தமிழ்நாட்டில் மதுவிலக்கை நீண்டகாலம் செயல்படுத்திய முதலமைச்சர் காமராஜர்! - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

தமிழ்நாட்டில் மதுவிலக்கை நீண்டகாலம் செயல்படுத்திய முதலமைச்சர் காமராஜர்! - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

தமிழ்நாட்டில் மதுவிலக்கை நீண்டகாலம் செயல்படுத்திய முதலமைச்சர் காமராஜர்! - மருத்துவர் இராமதாசு அய்யா

அன்று - மதுவை கடுமையாக எதிர்த்த காமராஜர்

மதுவிலக்கை அறிமுகம் செய்வது எந்த அளவுக்கு முக்கியமோ, அதைவிட முக்கியம் மதுவிலக்கை உறுதியாக செயல்படுத்துவது ஆகும். 1948-ஆம் ஆண்டில் மதுவிலக்கை ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார்  அறிமுகம் செய்தார். அதன்பின் 1971-ஆம் ஆண்டு வரை 23 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டில் மதுவிலக்கு நடைமுறையில் இருந்தது. அந்த 23 ஆண்டுகளில் 1954 முதல் 1963 வரை 10 ஆண்டுகளுக்கு மதுவிலக்கை எந்தவித தளர்வும் இல்லாமல் நடைமுறை படுத்தியவர் காமராஜர் தான்.

தமிழ்நாட்டில் திராவிடக் கட்சி ஆட்சி வந்த பிறகு அதை காமராஜர் கடுமையாக எதிர்த்தார். தமது வாழ்நாளில் 8 ஆண்டு கால  திமுக ஆட்சியை காமராசர் பாராட்டியது ஒரே ஒரு முறை தான்.  அது,’’குடித்துவிட்டு வந்து தங்களது மனைவி மக்களையே தாக்கியவர்கள் பற்றிய பல கதைகளை நான் அறிவேன். அத்தகையவர்களிடம் அடிபட்ட பெண்களின் கதறல் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அது ஒலித்துக் கொண்டிருக்கும்வரை ஒற்றை மதுக்கடை திறக்கப்படுவதைக்கூட அனுமதிக்க மாட்டேன்” என்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா அறிவித்த போது தான்.

1971-ஆம் ஆண்டில் மதுவிலக்கை கலைஞர் ரத்து செய்த போது, அது மிகக்கொடிய பாசிச நடவடிக்கை என்று கண்டித்தவர் காமராஜர். தமது வாழ்நாள் முழுவதும் மதுவிலக்குக்கு ஆதரவாக இருந்தவர் காமராஜர்.

இன்று - தெருவுக்கு தெரு பார் திறக்கும் திமுக அரசு

தமிழ்நாட்டில் கடந்த ஆட்சியில் 5 புதிய மது ஆலைகளைத் திறக்க அனுமதி அளித்த திமுக, இப்போது தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் பார்களைத் திறக்க அனுமதி அளிப்பது குறித்து பரிசீலித்து வருகிறதாம்.  ஊரெங்கும் மது வெள்ளம் பாய வேண்டும் என்பது தான் திமுக அரசின் தலையாய நோக்கம் போலிருக்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages