அக்னிப்புரட்சி இன்றைய (05.07.2021) முக்கிய செய்திகள்.
💥 சென்னையில் பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து லிட்டர் பெட்ரோல் 100.75 ரூபாய்க்கும், டீசல் விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் டீசல் 93.91 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
💥 தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன:
தமிழகம் முழுவதும் கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்ஹாக்கள் இன்று திறக்கப்பட்டன.
இ - பாஸ், இ-பதிவு முறை ரத்து, மாநிலம் முழுவதும் பஸ்கள் இயக்கம்.
உணவகங்கள், விடுதிகள், தங்கும் விடுதிகள் 50% பேருடன் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை இயக்கப்படும்.
டீ கடைகள் 50% கூட்டத்தோடு அனுமதிக்கப்படும்.
கேளிக்கை கூடங்கள், உடற்பயிற்சி மையங்கள் அனுமதிக்கப்படும்.
தகவல் தொழில்நுட்ப சேவை மையங்கள் 50% மக்களோடு அனுமதிக்கப்படும்.
டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.
துணி கடைகள், நகை கடைகள் 50% கூட்டத்துடன் இயங்க அனுமதிக்கப்படும்.
வணிக வளாகங்கள் காலை 9 முதல் இரவு வரை இயங்கும்.
தொடரும் தடை:
மாநிலங்களுக்கு இடையே அரசு பேருந்து போக்குவரத்து.
சர்வதேச விமான போக்குவரத்து.
திரையரங்குகள்
அனைத்து பார்கள் இயங்க தடை.
நீச்சல் குளம்.
பொது மக்கள் கலந்து கொள்ளும் அரசியல், சமுதாய கூட்டங்கள்
பொழுதுபோக்கு, கலாச்சார, விளையாட்டு நிகழ்வுகள்.
பள்ளிகள், கல்லூரிகள்.
உயிரியல் பூங்காக்கள்.
திருமண விழாக்களில் 50 பேர், இறுதிச்சடங்கில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
தமிழகம் முழுவதும் 80 நாட்களுக்கு பின்னர் இன்று கோவில்கள் திறப்பு!
மதுரை மாநகர மக்கள் நாளும் நடைபெறும் கொரோனா வெருவித் தடுப்பூசி முகாம் பற்றி அறிய...
💥 கட்டாய கல்வியுரிமை சட்டம்-2009 ன் கீழ் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் உள்ள 1.13 லட்சம் இடங்களுக்கு இன்றிலிருந்து விண்ணப்பிக்கலாம்
மேலும் விவரங்களுக்கு!
https://rte.tnschools.gov.in/home?returnUrl=%2Freg-parent
* பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணி நடப்பதால் மண்டபம் - ராமேஸ்வரம் இடையே ஜூலை 14ம் தேதி வரை ரயில்கள் இயக்கப்பட மாட்டாது- தெற்கு ரயில்வே.
திருச்சியில் இருந்து செல்லும் சிறப்பு ரயில் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிப்பு.
* இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிப்பு.
* சைக்கிளில் பிரேமலதா விஜயகாந்த்:
பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து, சைக்கிள் ஓட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.
* தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு:
சேலம், தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
💥 அரசு பேருந்துகளில் மீண்டும் திருக்குறள். இனி விளக்க உரையுடன் திருக்குறள் இடம்பெறுகிறது!
வெள்ளை நிற உடையில் திருவள்ளுவர் படம், திருக்குறள் மற்றும் அதற்கு கலைஞர் எழுதிய விளக்க உரையுடன் கூடிய பலகை பேருந்துகளில் பொருத்தப்படுகிறது
* பொறியியல், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையிலான ஆணையம் மூன்றாம் முறையாக கலந்தாய்வு கூட்டம்
உள்-இட ஒதுக்கீடு விழுக்காடு வழங்குவது குறித்து 10 நாட்களில் அறிக்கை பதிகை என தகவல்.
* பேருந்து வசதி கோரிய கிராம மக்கள் : தானே ஓட்டி சென்று சேவையை தொடங்கி வைத்த அமைச்சர்.
அரியலூர் மாவட்டம், ஆனந்தவாடி - ஜெயங்கொண்டம் இடையே பேருந்து சேவை தொடங்க தேர்தல் பிரச்சாரத்தின்போது பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
தற்போது கிராம மக்கள் விடுத்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை தொடங்க நடவடிக்கை எடுத்த பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பேருந்தை தானே ஓட்டி சென்று, சேவையை தொடங்கி வைத்தார்.
💥பழங்குடியின மக்கள் நல ஆர்வலர் ஸ்டான் ஸ்வாமி இன்று உயிரழந்து விட்டதாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்
பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடி வந்த ஆர்வலர் ஸ்டான் ஸ்வாமி பீமா கொரோகான் வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையிலிருந்தார்
கடந்த சில நாட்களாக சிறையில் அவரது உடல்நிலை மோசமாகி வந்த நிலையில் அவருக்கு பிணை வழங்க வேண்டும் என்று பல்வேறு மனித உரிமை ஆர்வலர்களும் பன்னாட்டு அமைப்புகளும் கோரி வந்தன.
இன்று கூட அவரது பிணை தொடர்பான வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் தான் அவரது இறப்பு செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்ட ஸ்டான் ஸ்வாமிக்கு பார்க்கின்சன் நோய் இருந்ததால் தண்ணீர் கூட அருந்த முடியாமல் இருந்தார். அவர் கோரிய water sipper கூட மறுக்கப்பட்டது. சிறையில் இருந்த அவருக்கு கொரோனா வெருவித் தொற்றும் ஏற்பட்டது.
உரிய விசாரணையும் மேற்கொள்ளாமல் உடல் நிலை கருதி பிணையும் வழங்காமல், உரிய மருத்துவமும் அளிக்காமல் இன்று உயிரிழந்தே விட்டார்.
செய்தி: சதீஷ் லெட்சுமணன், ஊடகவியலாளர்
💥 தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,715 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
54 பேர் உயிரிழந்து உள்ளனர்; 4,029 பேர் குணமடைந்து உள்ளனர்.
* மே மாதம் முதல் இன்றுவரை சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பகிர்ந்த நபர்கள் மீது 75 வழக்குகள் பதிவு!
இதில் எல்லை மீறிய 16 நபர்கள் கைது: தமிழக காவல்துறை தகவல்
* உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, மாவட்ட செயலர்களுடன், வரும் 9ம் தேதி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் ஆலோசனை நடத்துகின்றனர்.
💥 மஹாராஷ்டிரா சட்டசபையில் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக கூறி 12 பா.ஜ., எம்எல்ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்து அம்மாநில சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
மஹாராஷ்டிர சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் இரண்டு நாள்களுக்கு நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்னைகளுக்கான தீர்மானம் முன்வைக்கப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து, மாநிலங்களில் உள்ள பிரச்னைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் எனக் கோரி பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால், சட்டசபை சிறிது நேரம் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
தற்காலிக சபாநாயகர் பாஸ்கர் ஜாதவின் அறைக்கு சென்ற பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் 12 பேர் அவரைத் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், கடும் ரகளையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, அமளியில் ஈடுபட்டதாக கூறப்படும் 12 உறுப்பினர்களை ஓராண்டிற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ் அறிவித்துள்ளார்.
💥எழுவர் விடுதலையில் நிறைய சட்டச்சிக்கல் உள்ளது!
முதல்வர் இதில் எந்த சிக்கலிலும் சிக்கிக்கொள்ள மாட்டார்.
எழுவர் விடுதலை குறித்த கேள்விக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதில்
💥 சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இனி சிறப்பு மதிப்பீடு:
சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு நடப்பு கல்வியாண்டில் முதல் சிறப்பு மதிப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா பேரிடர் போன்றவற்றால் பொதுத்தேர்வு நடத்த முடியாமல் போகும் சூழலைத் தவிர்க்க மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிக்கையில், 10 மற்றும் 12-ம் வகுப்பில் பாடத்திட்டத்தை இரண்டாக பிரித்து முதல் பருவம் மற்றும் இரண்டாம் பருவம் என தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும் அகமதிப்பீட்டு தேர்வும் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment