அக்னிப்புரட்சி இன்றைய (17.07.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (17.07.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (17.07.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் விலை 26 காசுகள் அதிகரித்து லிட்டர் பெட்ரோல் 102.49 ரூபாய்க்கும், டீசல் விலை மாற்றம் இன்றி ஒரு லிட்டர் டீசல் 94.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

*;ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு.
5 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி.

* 2021-22 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக மற்றும் கல்லூரிகளின் முதலாம் ஆண்டு சேர்க்கை செப்டம்பர் 30 க்குள் அனைத்து கல்வி நிறுவனங்களும்  முடித்துக்கொள்ளவேண்டும் - யுஜிசி.

* எங்களை மன்னித்து விடுங்கள்," போர் பகுதிகளில் நுழையும் பத்திரிகையாளர்கள் எங்களிடமும் அதனை தெரிவிக்க வேண்டும்.

அப்போதுதான் அந்த தனிப்பட்ட நபருக்கான பாதுகாப்பில் நாங்கள் கவனம் கொள்ள இயலும்" டேனிஷ்சித்திக் கொல்லப்பட்டதற்கு தலிபான்கள் தரப்பு விளக்கம்.

* தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்:

நீலகிரி, கோவை, தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 16 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.

வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

* இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருச்செந்தூர் கோயில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்துக்கு பின் பேட்டி:

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு விழா நடத்துவது குறித்து ஆலோசனை.

மீண்டும் அடுத்த மாதம் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. நீதிமன்றமே திருப்தி அடையும் வகையில் கோயில் நிலங்கள் மீட்கப்படும்.

* கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிக்கான கொள்முதல் விலையை உயர்த்தி மத்திய அரசு ஒப்பந்தம்.

கோவிஷீல்டு தடுப்பூசி கொள்முதல் விலை ரூ.205 ஆக உயர்வு.

கோவேக்சின் தடுப்பூசி கொள்முதல் விலை ரூ.215ஆக உயர்வு - முன்பு 2 தடுப்பூசிகளும் தலா ரூ.150 என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டது.

* அரசு பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழக கட்டணம் தவிர்த்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா?

முதன்மை கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

பள்ளி கல்வி ஆணையருக்கு அறிக்கை அளிக்க உத்தரவு. அனகாபுத்தூர் அரசு பள்ளியில், மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்த வழக்கில் உத்தரவு.

* திரையரங்க பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுநலனுக்கு எதிரானதாகும், அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என வழக்கை தளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

* மக்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி.

திமுக ஆட்சிக்கு வந்த உடன், உலகளாவிய டெண்டர் விடப்பட்டு, கோவிட் தடுப்பு மருந்து கொள்முதல் செய்துமக்களுக்கு போடப்படும் என்றது.

பிறகு, தமிழக மக்கள் செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் தடுப்பு நோய் மருந்து தயாரிப்பு மையத்தை மாநில அரசே ஏற்று நடத்தும் என்றும், அங்கு கோவிட் தடுப்பு மருந்து அதிகளவில் தயாரிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்து, அந்த முயற்சி பயனளிக்கவில்லை.

இதனால் தமிழக அரசு வெளிச்சந்தையில், தடுப்பு மருந்துகளை வாங்கி மக்களுக்கு அளிக்கும் என்று புதிய கதை ஒன்றை சொல்லியது.

இப்படி தினமும் ஒரு அறிக்கை பேட்டி என மக்கள் இடையே பொய்யாக வாக்குறுதிகள் அளித்தததை தவிர வேறென்ன செய்தது இந்த அரசு.

தமிழக மக்களுக்கு கொரோனா வெருவித் தடுப்பூசியினை வெளிப்படைத்தன்மையோடு செலுத்த வேண்டும்!

தமிழக மக்களுக்கு தடுப்பூசி வழங்கியது பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு கோரிக்கை

* புதிய கல்விக் கொள்கையின்படி நாட்டில் உள்ள 14 பொறியியல் கல்லூரிகளில் மாநில  மொழிகளில் பொறியியல் படிப்புகளை வழங்க AICTE அனுமதி

* பாலியல் புகார் குறித்து மாணவ, மாணவிகள் புகார் தெரிவிக்க குழு அமைக்க வேண்டும். தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் அமைக்கவும் உத்தரவு.
சமூக நல அதிகாரி, மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு செயலாளர், எஸ்.பி. அந்தஸ்து குறையாத பெண் காவல் அதிகாரி கொண்ட குழு - பரிந்துரை.

* தடுப்பூசி விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிடக்கோரிய எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்:

இந்தியாவிலேயே ஒதுக்கப்பட்ட டோஸ்களை விட கூடுதலாக தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தி சாதனை படைத்த மாநிலம் தமிழ்நாடு; இதை நேற்றைய தினம் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டு பாராட்டினார்.

அதிமுக ஆட்சியில் தினசரி சராசரியாக 61 ஆயிரம் தடுப்பூசிகளே போடப்பட்டன.
திமுக அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து தினமும் சராசரியாக 1.61 லட்சம் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

அதிமுக ஆட்சியில் 4.34 லட்சம் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டன.

தடுப்பூசிகள் வந்த எண்ணிக்கை, போடப்படும் எண்ணிக்கையை தினந்தோறும் வெளியிட்டு வருகிறோம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

* சென்னை நன்மங்கலம் காப்புக் காட்டில் வனத்துறையின் உரிய அனுமதியை பெறாமல் மாதவரம் - சோழிங்கநல்லூர் Metro ரயில் திட்ட பணிகளுக்கான வேலையை மேற்கொள்ளக் கூடாது என பசுமை தீர்ப்பாயம் ஆணை

* தமிழகத்தில் இன்று 2,205 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

43 பேர் உயிரிழப்பு மற்றும் 2,802 பேர் டிஸ்சார்ஜ்.

இன்று 1.45 லட்சம் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

தற்போது 28,590 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages