அக்னிப்புரட்சி இன்றைய (18.07.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.102.49 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.94.39 க்கும் விற்பனை.
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்; குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நாளை சந்தித்து பேசுகிறார்.
* நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது
Petrol Diesel விலையேற்றம், புதிய வேளாண் சட்டங்கள், கொரோனா தடுப்பூசி மருந்து உள்ளிட்ட பல பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் ஆயத்தமாக உள்ளன
* மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகள் வசம் 2.56 கோடி கொரோனா தடுப்பூசிகள் இருப்பு உள்ளன
- நடுவண் சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்
* பேனர் வைக்கும் கலாச்சாரத்தை நிர்வாகிகள் முற்றிலும் கைவிடவேண்டும் - திமுக தலைமைக் கழகம்.
பேனர் கலாச்சாரத்தை கடைபிடிக்கும் கட்சியினர் மீது திமுக தலைமைக் கழகம் நடவடிக்கை எடுக்கும்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கட்சியினருக்கு எச்சரிக்கை விடும் வகையில் அறிக்கை.
* இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் ஷனகா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
* நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்துக்கட்சியின் அவைகுழு தலைவர்கள் கூட்டம்.
* அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பின் திமுக மக்களவை குழுத்தலைவர் டி.ஆர்.பாலு பேட்டி
தமிழ்நாட்டின் பிரச்னைகளை பேச இருப்பது குறித்து தெரிவித்தோம்.
டீசல், பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக பேச இருப்பதாக தெரிவித்தோம்.
மேகதாது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்படும், அக்கூட்டத்தில் மத்திய அரசின் பதிலை தெரியுங்கள் என கூறினோம்.
மேகதாது அணை கட்ட மாட்டோம் என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும் ஆனால், உறுதி அளிப்பாரா என்பது தெரியாது.
கொரோனா தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினோம்; ஆனால், விவாதிப்பார்களா என்ற சந்தேகம் உள்ளது.
கொரோனா தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் பிரதமர் தனியாக பவர் பாயின்ட் மூலம் விளக்கம் தருவார் என கூறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம்.
* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,079 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
29 பேர் உயிரிழந்து உள்ளனர். 2,743 பேர் குணமடைந்து உள்ளனர்.
* இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி; 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி.
No comments:
Post a Comment