அக்னிப்புரட்சி இன்றைய (30.06.2021) முக்கிய செய்திகள்.
💥 சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.99.80 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.93.72 க்கும் விற்பனை.
💥 கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்று அஞ்சலி செலுத்தலாம்.
உடலை வீட்டில் வைத்து 1 மணிநேரம் அஞ்சலி செலுத்த கேரளா அரசு அனுமதி.
குடும்பத்தினர், உறவினர்கள் அஞ்சலி செலுத்தலாம் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு.
💥 பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதில் அதிக முனைப்பு காட்டி வரும் நிதி ஆயோக் அமைப்பின் தலைவர் அமிதாப் காந்த் பதவிக்காலம் ஓராண்டிற்கு நீட்டிப்பு
* தஞ்சாவூர், கோவையில் இன்று தடுப்பூசி முகாம் எங்கும் நடைபெறவில்லை.
* காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.
முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதல்முறையாக காஞ்சிபுரத்துக்கு சென்றுள்ளார் முதலமைச்சர்.
* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.35,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலையில் இன்று 4-வது நாளாக சற்று குறைந்து காணப்படுகிறது.
ஊரடங்கு அமலில் இருந்தாலும் தேவை குறைவாக இருந்தாலும் தங்கம் விலையில் சரிவு ஏற்படவே இல்லை.
கடந்த சில நாட்களில் தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில், கடந்த 4 நாட்களாக விலை குறைக்கப்பட்டுள்ளது.
💥கொரோனாவால் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க நடுவண் அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணை
6 வார காலத்திற்குள் வழிகாட்டி நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தல்
* மதுரை மாநகராட்சி சார்பில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குதல் மற்றும் குழந்தைகளுக்கான ஆதார் பதிவு செய்யும் சிறப்பு முகாம் 30/06 முதல் 02/07 வரை மூன்று தினங்களுக்கு நடைபெறுகிறது
* நாளை முதல் நியாய விலைக் கடைகளில் மீண்டும் Biometric முறையில் பொருட்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு
💥 நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலும் மீண்டும் தடுப்பூசி செலுத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
* காவல்துறையினர் பொதுமக்களிடம் மனிதத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் : புதிய தமிழக காவல்துறையின் தலைவராக பொறுப்போற்று கொண்ட இந்திய காவல் பணி அலுவலர் சைலேந்திர பாபு
💥 புதுச்சேரி மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு.
ஜூலை 15ஆம் தேதி வரை நீட்டித்து புதுச்சேரி அரசு அறிவிப்பு.
கடற்கரை சாலை, பூங்காக்கள் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி.
உடற்பயிற்சி, யோகா மையங்களில் 50% பேர் பயிற்சி மேற்கொள்ள அனுமதி.
அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறந்து இருக்க அனுமதி - புதுச்சேரி அரசு.
* எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு:
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
பெட்ரோல், டீசல் விலையை திமுக அரசு குறைக்கவில்லை.
கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
கட்டுமான பொருட்களின் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும்.
தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்.
தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அணில் மின் கம்பங்களில் ஏறுவதால் மின்வெட்டு என்பது கேலிக்கூத்தானது
:சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கூறினார்.
* ஹூண்டாய் ஆலையில் ஒரு கோடியாவது காரை அறிமுகம் செய்து வைத்த பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேச்சு:
தமிழகத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் பங்களிப்பு அதிகம்.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு சேவையாற்றி வருகிறது ஹூண்டாய் கார் நிறுவனம். தமிழகத்தின் பொருளாதார நிலையை சரிசெய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
தொழில்துறையில் அதிக முதலீடுகளை பெறும் வகையில் அரசின் மீது நம்பிக்கை.
தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு வருவேன்.
தொழில்துறையில் தமிழகம் முன்னேற்றம் அடைய அரசு நடவடிக்கை - முதல்வர் ஸ்டாலின்.
* மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக் கொள், அவர்களை நேசி, அவர்களுக்கு சேவை செய்
காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்தில் முதலமைச்சர் தனது கைப்பட எழுதிய அண்ணாவின் வாசகங்கள்
* பாளையங்கோட்டை சிறை கைதிகள் மோதலில் கைதி முத்து மனோ உயிரிழந்த விவகாரம்.
மாநில மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு விசாரணை நடத்த அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு.
உடலை 70 நாட்கள் ஆகியும் அவரின் உறவினர்கள் இதுவரை வாங்காமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
💥 சசிகலா என்பவர் யார் ? அம்மா வீட்டில் வேலைக்காரர். வேலை முடிந்தது அவர் சென்றுவிட்டார் - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டம்.
யாருடைய தயவும் அதிமுக கட்சிக்கு தேவையில்லை என்று முன்னாள் அதிமுக அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
சசிகலா ஆடியோ விவகாரம் குறித்து பேசியுள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம், சசிகலா என்பவர் யார் ? அவர் அம்மா வீட்டில் வேலைக்காரராக இருந்தார். வேலை முடிந்தது அவர் சென்றுவிட்டார். அவருக்கும் அதிமுக கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
தன் பினாமி கட்சியை கூட ஜெயிக்க வைக்க இயலாத சசிகலா அதிமுகவை என்ன செய்து விட முடியும்?
அதிமுக யார் தயவிலும் இல்லை. அதிமுக யாரையும் நம்பி இல்லை.
இது ஒன்றரைக் கோடி தொண்டர்களை நம்பியே இருக்கிறது.
அதிமுக தோல்வியடைந்தாலும் வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
முன்னதாக சமூக வலைத்தளம், மொபைல் வழியாக மிரட்டல் விடுப்பதாக சசிகலா மீது முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அளித்த புகாரின் பேரில் சசிகலா மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
💥 கூடுதல் பொறுப்பில் ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம்:
முதலமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐ.ஏ.எஸ்க்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தலைமைச் செயலர் உத்தரவு.
* தமிழ் திரையுலகின் முதல் Super Star என்றழைக்கப்படும் மாயவரம் K தியாகராஜ பாகவதர் பேரனுக்கு அரசு சார்பில் குறைந்த வாடகை குடியிருப்பு மற்றும் 5 லட்சம் நிதியுதவி என முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு. அண்மையில் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாக தமிழக அரசுக்கு அவரது பேரன் கோரிக்கை விடுத்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
* ஹூண்டாய்- திருபெரும்புதூர் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தொட்டது!
* தமிழகத்தின் 30 வது சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு பதவியேற்பு
புதிய டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு காவல்துறை சார்பில் வரவேற்பு மரியாதை.
புதிய டிஜிபி சைலேந்திரபாபுவிடம் பொறுப்புகளை ஒப்படைத்த திரிபாதி.
💥 தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கிறதா கொரோனா தொற்று?
இன்று 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.
நேற்றைய மொத்த பாதிப்பை விட இன்று 6 தொற்றுகள் மட்டுமே குறைவு.
* தாஜ்மாஹாலாக இருந்தாலும் இடிக்கப்படும்: சென்னை உயர்நீதிமன்றம்.
நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படுவது தாஜ்மஹாலாக இருந்தாலும், கெஸ்ட் ஹவுசாக இருந்தாலும் இடிக்கப்படும் - சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.
💥 தஞ்சாவூர்
நாளை 1st July 21 வியாழன்.
COVISHIELD
1. அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா மண்டபம். (410 Dose)
2. கரந்தை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி (100 Dose)
3. அண்ணாநகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி. (100Dose)
4. வண்டிக்கார தெரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி (100Dose)
💥 கோவை மாநகராட்சி பகுதிகளில் நாளை (01.07.2021) பொதுமக்களுக்கான தடுப்பூசி போடப்படமாட்டாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
CCMC CoimbatoreCorporation
💥 ஈரோடு மாவட்டத்தில் 80 இடங்களில் நாளை (01.07.2021)
தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ள இடங்களின் விவரம் ;-
💥திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ் துறை தலைவர் பால் சந்திரமோகன் மீது பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டின் பெயரில் பணி நீக்கம் செய்யப்பட்டார்
💥 முதன்முறையாக 49.6°C என்கிற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது கனடா நாட்டின் வெப்பநிலை. திடீர் வெப்பநிலை மாற்றத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது.
💥 திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நாளை கொரோனா தடுப்பூசி போடப்படமாட்டாது. - திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் தகவல்...
No comments:
Post a Comment