காட்டுக்கு ராஜாக்கள் - அன்று கொரோனா நோயாளிகள் - இன்று குற்றவாளிகள் யார்? - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

காட்டுக்கு ராஜாக்கள் - அன்று கொரோனா நோயாளிகள் - இன்று குற்றவாளிகள் யார்? - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

காட்டுக்கு ராஜாக்கள் - அன்று
கொரோனா நோயாளிகள் - இன்று
குற்றவாளிகள் யார்? - மருத்துவர் இராமதாசு அய்யா

ஒரு காலத்தில் நாங்கள் காட்டுக்கு ராஜா. கம்பீரமாக வலம் வருவோம். எங்களைப் பார்த்தால் மற்ற விலங்குகள் பயந்து ஒதுங்கி வழி விடும். இன்று எங்கள் நிலை என்ன தெரியுமா?எங்களுக்கு கொரோனா நோய்த் தொற்றாம்.
காட்டிலிருந்து கொண்டு வந்து உயிரியல் பூங்காவில் எங்களை அடைத்து வைத்த மனிதர்கள், இப்போது தங்களிடமிருந்த கொரோனா நோயையும் எங்களுக்கு பரிசளித்து விட்டனர்.

கொரோனா வைரஸ் தாக்கியதில் எங்கள் தோழி நிலா உயிரிழந்து விட்டாள்.

நாங்கள் 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கி வைக்கப்பட்டிருக்கிறோம்.

கம்பீரமாக காட்டுக்கு ராஜாவாக வலம் வந்த எங்களை இப்படி பரிதாபமாக முடக்கி வைத்திருப்பது நியாயம் தானா?

இப்படிக்கு

கொரோனாவால் வாடும்
வீரா, ஜெயா, பிரதீப், நிரஞ்சனா உள்ளிட்ட 9 சிங்கங்கள்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages