அக்னிப்புரட்சி இன்றைய (09.07.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.101.37 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.94.15 க்கும் விற்பனை.
* தமிழ்நாட்டின் பல இடங்களில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், இன்று பகலிலும் மழை தொடரும் என- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
* சென்னை, தலைமை செயலகத்தில் 21 எழுத்தாளர்களுக்கு சிறந்த படைப்புக்கான விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
2018-2019 மற்றும் 2019-2020ஆம் ஆண்டிற்கான சிறந்த படைப்புகளுக்கு முதலமைச்சர் விருது வழங்கினார்.
* பெரியார் பல்கலை., மதுரை காமராஜர் பல்கலை., மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரிக்க குழு அமைப்பு.
முறைகேடுகள் தொடர்பான விசாரணை அறிக்கையை 3 மாதத்திற்குள் இக்குழு தாக்கல் செய்யும் - தமிழக அரசு.
* மேகதாது அணை பிரச்னை - ஜூலை 12ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்.
மேகதாது அணை தொடர்பாக விவாதிக்க 12ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு.
* கரூரில் பட்டாசு வெடித்த பாஜகவினர் வாக்குவாதம் - கைது:
கரூரில் அனுமதியின்றி பட்டாசு வெடித்து கொண்டாடிய பாஜகவினர் கைது.
பட்டாசு வெடிப்பது தொடர்பாக பாஜக ஆதரவாளர்கள்- கலெக்டர் இடையே கடும் வாக்குவாதம்.
பாஜக தலைவராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டதை பாஜகவினர் கொண்டாடியபோது வாக்குவாதம்.
அனுமதியின்றி பட்டாசு வெடித்த பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
* வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தகவல்.
தேனி, நீலகிரி, கோவையில் இடியுடன் கூடிய மிக கனமழை மழைக்கு வாய்ப்பு, இந்த 3 மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்.
டெல்டா மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது
* வங்கதேசம் ரூப்கஞ்சில் உணவு மற்றும் குளிர்பான தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்தில் 40 பேர் உயிரிழப்பு.
தீ விபத்தில் காயமடைந்த 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
* தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.36,120-க்கு விற்பனை.
ஒரு கிராம் தங்கம் ரூ.4,515-க்கு விற்பனை.
* முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு இதுவரை ரூ.472 கோடி நிதி வந்துள்ளது -நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
சில நாட்களில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வரும் தொகையை பொதுமக்களுக்கு அறிவிக்க இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
* ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றால் ஓட்டுனர் உரிமம் பெறலாம் என்ற மத்திய அரசின் சட்டத் திருத்தத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
* 12 ஆம் தேதிக்குள் 15 லட்சம் தடுப்பூசிகளை தருவதாக மத்திய அரசு உறுதி.
* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுப்படுத்த கோரிக்கை.
புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க கோரினோம் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.
* சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை.
* வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி : அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விலக்கு.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு.
சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விலக்கு.
* கடற்படை தளங்கள், கடற்படைக்கு சொந்தமான இடங்களுக்கு அருகே ட்ரோன்கள் பறக்க தடை - பாதுகாப்புத்துறை.
கடற்படை தளங்கள் இருக்கும் பகுதிகளில் 3 கி.மீ. சுற்றளவில் ட்ரோன்கள் பறக்க தடை.
* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,039 கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 69 பேர் உயிரிழந்து உள்ளனர். 3,411 பேர் குணமடைந்து உள்ளனர்.
No comments:
Post a Comment