மணநாள் வாழ்த்துகளைக்கூறி வாழ்த்து பெற்று மகிழவும், நெகிழவும் வைத்த சொந்தங்கள்! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் முகநூல் பதிவு - Agnipuratchi

மணநாள் வாழ்த்துகளைக்கூறி வாழ்த்து பெற்று மகிழவும், நெகிழவும் வைத்த சொந்தங்கள்! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் முகநூல் பதிவு

Share This

மணநாள் வாழ்த்துகளைக்கூறி வாழ்த்து பெற்று மகிழவும், நெகிழவும் வைத்த சொந்தங்கள்! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் முகநூல் பதிவு

எங்களின் ( மருத்துவர் ச.இராமதாசு - சரசுவதி அம்மையார்)  56-ஆவது திருமண நாளையொட்டி கடந்த 24-ஆம் தேதி தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் வழியாகவும், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும்  பல்லாயிரக்கணக்கான பாட்டாளி சொந்தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், எங்களின் வாழ்த்துகளையும் கோரினார்கள். அவர்கள் அனைவரையும் வாழ்வில் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று பல்லாண்டு வாழும்படி வாழ்த்தி மகிழ்ந்தோம்.

தமிழ்நாட்டைக் கடந்து ஆந்திரத்தில் வன்னியகுல சத்திரியர் கார்ப்பரேஷனின்  தலைவராக இருக்கும் கே.வணிதா,  ‘’ அய்யாவுக்கும், அம்மாவுக்கும் 56-ஆவது ஆண்டு திருமண நாள் வாழ்த்துகள்’’ என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்து எங்கள் ஆசிகளைப் பெற்றதும், கடல் கடந்து அமெரிக்காவில் வாழும் எங்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் எங்களின் பெயரனைப் போன்ற டாக்டர் பாபு மணநாள் வாழ்த்துகளை தெரிவித்து வாழ்த்து பெற்றதும் நெகிழ்வான தருணங்கள்.

அனைத்து ஊடகங்கள் வழியாகவும் எங்களுக்கு திருமண நாள் வாழ்த்துகள் தெரிவித்த அனைத்து பாட்டாளி சொந்தங்களுக்கும் எங்களின் வாழ்த்துகள்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages