அக்னிப்புரட்சி இன்றைய (01.07.2021) முக்கிய செய்திகள்.
💥 சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.99.80 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.93.72 க்கும் விற்பனை.
* ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க இன்று முதல் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது கை விரல் ரேகை வைக்கும் முறை.
கொரோனா நிவராணம் வழங்கும் பணி நிறைவடைந்த நிலையில் அறிவிப்பு.
* வெள்ளை உடுப்பு அணிந்த ராணுவ வீரர்கள் மருத்துவர்கள்.
முதல்வர் ஸ்டாலின் தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துச் செய்தியில் நெகிழ்ச்சி.
மருத்துவர்கள் அனைவருக்கும் இந்திய மருத்துவர்கள் நாள் வாழ்த்துக்கள்.
நீங்கள் மக்களைக் காக்கும் மகத்தான பணியைத் தொடருங்கள் என ஸ்டாலின் அறிக்கை.
* தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு இன்று மாலை 3 மணிக்கு மருத்துவர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
* பொது போக்குவரத்து தொடங்கியதும் அதிகரிக்க தொடங்கிய தொற்று?
ஒட்டுமொத்த பாதிப்பு ஒவ்வொரு நாளும் குறைந்து வந்தாலும் 17 மாவட்டங்களில் நேற்றைய கொரோனா தொற்று எண்ணிக்கையை விட இன்று அதிகரித்துள்ளது. பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்படாத கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்திருக்கிறது.
* சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.825.50ல் இருந்து ரூ.850.50ஆக விலை உயர்வு.
வணிக ரீதியான எரிவாயு சிலிண்டர் மீதும் ரூ.84.50 விலை உயர்ந்து சிலிண்டர் ரூ.1,687.50ஆக விலையேற்றம் - புதிய விலை நள்ளிரவு முதல் அமலானது.
* எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்களில் மாதத்திற்கு 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் இனி ரூ.15 கட்டணம்.
4 முறைக்கு மேல் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் ரூ.15 + ஜி.எஸ்.டி வரி பிடிக்கப்படும்- இந்த நடைமுறை இன்று முதல் அமல்.
* அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடுத்திட்டம் இன்று முதல் செயலாக்கம் : அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் இன்று முதல் அமல்.
மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யும் தொகை 180 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக உயர்வு.
* தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மருத்துவ குழுவினர்களுடன் நாளை ஆலோசனை.
கொரோனா ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு.
தமிழகத்தில் தொற்று குறைந்து வரும் மாவட்டங்களில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு.
தமிழகத்தில் 23 மாவட்டங்களில் கோவில்கள் திறக்கப்படலாம் என எதிர்பார்ப்பு.
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5ஆம் தேதி முடிவடைகிறது.
தலைமைச் செயலகத்தில் மருத்துவ குழுவினருடன் முதல்வர் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
* உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உடனான ஆலோசனைக்கு பின் பேட்டி:
அனைத்து பல்கலைக் கழகங்களும் ஒரே மாதிரியான முறையை கடைபிடிக்க வேண்டும்.
பேராசிரியர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையை பின்பற்ற வேண்டும்.
அனைத்து பல்கலைக் கழகங்களிலும் எம்.பில் படிப்பை தொடர்ந்து நடத்த வேண்டும்.
ஆகஸ்ட் முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கும். பல்கலைக் கழகங்களில் வெளிப்படைத் தன்மை அவசியம்.
12ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை. ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கும்.
அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு ஒற்றை சாளர முறையில் நடத்தப்படும் - உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி.
* ஆன்லைன் வகுப்புகளுக்கு பயன்படுத்தப்படும் செல்போன், கணினி, மடிக்கணினிகளில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யக்கோரிய மனு:
ஆன்லைன் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகாமல் மத்திய, மாநில அரசுகள்தான் தடுக்க முடியும் - நீதிபதிகள்.
மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
* டெல்டா வகை கொரோனா ஆபத்து குறைவு?
கொரோனா டெல்டா பிளஸ் வகையின் ஆபத்து குறித்து போதுமான தகவல் இல்லை - எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா.
மக்கள் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால் கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ளலாம் - ரந்தீப் குலேரியா.
* நீதித்துறைக்கு பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரிய வழக்கு.
ரீபக் கன்சல் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு.
"நீதித்துறைக்கு தனியாக நிதி ஒதுக்க வேண்டும் என்று அரசுக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை"
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கருத்து. இந்த விவகாரத்தை முறையாக கையாள்வோம் - உச்சநீதிமன்றம்.
* நடுவண் அரசின் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை
- நிதியமைச்சகம் அறிவிப்பு.
சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி குறைக்கப்படும் என்று பெரிதும் கூறப்பட்ட நிலையில் வட்டி விகிதம் குறைக்கப்படாமல் பழைய வட்டி விகிதமே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது...
*:திமுக தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளை வெளியிட்டு, ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு என்றார்கள் இதுவரை செய்யவில்லை, கட்டுமானப் பொருட்களை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்ப்பதாக சொன்னார்கள் மாறாக அதன் விலை உயர்ந்து கொண்டே போகிறது, ஆட்சிக்கு வந்ததும் NEET தேர்வு நீக்கம் செய்யப்படும் என்றார்கள், அதைவிடுத்து தற்போது கண்துடைப்பு நாடகம் நடத்துகிறார்கள், ஏமாற்றத்தை மட்டுமே செயலில் காட்டும் திமுகவின் தேர்தல் அறிக்கை பொய்யா - சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி
* கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை நடுவண் மற்றும் புழல் சிறைச்சாலைகளில் தகுதியுள்ள கைதிகளை பிணையில் விடுவிக்க தமிழக அரசுக்கு தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தின் உயர்மட்டக் குழு பரிந்துரை
💥ஆவின் பணி நியமனத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அதிகாரிகள் சிலர் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு
ஆவின் கூட்டுறவு சங்கத்தில் பணி அமர்த்தப்பட்ட 700க்கும் மேற்பட்ட பணிகள் நிறுத்திவைப்பு
Covaxin மற்றும் Covishield தடுப்பூசிகளை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்காவிட்டால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வரும் பயணிகள் கட்டாய பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுவர் என இந்திய அரசு எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகிய நிலையில் ஆஸ்திரியா, செருமனி, ஸ்லோவேனியா, கிரீசு, அயர்லாந்து, ஐசுலாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் எசுப்பானியம் ஆகிய 8 நாடுகள் சீரம் நிறுவனத்தின் Covishield தடுப்பூசியையும், எசுத்தோனியா Covishield மற்றும் பாரத் பயோ டெக் நிறுவனத்தின் Covaxin தடுப்பூசியையும் சேர்த்து அனுமதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
💥ஒன்றியம், ஒன்றிய அரசு என்ற சொற்களின் பயன்பாட்டிற்கு தடையில்லை
முதலமைச்சரும், அமைச்சர்களும் மற்றவர்களும் ஒன்றிய அரசு என சொல்லாமல் இப்படிதான் பேசவேண்டும் என்றெல்லாம் ஆணையிட முடியாது : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
💥 ஊரடங்கை நீடிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவக் குழுவினருடன் நாளை கலந்தாய்வு மேற்கொள்ள உள்ளார்
"வகை -2" ல் உள்ள 11 மாவட்டங்களுக்கு பொது போக்குவரத்து உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
💥 தமிழகத்தில் 3, 724 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன
கடந்த 11 ஆம் தேதி 6,022 ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 24 ஆம் தேதி நிலவரப்படி 3,724 ஆக குறைப்பு
* Motor Vehicle ஆய்வாளர் பதவிக்கான நேர்காணல் வரும் 19 முதல் 24-ம் தேதி வரை சென்னையில் உள்ள TNPSC அலுவலகத்தில் நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் உமா மகேஷ்வரி அறிவிப்பு
💥 தனியார் காப்பகங்கள், முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் அனுமதி பெற்று செயல்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள சமூக நலத்துறை அமைச்சர் அதிரடி உத்தரவு.
மதுரை தனியார் காப்பகத்தில் சட்டவிரோதமாக குழந்தைகள் விற்கப்பட்டதை தொடர்ந்து, ஆய்வு மேற்கொள்ள உத்தரவு.
💥 எம்.ஜி.ஆருக்கே ஆலோசனை கூறினேன் - சசிகலா பேச்சு.
எம்.ஜி.ஆர் என்னிடம் ஆலோசனைகளை கேட்டுள்ளார் - சசிகலா தொண்டரிடம் தொலைபேசி உரையாடல்.
கொஞ்சம் விட்டால் அண்ணாவுக்கே ஆலோசனை கூறினேன் என்பார்- எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை கூறியதாக சசிகலாவின் ஆடியோ வெளியான நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.
* பாளையங்கோட்டை சிறையில் நிகழ்ந்த மோதலில் உயிரிழந்த கைதி முத்துமனோ குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சம்பவத்தில் உயிரிழந்த முத்துமனோ குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
சிறையில் நிகழ்ந்த மோதல் தொடர்பாக பெருமாள்புரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சம்பவத்திற்கு காரணமான பாளையங்கோட்டை சிறை பணியாளர்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்- முதல்வர் ஸ்டாலின்.
* அசாம் மாநிலம் கம்ருப் மாவட்டத்தில் உள்ள கர்பங்கா காட்டுப் பகுதியில் இருந்த ஒரு கிணற்றில் விழுந்து மாட்டிக்கொண்ட சிறுத்தை பத்திரமாக மீட்கப்பட்டது.
💥இராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அனல் மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்
சுற்றுச்சூழல் அனுமதிகள் பெறுவதில் விதிகள் முறையாக கடை பிடிக்க வில்லை என கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் அனல் மின்நிலையம் இயங்க தடை விதித்திருந்தது
💥புதுச்சேரியில் புதிய சட்டமன்ற கட்டிடம் அமைக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்
💥 கேரளாவில் இருந்து கர்நாடகா வருவதற்கு இரண்டு சான்றிதழ்கள் கட்டாயம்.
கேரளாவில் இருந்து கர்நாடகா வருவதற்கு ஆர்டி.பிசிஆர் நெகட்டிவ் ரிப்போர்ட் கட்டாயம்.
கேரளாவைச் சேர்ந்தவர்கள் கர்நாடகா வருவதற்கு கோவிட் தடுப்பூசி சான்றிதழும் கட்டாயம்.
💥 இன்று ஒரே நாளில் 10 லட்சத்து 8 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் தமிழகத்திற்கு மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது
ஜூலை மாதத்திற்கு மொத்தம் 71 லட்சம் ஊசிகள் வழங்கப்பட இருக்கின்றன
💥 தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 4,481பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
102 பேர் உயிரிழந்து உள்ளனர்.
5,044பேர் குணமடைந்து உள்ளனர்.
கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் தஞ்சாவூரில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது...
💥அடுத்த 3 மணி நேரங்களுக்கு மதுரை, திண்டுக்கல், கரூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 13 தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment