அக்னிப்புரட்சி இன்றைய (08.07.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (08.07.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (08.07.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து லிட்டர் பெட்ரோல் 101.37 ரூபாய்க்கும், டீசல் விலை 9 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் டீசல் 94.15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

* மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார் எல்.முருகன்.

“மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பாலமாக செயல்படுவேன்; மீன்வளத்தை பெருக்கவும், மீனவர் நலன் தொடர்பாகவும் நடவடிக்கை எடுப்பேன்” -  எல்.முருகன்.

* யூரோ கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து:

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் 2வது அரையிறுதி போட்டியில் லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் இங்கிலாந்து, டென்மார்க் அணிகள் மோதின.

இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி யூரோ கோப்பை வரலாற்றில், முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஜூலை 11ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி இத்தாலியை எதிர்கொள்கிறது.

* காவிரியிலிருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறக்காமல் ஜூலை 5 வரை 5 TMC நீர் நிலுவை வைத்துள்ளது. தற்போது குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் தருவதால் நீர்மட்டம் விரைவாக  சரிந்து வருகிறது.  வரும் 14ல் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் முறையிட தமிழக அரசு முடிவு

* பாஜக குறித்து நான் கூறியது எனது சொந்த கருத்து.

பாஜக - அதிமுக கூட்டணி குறித்து தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.

* நீட் பாதிப்பு குறித்த ஆய்வுப்பணிகள் 90% முடிவடைந்துவிட்டன.

கால அவகாசத்தை மேலும் நீட்டிப்பதற்கு கேட்கவில்லை - ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன்.

* தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ள வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல்.

* மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ள எல்.முருகனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.

* கொரோனாவால் இறந்தவர்களுக்கு உரிய முறையில் இறப்புச் சான்றிதழ்கள் வழங்குவதை உறுதி செய்யவேண்டும்- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரண உதவிகளைப் பெறும் வகையில், உரிய முறையில் இறப்புச் சான்றிதழ்கள் வழங்குவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.36,400-க்கு விற்பனை
ஒரு கிராம் தங்கம் ரூ.4,550-க்கு விற்பனை.

* தமிழ்க உயர்கல்வி மன்றத்திற்கு புதிய தலைவர், துணைத் தலைவர் நியமனம்.

உயர்கல்வி மன்ற தலைவராக அமைச்சர் பொன்முடி செயல்படுவார்; துணை தலைவராக பேராசிரியர் அ.ராமசாமி நியமனம்.

* மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாட்டின் சில பகுதிகள் பாலைவனமாக மாறும். தமிழ்நாடு அரசு இந்த பிரச்னையில் நல்ல தீர்வை காண வேண்டும் - த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

* திமுகவில் இணைந்தார் மகேந்திரன்:
மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய அவர், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் தனது ஆதரவாளர்களுடன் திமுக இணைந்து கொண்டார்.

* தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்.

* தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,211 பேருக்கு கொரோனா உறுதி; 3,565 பேர் குணமடைந்த நிலையில் 57 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

* நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய தமிழ்நாடு அரசு குழுவை நியமிக்க முடியாது - மத்திய அரசு.

தமிழ்நாடு அரசு அமைத்த குழு நியமனம் மாநில அரசின் அதிகார வரம்பு மீறல் - மத்திய அரசு.

தமிழ்நாடு அரசு நியமித்த குழு உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முரணானது - சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages