அக்னிப்புரட்சி இன்றைய (03.07.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (03.07.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (03.07.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100.13 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.93.72 க்கும் விற்பனை.

💥நடுவண் அரசின் புதிய ஒளிப்பதிவு சட்டத்திருத்த முன்வரைவு: நடிகர்கள் கார்த்தி, சூர்யா எதிர்ப்பு!

இந்த முடிவினால் வணிக வாய்ப்பு மற்றும் திரைப்பட தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படும் எனவும் கருத்து சுதந்திரத்தை (Freedom) ஒடுக்கும் செயல் எனவும் எதிர்ப்பு.

💥 கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்திறன் கொண்டது-பாரத் பயோடெக்.

கொரோனா பாதித்த  130 நோயாளிகளுக்கு  கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி சோதித்ததில் கொரோனாவிற்கு எதிராக 77.8% பலனளிப்பதாக பாரத் பயோடெக்கின்  3 ஆம் கட்ட ஆய்வு  முடிவுகளில் தகவல்.

💥 தமிழகத்தில் இன்று முதல் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி-சுகாதார செயலாளர்.

கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட வழிகாட்டுதல்.

1), தடுப்பூசி போடும் சுகாதார ஊழியர்களுக்கு பயிற்சி  வழங்க வேண்டும்.

2), தடுப்பூசியின்  தொடர்பான அனைத்து தகவல்களை கர்ப்பிணி பெண்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

3), சம்மதம் தெரிவித்தால் அவருக்கு தடுப்பூசி செலுத்தலாம்.

4), தடுப்பூசி செலுத்தி கொண்டவர்ளை சிறப்பு கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும்.

5), தடுப்பூசி செலுத்திய தகவலை உடனடியாக கோவின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

6), பக்கவிளைவு இருந்தால் மருத்துவ அலுவலர் அல்லது மாவட்ட தடுப்பூசி அலுவலரிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

* காவலர் நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பு,  உடற்தகுதி தேர்வு ஆகியவற்றை  சூலை 26ம் தேதி முதல் தொடங்கி நடத்த தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது

* சென்னை : முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வயிற்று வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதி.

💥 கொரோனா உள்ளிட்ட உருமாற்றம் அடைந்துவரும் வைரஸ் பாதிப்பு காரணமாக உலகமே ஆபத்தான காலகட்டத்தில் உள்ளது-உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை.

* ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக பாஜக பிரமுகர் தாக்கல் செய்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு:

விளம்பர நோக்கத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் - சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு பதில் மனு.

* குழு நியமித்ததில் அரசியல் சாசன அடிப்படை உரிமை மீறப்படவில்லை - தமிழக அரசு விளக்கம்.

"மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டு நீட் பாதிப்பு தொடர்பாக ஆய்வு குழு"

குழுவின் அறிக்கையை ஆராய்ந்த பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை - தமிழக அரசு.

💥 தமிழகத்தில் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஆம்புலன்ஸ் வசதி இருக்க வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு:

கன்னியாகுமரியில் பிரசவத்திற்கு பிந்தைய ரத்த கசிவால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை.

ஆம்புலன்ஸ் வசதி இல்லாததே பெண்ணின் உயிரிழப்புக்கு காரணம் என நீதிமன்றம் கருத்து.

இந்தியாவில் 4 முதல் 6 சதவீதம் பிரசவத்திற்கு பிந்தைய ரத்த கசிவு பாதிப்பு ஏற்படுகிறது - நீதிபதி.

* 10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரிய வழக்கு.

நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

* பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி.

திங்கட்கிழமை முதல் பழனி முருகன் கோயிலில் ஒரு  மணி நேரத்துக்கு 1,000 பக்தர்களுக்கு அனுமதி.

* முன்னாள் அமைச்சரும், அ.ம.மு.க துணை பொதுச் செயலாளருமான பழனியப்பன் தி.மு.க.வில் இணைந்தார்.

அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பழனியப்பன் தி.மு.க.வில் இணைந்தார்.

💥 தமிழகத்தில் இன்று 4013  பேருக்கு கொரோனா பாதிப்பு.

ஒரே நாளில் 115 பேர் உயிரிழப்பு - சுகாதாரத்துறை தகவல்.
குணமடைந்தவர்கள் எண்ணிக்கை  4,724.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages