அக்னிப்புரட்சி இன்றைய (11.07.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (11.07.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (11.07.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.101.67 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.94.39 க்கும் விற்பனை.

* கோபா அமெரிக்கா கால்பந்து தொடர்; மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

💥 28 ஆண்டுகளுக்கு பிறகு கோபா அமெரிக்கா கோப்பையை வென்றது அர்ஜென்டீனா.

* புதுச்சேரியில் வரும் 16 ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12 வரை மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும்- முதல்வர் அறிவிப்பு.

* அமைச்சர்களின் இலாகா பட்டியலை  துணைநிலை ஆளுநரிடம் வழங்கப்பட்டுள்ளது.

* திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்துடன் அதிமுகவினர் பலரும் திமுகவில்  இணைந்தனர்.

இந்தியாவே திரும்பிப்பார்க்கும் வகையில் ஆட்சி செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்-தோப்பு வெங்கடாசலம்.

* தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்தார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கொரோனா பொதுநிவாரண நிதிக்காக ரூ 10 லட்சத்தை முதலமைச்சரிடம் ஒப்படைத்தார், தேமுதிக தலைவர் விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்திப்பு.

💥 வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: மிக கனமழை பெய்ய வாய்ப்பு.

கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திரா, ஒடிசா இடையே வங்கக் கடலில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும்.

தேனி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

* டெல்லி : 300யூனிட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.

பழைய பில்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்  வழங்கப்படும்.

24மணி நேர மின்சாரம் வழங்க சிறிது நேரம் எடுக்கும்,ஆனால் நாங்கள் அதை செய்வோம்- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

💥 புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சர்களின் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் ரங்கசாமிக்கு கூட்டுறவுத்துறை, சுகாதாரம், வருவாய், உள்ளாட்சி நிர்வாகம், பொது நிர்வாகம், அறநிலையத்துறை உள்ளிட்ட 13 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

க.லட்சுமி நாராயணன் - பொதுப்பணித்துறை, சுற்றலாத்துறை, விமானப் போக்குவரத்து, மீன்வளத்துறை, சட்டத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, அச்சகம்.

தேனி சி.ஜெயக்குமார் - வேளாண், கால்நடைத்துறை, வனத்துறை, சமூக நலன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்.

சந்திரபிரியங்கா - ஆதி திராவிடர் நலன், போக்குவரத்து, வீட்டுவசதித் துறை, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு, கலை மற்றும் கலாசாரம்.

ஏ.நமச்சிவாயம் - உள்துறை, மின்சாரத்துறை, தொழில்கள் மற்றும் வர்த்தகம், கல்வித்துறை.

சாய் ஜெ.சரவணன்குமார் - நுகர்பொருள் வழங்கல், ஊரக வளர்ச்சித்துறை, சிறுபான்மையினர் நலன், சமூக மேம்பாடு, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

💥 கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் பாய்லர் வெடித்து 2 பேர் பலி:

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் டயர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து இருவர் உயிரிழப்பு - 3 பேர் படுகாயம்.

* பொதுமக்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து இணையவழியில் OTP பெற்றுக் கொண்டு  மோசடியாக பணம் திருடப்பட்டால் 155260 என்கிற Cyber Crime  உதவி எண்ணுக்கு அழைக்குமாறு காவல்துறை அறிவுறுத்தல்

* தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என எழுந்திருக்கும் விஷமக்குரல்களை நடுவண், மாநில அரசுகள் ஆரம்பத்திலேயே அடக்கிட வேண்டியது அவசியம்.! - அமமுக பொதுச் செயலாளர் TTV தினகரன் கண்டனம்

💥 மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டமான விண்வெளி சுற்றுலா திட்டத்தின் ஒரு பகுதியாக புகழ்பெற்ற  தொழிலதிபர் Richard Bradson தலைமையிலான 6 பேர் கொண்ட குழு Unity-22 விண்கலத்தின் மூலம் விண்வெளி புறப்பட்டுச் சென்றது

விண்வெளிக்கு சுற்றுலா செல்ல சுமார் 600 பேர் வரை முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

* ஆறாவது முறையாக ஆடவர் பிரிவில் விம்பிள்டன் பட்டத்தை ஜோகோவிச் வென்றார்

💥 தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 2,775 கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 47 பேர் உயிரிழந்து உள்ளனர். 3,188 பேர் குணமடைந்து உள்ளனர்.

💥 விண்கலத்தில் புறப்பட்ட ரிச்சர்ட் பிரான்ஸன்.

அமெரிக்க தனியார் நிறுவனத்தின் யூனிட்டி-22 விண்கலம் மூலம் 5 பேர் விண்வெளிக்கு புறப்பட்டனர். 

நியூ மெக்சிகோ ஏவுதளத்தில் இருந்து யூனிட்டி-22 விண்கலம் விண்வெளிக்கு புறப்பட்டுச் சென்றது.

நிறுவனத்தின் தலைவர் உலக கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்ஸன் உள்பட 5 பேர் கொண்ட குழு விண்வெளிக்கு புறப்பட்டுச் சென்றது. 

ஆந்திரத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்திய வம்சாவளி பெண் ஸ்ரீஷா பாண்ட்லா விண்கலத்தில் சென்றுள்ளார்.

இரட்டை விமானம் 50,000 அடி உயர இலக்கை அடைந்தவுடன் யூனிட்டி-22 விண்கலம் விடுக்கப்படும். 

யூனிட்டி விண்கலத்தில் உள்ள ஹைபிரிட் ராக்கெட் மோட்டார் இயங்கத் தொடங்கி விண்வெளிக்கு செல்லும்.
 

* அரசு பேருந்துகளில் கட்டணமில்லா  பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு நாளை முதல் பேருந்தில் பயணச்சீட்டுகள் வழங்கப்பட உள்ளது.

* தனியாரிடம் பாரத் கேஸ்?
8.4 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ள பாரத் சமையல் உருளை நிறுவனத்தை தனியாருக்கு விற்றால் தற்போதைய நிலையை போல மானிய விலையில் சமையல் எரிவாயு வழங்கலை  மேற்கொள்ள முடியுமா என்பது குறித்து ஆராய சட்ட உதவியை நடுவண் அரசு நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

💥 விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் 6-7, 6-4, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் இத்தாலி வீரர் பெரெட்டினியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.

விம்பிள்டன் தொடரில் 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் ஜோகோவிச்.

* பக்ரீத் பண்டிகை ஜூலை 21ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவிப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages