அக்னிப்புரட்சி இன்றைய (20.06.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (20.06.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (20.06.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்து லிட்டர் 98.40 ரூபாய்க்கும், டீசல் விலை 27 காசுகள் உயர்ந்து லிட்டர் 92.58 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

* பாலியல் புகாரில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன், பெங்களூருவில் கைது.

சாந்தினிஎன்ற துணை நடிகையை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், கட்டாயக் கருக்கலைப்பு செய்ததாகவும் மணிகண்டன் மீது புகார்.

துணை நடிகை அளித்த புகாரில் மணிகண்டன் மீது 6 பிரிவுகளில் அடையாறு மகளிர் போலீசார் வழக்கு.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது.

* COVISHIELD தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு குருதி உறைதல் பிரச்சனை தொடர்பான சோதனை நடத்த வேண்டும் என்று கடந்த மே 17 ம் தேதி நடுவண் அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது

ஆனால் இந்த கடிதத்தை அரசுகள் இதுவரை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

💥மின்தடை எங்கேயும் ஏற்பட வாய்ப்பு இல்லை!

சில இடங்களில் பழுது ஏற்படுகிறது அதனால்தான் சில இடங்களில் மின்தடை ஏற்படுகிறது; அதனை உடனே சரிசெய்யும் நடவடிக்கை மேற்கொள்ளபடுகிறது. மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை உருவாக்குகிறார்கள் - தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி

* ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு மீண்டும் மாநில தகுதி அளிப்பது தொடர்பாக, ஒரு ஆண்டுக்கும் மேலாக வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்கள் மேகபூபா, அப்துல்லா உள்ளிட்ட 14 பிற கட்சித் தலைவர்களை அழைத்து வரும் 24 ஆம் தேதி கலந்தாய்வு மேற்கொள்ள விருப்பதாக நடுவண் அரசு அறிவிப்பு

* தற்போதைய சூழலில் பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைக்க சாத்தியமில்லை -  தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.தியாகராஜன்.

1 லிட்டர் பெட்ரோலுக்கு 10ரூ ஆக இருந்த வரியை, 32.90 பைசாவாக ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது.

ரூ32.90 பைசா வரியில், ரூ31.50 பைசாவை ஒன்றிய அரசு எடுத்துக் கொள்கிறது.

ரூ1.40 பைசா மட்டுமே மாநில அரசுக்கு, ஒன்றிய அரசு வழங்குகிறது.

பெட்ரோல் - டீசல் மூலம் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ரூ.360 கோடி  வருவாய் குறைந்துள்ளது.

பெட்ரோல்-டீசல் மீதான வாட் வரியை தமிழ்நாடு அரசு குறைத்தால், அதனை ஒன்றிய அரசுக்கு விட்டுக் கொடுப்பது போன்றதாகும்.

தமிழ்நாட்டில் ஒருவர் 1ரூபாய் வரி செலுத்தினால், அதில் வெறும் 4பைசா மட்டுமே தமிழ்நாடு அரசுக்கு கிடைக்கிறது - தமிழ்நாடு நிதியமைச்சர்.

* தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 28 வரை ஊரடங்கு நீட்டிப்பு.

மாவட்டங்களை மூன்று வகைகளாக பிரித்து தளர்வுகள் அறிவிப்பு.

மளிகை, பலசரக்கு, காய்கறிகள், இறைச்சி விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படலாம்.

தொற்று அதிகமுள்ள கோயம்முத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 11மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் இல்லை; நடைமுறையில் உள்ள தளர்வுகளே தொடரும்-தமிழக அரசு.

மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில், மாவட்டங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வகை 1 - (11 மாவட்டங்கள்)
கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள்.

வகை 2 - (23 மாவட்டங்கள்)
அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்.

வகை 3-  (4 மாவட்டங்கள்)
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்.

* பொதுமக்கள் மின்துறை சார்ந்த தங்கள் குறைகளைத் தெரிவித்து, தீர்வுகாண்பதற்கான "மின்னகம் 24x7" நுகர்வோர் சேவை மையத்தினை, சென்னை TANGEDCO அலுவலகத்தில் இன்று முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதன்மூலம் 9498794987 என்ற எண்ணில் அழைத்து பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கு எளிதில் தீர்வுகாணலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் இடையே பொது பேருந்து போக்குவரத்து 50% இருக்கைககுடன் பயணிக்க அனுமதி

டெல்டாவிற்கு அடுத்த படியாக பி1 வகை மற்றும்,  ஆல்பா வகை வெருவித் தொற்று அதிகம் கண்டறியப்பட்டுள்ளது.

* பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வுக்கு நுழைவுச் சீட்டை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது

💥தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக செல்வப்பெருந்தகை தேர்வு!

துணைத் தலைவராக ராஜேஷ்குமார்
கொறடாவாக விஜயதரணி
துணை கொறடாவாக ஆசன் மௌலானா ஆகியோர் தேர்வு.

செயலாளராக  R.M.கருமாணிக்கமும்
பொருளாளராக R.ராதாகிருஷ்ணனும் நியமனம்.

* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்.

* சென்னையில் மெட்ரோ ரயில்கள் நாளை முதல் காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என அறிவிப்பு!

வழித்தடங்களை பொறுத்து 5 முதல் 10 நிமிட கால இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். - மெட்ரோ ரயில் நிர்வாகம் .

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7,817 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

182 பேர் உயிரிழந்து உள்ளனர். 17,043 பேர் குணமடைந்து உள்ளனர்.

* முதல்வருடன் புதுச்சேரி & தெலங்கானா மாநிலங்களின் ஆளுநர் தமிழிசை சந்திப்பு

* ஆண்ட்ராய்டு போன்களை தாக்கும் ஜோக்கர் மால்வேர் - 8 செயலிகளை அன்இன்ஸ்டால் செய்யுமாறு பயனாளர்களுக்கு அறிவுறுத்தல்!

கூகுள் பிளேஸ்டோரில் உள்ள 8 செயலிகளை ஜோக்கர் மால்வேர் என்ற மென்பொருள் தாக்குவதால் அவற்றை ஸ்மார்ட் போன்களில் இருந்து உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுமாறு Quick Heal Security Labs எச்சரித்துள்ளது.

Auxiliary Message, Fast Magic SMS, Free CamScanner, Super Message, Element Scanner, Go Messages, Travel Wallpapers, Super SMS ஆகிய இந்த 8 செயலிகளும் கூகுள் பிளேஸ்டோரில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளன.

எனினும் இவற்றை பதிவிறக்கம் செய்து வைத்திருப்பவர்கள் அவற்றை உடனே அன்இன்ஸ்டால் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆண்ட்ராய்டு போன்களின் செயல்பாட்டை ஜோக்கர் மால்வேர் முடக்கி, பயனாளர்களின் போன், எஸ்எம்எஸ், OTP உள்ளிட்ட தரவுகளை திருடும் திறன் வாய்ந்ததாக சொல்லப்படுகிறது.

* படிப்பு மற்றும் வேலை காரணமாக வெளி நாடு செல்பவர்கள் 2 டோஸ்  கோவிஷீல்டு தடுப்பூசி பெற தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் அறிவிப்பு

28 நாட்களிலேயே இரண்டாவது டோஸ் Covishield Vaccine போட்டுக்கொள்ளலாம் என மருத்துவத் துறை செயலாளர்  அண்மையில் அறிவித்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

* PUBG விளையாடுவதை நிறுத்துங்கள். பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்துங்கள். நன்கு படியுங்கள்... - பாலியல் குற்றச்சாட்டில் கைதான மதனின் யூடியூப் பக்கம் காவல்துறையால் முடக்கப்பட்டு மேற்கண்ட செய்தி காண்பிப்பு

* தஞ்சாவூர்: நாளை 21st June 21 திங்கள்.

COVISHIELD
2nd Dose முன்னுரிமை
( 84நாட்கள் முடிந்தவர்களுக்கு )
அண்ணா மண்டபம் பழைய பேருந்து நிலையம் காலை 5 மணிக்கு சென்று
டோக்கன் பெற்றுக் கொள்ளவும். கூட்டம அதிகமாக இருந்தால் அங்கே காத்திருக்கவேண்டாம்.
இரண்டு தினங்கள் மட்டும் பொருத்துக் கொள்ளவும்.

COVAXIN

இல்லை
யாரும் அதற்காக அலைய வேண்டாம்.

உங்களது ஆதார் நகலை எடுத்துக் கொண்டு செல்லவும் முக கவசம் சமூக இடைவெளியை பின்பற்றவும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages