அக்னிப்புரட்சி இன்றைய (27.06.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் விலை 30 காசுகள் அதிகரித்து லிட்டர் பெட்ரோல் 99.49 ரூபாய்க்கும், டீசல் விலை 23 காசுகள் அதிகரித்து லிட்டர் டீசல் 93.46 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் பெட்ரோல் லிட்டர் 100 ரூபாயை தாண்டியது.
* கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 65 வகையான PG, PG Diploma, Certificate படிப்புகளில் சேர b-u.ac.in இணையதளத்தில் ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்
* கொரோனா தொடர்பான பெற்றோர்களின் அச்சம் குறைந்த பிறகே, பள்ளி திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
மருத்துவம் படிக்க விரும்புவோர் NEET தேர்வுக்கு மாணவர்கள் கட்டாயம் ஆயத்தமாக வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
* சமூக வலைதள பதிவர் கிஷோர்.கே.சுவாமி, PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலை தொடர்ந்து, தடகள பயற்சியாளர் நாகராஜன் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது
தடகள பயிற்சி வீராங்கணைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கைதானவர் நாகராஜன் என்பது குறிப்பிடத்தக்கது
*:சென்னையைச் சேர்ந்த பவானி தேவி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளார்: மன்கிபாத் நிகழ்ச்சியில் நரேந்திர மோடி தகவல்
மிகப் பழமையான தமிழ் மொழியின் பெருமை குறித்து ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும்
நான் தமிழ்மொழியின் மிகச்சிறந்த பற்றாளன். தமிழ் மொழி குறித்து நானும் பெருமைப்படுகிறேன்
:"மன் கீ பாத்" வானொலி நிகழ்ச்சியில் முதன்மை அமைச்சர் நரேந்திர மோதி பேச்சு...
*:புதுச்சேரியில் அமைச்சர்கள் பதவியேற்பு:
புதுச்சேரி சட்டப்பேரவை அமைச்சர்களாக நமச்சிவாயம், சாய் ஜெ சரவணன்குமார், ஜெயக்குமார், லட்சுமி நாராயணன், சந்திரபிரியங்கா ஆகிய 5 பேர் பதவியேற்பு.
துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
* புதுச்சேரியில் புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி, புதுச்சேரியின் மக்களின் லட்சியங்களை நிறைவேற்றட்டும் - பிரதமர் மோடி
* +2 மதிப்பெண்கள் எவ்வளவு என கணக்கிட உதவிடும் இணையதளம் அறிமுகம்.
https://tn12marks.online/
* தமிழகத்தின் அத்தனை பிரச்சினைகளுக்கும் ஆட்சியமைந்த 100 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படும் என்றது திமுக.
50 நாட்களில் மக்களின் பிரச்சினைகளை கடிதங்களாய் பெற்ற பெட்டிகளின் சாவி தொலைந்து விட்டதா? அல்லது பெட்டியே தொலைந்துவிட்டதா? - சீமான் விமர்சனம்.
* சென்னையை சேர்ந்த தொழிலதிபரை பண்ணை வீட்டில் கட்டி வைத்து சொத்துக்களை எழுதி வாங்கிய புகார்.
உதவி காவல் ஆணையர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உட்பட 10 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு.
* தமிழகத்தில் இன்று 5,127 பேருக்கு கொரோனா பாதிப்பு.
ஒரே நாளில் 91 பேர் உயிரிழப்பு - சுகாதாரத் துறை தகவல்.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 7,159 பேர் மீண்டனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 42,801 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
💥தமிழகத்தில் ஒன்றியமா நடுவணா என்ற விவாதம் எழுந்துள்ள நிலையில் "இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சி பரப்பின் அமைச்சர் என்ற வகையில்..."
என பதவி ஏற்பு உறுதிமொழியை மேற்கொள்ள வைத்த புதுச்சேரி துணைநிலை ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன்...
* ராகுல் காந்தி தடுப்பூசி எடுத்துக்கொண்டார், யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை என்பதை புரளியைப் பரப்புவோரிடம் கூறுங்கள். - பிரதமர் மோடி.
தனியார் மருத்துவமனைகள் 25 % தடுப்பூசிகளை பெறுதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
💥நாளை நாமக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்கள் ஏதும் நடைபெறாது என அறிவிப்பு.
💥 கோவையில் நாளை தடுப்பூசி போடப்படாது என்று மாநகராட்சி அறிவிப்பு
💥அரியலூர், கடலூர், விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட "வகை 2ல்" உள்ள 23 மாவட்டங்களிலும் துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் செயல்பட அரசு அனுமதி.
No comments:
Post a Comment