி: அசோக் நகர், கே.கே நகர், வடபழனி, அழகிரி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
அம்பத்தூர் பகுதி; புளியம்பேடு, தேவிநகர், சூசைநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
* இரண்டு ஆண்டுகளில் இரண்டு முறை தள்ளிப்போய் திரையரங்கில் வெளிவர போராடும் தேசிய விருதுகள் வென்ற மலையாள திரைப்படமான "மறக்கார்" இந்த ஆண்டு ஆகஸ்ட் 12 இல் வெளிவரும் என படக்குழுவினர் அறிவிப்பு
* தில்லியில் விளையாட்டு வீரர் மகேந்திர சிங் தோனியை சந்தித்த திமுக பொதுச்செயலாளர் மற்றும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
* 2021 க்கான விளையாட்டு விருதுகள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசி தேதியை ஜூன் 28 வரை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நீட்டித்துள்ளது!
* விழுப்புரம் , கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களில் 46 ஆய்வாளர்கள் அதிரடி இடமாற்றம் செய்து விழுப்புரம் சரக DIG பாண்டியன் உத்தரவு
* தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டு ஒவ்வொரு மாதமும் 10 ஆம் தேதிக்குள் அறிக்கை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம்
* Cement, செங்கல் உட்பட கட்டுமான பொருட்கள் சமையல் பொருள்கள், காய்கறிகள் விலை அதிகரித்து விட்டது
விலைவாசி உயர்வால், அனைத்து தரப்பு மக்களும் விழிபிதுங்கி நிற்கிறார்கள்
தமிழ்நாடு அரசு விலைவாசி உயர்வை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் - பாஜக தலைவர் எல்.முருகன் வேண்டுகோள்
* பொறியியல், கால்நடை, வேளாண்மை, மீன்வளம் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஏன் குறைவாக உள்ளது?
அதிகரிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன?
ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையிலான ஆணையம் கலந்தாய்வு
💥தமிழகத்தில் இன்று மேலும் 8,633 பேருக்கு கொரோனா வெருவித் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
287 பேர் உயிரிழப்பு
19,860 பேர் மீண்டனர்
* மலைக்கோட்டை, உழவன் உள்ளிட்ட 10 ரயில்கள் மீண்டும் இயங்க அனுமதி: தென்னக ரயில்வே போக்குவரத்துத்துறை அறிவிப்பு
* திறமை வாய்ந்த உலக தலைவர்களின் பட்டியலில் 66% ஆதரவை பெற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம்
* இந்தியா - நியூசிலாந்து இறுதிச்சுற்று: மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து.
மழை காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சௌதாம்ப்டனில் காலை முதலே பெய்து வரும் மழையால் முதல் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
மழை தொடர்ந்து பெய்வதால் முதல் நாள் ஆட்டத்தை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்.
* மேகதாது அணை கட்டும் முடிவை நிறுத்த வேண்டும் - கர்நாடக அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை.
மேகதாது அணையை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது - ஸ்டாலின் அறிக்கை.
* ₹2000 இழப்பீடு மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்க ஆணையிடப்பட்டுள்ள நிலையில், நியாய விலைக்கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களால் திறப்பதில் சிக்கல் உள்ளது. இப்பிரச்சனைக்கு தீர்வுகான கூட்டுறவு சங்க பணியாளர்களை நியாய விலை கடையில் பணியாளராக நியமிக்க அரசு ஆணை
* 21ம் தேதி திங்கள் கிழமையன்று திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்-கொறடா கோவி.செழியன் அறிவிப்பு.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு.
No comments:
Post a Comment