அக்னிப்புரட்சி இன்றைய (02.07.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் சதம் வெய்யில் அல்ல பெட்ரோல் விலை:
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 33 காசுகள் அதிகரித்து லிட்டர் 100.13 ரூபாய்க்கும், டீசல் விலை மாற்றம் ஏதும் இன்றி நேற்றைய விலையான 94.72 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடலூரில் பெட்ரோல் விலை ரூ 102.07 ஆகவும், டீசல் விலை 95.59 ஆகவும் உள்ளது.
* 5 மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பு; ஆராய ஆட்சியர்களுக்கு உத்தரவு.
தஞ்சை, மதுரை, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான காரணத்தை ஆராய்ந்து, மாவட்ட ஆட்சியர்பள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளா்.
* சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மாணவரின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுப்பு.
உடலை கைப்பற்றி சென்னை கோட்டூர்புரம் போலீசார் விசாரணை.
ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அளிப்பது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை.
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வரும், 5ம் தேதி காலை, 6:00 மணிக்கு நிறைவடைகிறது.
ஊரடங்கை நீட்டிப்பது; புதிய தளர்வுகளை அறிவிப்பது; நோயை முழுமையாக கட்டுப்படுத்தவும், மூன்றாவது அலையை எதிர்கொள்ளவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தலைமை செயலகத்தில், இன்று மருத்துவ நிபுணர்கள் குழு மற்றும் அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.
காலை, 11:30 மணிக்கு நடக்கும் கூட்டத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் தலைமை வகிக்க உள்ளார்.
இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின்படி, புதிய தளர்வுகளை முதல்வர் அறிவிப்பார்.
* தமிழகத்தின் பல மாவட்டங்களில், வரும் 5ம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்புள்ளது- சென்னை வானிலை ஆய்வு மையம்.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, வரும் 5ம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்புள்ளது.
காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார், மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில், இன்று பகல் வரையிலும் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தர்மபுரி, சிவகங்கை, விருதுநகர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கன மழை பெய்யும்.
நாளை முதல் இரண்டு நாட்களுக்கு, வட மாவட்டங்களில், இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யலாம்.
தென் மேற்கு, மத்திய மேற்கு மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில், வரும் 5ம் தேதி வரை மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும்.
இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
* இறந்து கிடந்தவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த உன்னி கிருஷ்ணன் என்பவர் கண்டுபிடிக்கப்பட்டது.
இவர் இஸ்ரோவில் பணிபுரியும் ரகு என்பவரின் மகன் என்பதும், வேளச்சேரியில் தங்கி ஐஐடி மாணவர்களுக்கு புராஜெக்ட் வேலைகளை செய்து கொடுத்து வந்ததும் தெரியவந்தது.
அவரின் அறைக்குச் சென்ற அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில், "நான் என்ன செய்கிறேன் என்பதே எனக்கே தெரியவில்லை. மிகுந்த மன அழுத்ததில் இருக்கிறேன். என் மரணத்திற்கு யாரும் காரணமில்லை" என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த தற்கொலை கடிதம் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் பிடெக் பட்டம் பெற்ற உன்னிகிருஷ்ணன், ஐஐடி மாணவர்களுக்கு புராஜெக்ட் அசோசியேட்டாக இருந்துள்ளதாக தெரிகிறது. சிறிய தண்ணீர் கேனில் பெட்ரோலை எடுத்துச் சென்ற உன்னி கிருஷ்ணன், தீயிட்டு கொளுத்தி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதற்கான தடயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர், அவருடன் தங்கியிருந்த நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* தஞ்சை, கள்ளக்குறிச்சி, கடலூர் போன்ற மாவட்டங்களில் தொற்று சிறிது அதிகரிப்பு.
தொற்று சிறிது அதிகரித்து வரும் நிலையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை.
தொற்று குறைந்து வந்தாலும் பரிசோதனை எண்ணிக்கையை அரசு குறைக்கவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
* ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் மூன்று மாதங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும்படி ஏன் உத்தரவிடக் கூடாது? - உயர்நீதிமன்றம் கேள்வி
* பேருந்துகளை இயக்குவது குறித்தும், கோவில்களை திறப்பது குறித்தும் மாநில அரசுதான் முடிவெடுக்கும் - உயர்நீதிமன்றம்.
நிபுணர் குழுவுடன் ஆலோசித்து கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் அறிவிக்கப்படுகின்றன - உயர்நீதிமன்றம்.
* ஈரோடு மாவட்டத்தில் 113 இடங்களில் நாளை (03.07.2021) நடைபெறவிருக்கும் தடுப்பூசி முகாம் பற்றிய விவரம்.
* தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு...
அனைத்து மாவட்டங்களிலும் பொதுபோக்குவரத்துக்கு அனுமதி
தமிழகத்தில் இபாஸ் மற்றும் இ பதிவு நடைமுறை முற்றிலும் ரத்து
டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி
அனைத்து துணிக்கடை, நகைக்கடைகள் 50 சதவீதம் பணியாளர்களுடன் இயங்க அனுமதி.
மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க தமிழக அரசு அனுமதி
உணவகங்களில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ண அனுமதி
பொழுது போக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட அனுமதி
அனைத்து வகை கடைகளும் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி
கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு உள்பட மலைப்பகுதிகளுக்கு செல்ல திங்கள் முதல் இபாஸ் தேவையில்லை
நீச்சல் குளங்கள், மதுபான பார்கள், உயிரியல் பூங்காக்களுக்கு தடை தொடரும்
* நாளை திருப்பூர் ஊரகப்பகுதிகளில் தடுப்பூசி போடப்படும் இடங்கள்
No comments:
Post a Comment