கருநாடக அரசு மேகதாது அணைக்கட்டுவது சம்பந்தமாக இன்று (12.07.21) தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக பாமக தலைவரும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி அவர்களும், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் SPவெங்கடேஷ்வரன் அவர்களும் கலந்துக் கொண்டனர்.. - Agnipuratchi

கருநாடக அரசு மேகதாது அணைக்கட்டுவது சம்பந்தமாக இன்று (12.07.21) தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக பாமக தலைவரும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி அவர்களும், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் SPவெங்கடேஷ்வரன் அவர்களும் கலந்துக் கொண்டனர்..

Share This

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 3 தீர்மானங்கள்:

மாநிலங்களின் முன் அனுமதியை பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக்கூடாது. கர்நாடக அரசின் மேகதாது அணைக் கட்டும் திட்டத்திற்கு தொடர்புடைய மத்திய அரசின் அமைச்சகங்கள் எவ்விதமான அனுமதிகளையும் வழங்கக் கூடாது என மத்திய அரசை கேட்டுக்கொள்வது.

மேகதாது அணை அமைப்பதற்கான முயற்சிகளைத் தடுப்பதில் தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்து கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் வழங்கும்.

தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில், இக்கூட்டத்தின் தீர்மானங்களை மத்திய அரசிடம் அனைத்துக் கட்சியினரும் நேரில் சென்று முதல்கட்டமாக வழங்குவது. அதன்பிறகு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகள் மற்றும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages