பா.ம.க நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் முகநூல் பதிவு
சுக்கா... மிளகா... சமூகநீதி?
சமூகநீதி விழிப்புணர்வு பரப்புரை
தொடக்கத்தின் முதலாமாண்டு நிறைவு!
சரியாக ஓராண்டுக்கு முன் 2020-ஆம் ஆண்டு இதே நாளில் (03.06.2021) எனது முகநூல் பக்கத்தில் ‘‘சுக்கா மிளகா சமூகநீதி?’’ என்ற தலைப்பிலான விழிப்புணர்வுத் தொடரை மருத்துவர் அய்யா அவர்கள் எழுதத் தொடங்கினார்கள்.
சமூகநீதி என்பது சும்மா கிடைத்து விடவில்லை என்ற உண்மையை இட ஒதுக்கீடு, சமூகநீதி குறித்த அரைகுறை புரிதல் உள்ளவர்களுக்கு புரிய வைப்பதற்கான முயற்சி தான் அது.
இந்தியாவில் இட ஒதுக்கீடு எவ்வாறு உருவானது?
இந்திய விடுதலைக்கு முன்பாகவே எந்தெந்த மாநிலங்களில் இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்தது?
சமூகநீதியில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தமிழ்நாடு எந்த வகையில் முன்னோடியாக இருந்தது?
மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்தும்படி தமிழ்நாட்டிலிருந்து குரல் கொடுத்த முதல் அமைப்பு வன்னியர் சங்கம்!
தேசிய அளவில் வேலைவாய்ப்பில் ஓபிசி வகுப்பினருக்கு வி.பி.சிங் அரசு வழங்கிய 27% இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக பா.ம.க. நடத்திய இயக்கங்கள்!
தென்னிந்திய மாநிலங்களில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டு முறைகள்!
தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டு வரலாறு!
வன்னியர்கள் தனி இட ஒதுக்கீட்டு போராட்ட வரலாறு
ஆகியவை குறித்து மொத்தம் 51 அத்தியாயங்களில் விரிவாக எழுதியிருந்தேன். அவை தொகுக்கப்பட்டு நூலாகவும் வெளியிடப்பட்டது. 51 அத்தியாயங்களில் இடம்பெற்றிருந்த சமூகநீதி வரலாறு குறித்த விவரங்களின் அடிப்படையில் தேர்வுகளும் நடத்தப்பட்டன. ஒட்டுமொத்தமாக 27 தேர்வுகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு தேர்விலும் சராசரியாக 30 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வுகளால் பாட்டாளி இளைஞர்களிடையே சமூகநீதி குறித்த புரிதல் ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் மற்ற பிரிவினரிடையே சமூகநீதி குறித்த புரிதல் இன்னும் ஏற்படவில்லை. அதைக் கருத்தில் கொண்டு ‘‘சுக்கா மிளகா சமூகநீதி?’’ தொடரில் இடம் பெற்ற 51 அத்தியாயங்களும் இன்று முதல் மறு வெளியீடு செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment