அக்னிப்புரட்சி இன்றைய (07.07.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (07.07.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (07.07.2021) முக்கிய செய்திகள்.

* தமிழ்நாடு அரசு Cable TV நிறுவனத்திற்கு குறிஞ்சி என். சிவகுமாரை தலைவராக நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணை

* சென்னையில் பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து லிட்டர் பெட்ரோல் 101.06 ரூபாய்க்கும், டீசல் விலை 15 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் டீசல் 94.06 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று நடுவண் அமைச்சரவையில் கூட்டுறவுத் துறை என புதிதாக ஒரு துறை உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

* பா.ஜ.க. வுடன் கூட்டணி வைத்ததால் தோல்வியை சந்தித்தோம்.  சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்து விட்டோம்!

:விழுப்புரம் மாவட்டம் வானூரில் நடந்த அ.தி.மு.க. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

* பழம்பெரும் நடிகர் திலீப் குமார் (98)  உடல்நலக்குறைவால் காலமானார்.

இந்திய சினிமாவில் அதிக விருதுகள் பெற்றவர் திலீப் குமார்:
மகத்தான நடிகர்களில் ஒருவரான திலீப் குமார், இந்திய திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை 1994-ம் ஆண்டில் வென்றார்.

மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் பட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளை அதிகமுறை வென்றுள்ளார்.

1944-ம் ஆண்டில் நடிகராக அறிமுகமாகி, 50 ஆண்டுகளில் 65 படங்களில் நடித்துள்ளார். 1998-ல் வெளிவந்த கிலா என்ற படம் தான் இவரின் கடைசி படமாகும்.

* முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி கொலை:

டெல்லியில் வசந்த் விகார் பகுதியில் வசித்து வந்த கிட்டி குமாரமங்கலம் (67) உச்சநீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.

நேற்றிரவு 8:30 மணியளவில் கொள்ளையடிக்கும் நோக்கில் வந்த இருவர், கிட்டி குமாரமங்கலத்தை கொலை செய்ததாக டெல்லி போலீஸ் தகவல்; ஒருவன் கைது.

* காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சி சட்டப்படி தடுக்கப்படும் - கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கருத்துக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி.

சட்டப்படி மேகதாது அணை கட்டப்படும் என எடியூரப்பா கூறியிருந்தார்.

* திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்துறைத் தலைவர் பால் சந்திரமோகன் பாலியல் புகாரில் கைது.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த‌தாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் கைது.

பேராசிரியர் பால் சந்திரமோகன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு.

* முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் நிபந்தனை.

பாஸ்போர்ட்டை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவு.

* பதவி என்பது பொறுப்பு; பொறுப்போடு மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என கலைஞர் அடிக்கடி சொல்வார்.

முதல்வர் பதவியை, பதவியாக கருதாமல் பொறுப்பாக கருதி என் பயணம் தொடரும் - கருணாநிதி இல்லத்தில் உள்ள குறிப்பேட்டில் முதல்வர் ஸ்டாலின் பதிவு.

* மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் ராஜினாமா.

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், சதானந்த கவுடா, தேபஸ்ரீ சவுத்திரி ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிப்பு.

மத்திய அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட உள்ள நிலையில் தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் பதவி விலகல்.

* மத்திய அமைச்சரவை விரிவாக்கம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

மத்திய அமைச்சரவை விரிவாக்க பணிகளுக்காக ஜனாதிபதி மாளிகைக்கு வர 50 பாஸ்கள் மட்டுமே அனுமதி.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு குறைவான நபர்களே அமைச்சரவை விரிவாக்கத்திற்கு அழைப்பு.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இன்று மாலை விரிவாக்கம்.

* 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவு தயாரிக்கும் பணி தீவிரம்; சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆய்வு நடத்த வேண்டும்-மண்டல இயக்குநர்களுக்கு உத்தரவு.

சிபிஎஸ்இ பள்ளிகளில் 10, 12-ம்வகுப்புகளுக்கு இறுதித் தேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணி முறையாக நடக்கிறதா என திடீர் ஆய்வு செய்யுமாறு மண்டல இயக்குநர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா என அனைத்து பிரிவு பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

இது தொடர்பான அறிக்கையை ஜூலை 12-க்குள் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* மேகதாதுவில் அணை கட்டுவோம் என தொடர்ந்து கூறி வரும் கர்நாடக அரசை கண்டித்து வரும் 13ம் தேதி திருச்சி முதல் கடலூர் வரை  கர்நாடக முதலமைச்சர் உருவ பொம்மை எரிக்கும் போராட்டம் -  காவிரி உரிமை மீட்பு குழு அறிவிப்பு.

* மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ராஜினாமா.
இன்று மாலை மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில் ராஜினாமா.

* ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அளித்த அனுமதியை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க கோரி மனு - உச்சநீதிமன்றத்தில் புதிய இடைக்கால மனுவை தாக்கல் செய்தது வேதாந்தா நிறுவனம்.

* தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமனம்.

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமனம் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

* மத்திய அமைச்சர்கள் 12 பேரின் ராஜினாமாவை ஏற்று கொண்டார் குடியரசுத்தலைவர்.

ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரும் ராஜினாமா.

* அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.

தேசநலன் கருதியும், தமிழகத்தின் நலன் கருதியும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்; அதில் மாற்றுக் கருத்து இல்லை - பன்னீர்செல்வம்.

பாஜக மீதும், பிரதமர் மோடி மீதும் அதிமுக முழு நம்பிக்கை வைத்துள்ளது - அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்.

பாஜகவால் தான் அதிமுக தேர்தலில் தோல்வி அடைந்த‌து என்ற சிவி.சண்முகத்தின் கருத்து சர்ச்சையான நிலையில் ஓ.பி.எஸ் அறிக்கை.

* மத்திய அமைச்சரவை விரிவாக்கம்: 43 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு... அவர்கள் பற்றிய குறிப்பு...

மத்திய அமைச்சராக பதவியேற்கும் பாஜக மாநில தலைவர் எல். முருகன் பற்றிய குறிப்பில், "கொங்குநாடு - தமிழ்நாடு" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மத்திய அமைச்சகம் விரிவாக்கம் செய்யப்பட்டதையடுத்து புதிதாக 15 அமைச்சர்கள், 28 இணை அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

* தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 3,367 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 25,06,848ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 64 பேர் பலியாகியுள்ளனர். 

இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 33,196ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 3,704 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 24,39,576 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 

தற்போது மருத்துவமனையில் 34,076 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

* மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் முருகன்:

மீன்வளத்துறை, கால்நடைத்துறை, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறைகளின் இணை அமைச்சராக எல்.முருகன் நியமனம் .

* பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் உள்ள 9 பெண் அமைச்சர்கள்.

* ஹைதி நாட்டின் அதிபர் ஜோவெனல் மாய்சே தனது இல்லத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

கரீபியன் கடலில் உள்ள தீவு நாடுகளில் ஒன்றான ஹைதியின் அதிபர் ஜோவெனல் மாய்சே இன்று போர்ட்டொ பிரின்ஸ் நகரில் உள்ள அவரது தனியார் குடியிருப்பு வளாகத்திற்குள் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவரது மனைவி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தகவலை ஹைதி நாட்டின் இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் உறுதிப்படுத்தியுள்ளார். இதை, ‘மனித தன்மையற்ற காட்டுமிராண்டித் தனமான செயல்’ என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அரசாங்கத்தை தொடர்ந்து வழிநடத்தவும் தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

ஹைதி நாட்டில் சமீப காலமாக வறுமை மற்றும் உணவு பற்றாக்குறை காரணமாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இதனால் நாட்டின் தலைநகர் போர்ட்டொ பிரின்சில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதிபர் ஜோவெனல் மாய்சே கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்றதில் இருந்தே அவரது நடவடிக்கைகளுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

* இந்திய வருவாய் பணி அலுவலர் சுபஶ்ரீ அனந்தகிருஷ்ணனுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி- வருமான வரித்துறையின் முதன்மை ஆணையராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது

* பள்ளிகளில் 75% கட்டணம் மட்டுமே பெற வேண்டும் என  பள்ளிக்கல்வித்துறை ஆணை

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages