அக்னிப்புரட்சி இன்றைய (19.07.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.102.49 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.94.39 க்கும் விற்பனை.
* நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்டு 13-ம் தேதி வரை நடக்கிறது.
இரு அவைகளும் காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும்.
இந்த கூட்ட தொடரில் மத்திய அரசு 29 மசோதாக்களை நிறைவேற்ற திட்டம்.
பாராளுமன்றம் இன்று கூட உள்ள நிலையில் முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு.
கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறும் என அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு பிரதமர் மோடி நம்பிக்கை.
மேகதாது அணை விவகாரத்தை மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டுமென திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நோட்டீஸ் வழங்கி உள்ளார்
Petrol Diesel விலை உயர்வு குறித்து விவாதிக்க வேண்டுமென காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடிதம் வழங்கியுள்ளார்
* 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியீடு:
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் பட்டியலை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.
தேர்வு முடிவுகளை
tnresults.nic.in,
dge1.tn.nic.in,
dge2.tn.nic.in,
dge.tn.gov.in
என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
* மக்களவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட 4 பேருக்கு சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
* மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு, செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் தேர்வு நடத்தப்படும்.
12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை நாளை மறுநாள் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்- அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.
* எதிர்கட்சி உறுப்பினர்களின் அமலி காரணமாக மக்களவை ஒத்திவைப்பு பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு.
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 69% இட ஒதுக்கீடு 2021-22-ம் கல்வியாண்டில் அமல்படுத்தப்படுமா? - மத்திய அரசின் நிலைபாட்டை ஒரு வாரத்தில் தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
* டெல்லியில் குடியரசு தலைவர் ராம் கோவிந்தை சந்தித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நீட் தேர்வு, மேகதாது அணை உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் எடுத்துரைத்தார்.
* கல்லூரியில் சேர ஜூலை 26 முதல் விண்ணப்பம்-அமைச்சர் பொன்முடி.
கல்லூரிகளில் சேர ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் -உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி.
* டெல்லியில் முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு - குடியரசு தலைவரை சந்தித்த பின் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி.
சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவுக்குத் தலைமைதாங்க குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்துவைக்க குடியரசு தலைவருக்கு அழைப்பு.
எனது கோரிக்கையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார் - முதலமைச்சர்.
7 பேர் விடுதலை விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை, மேகதாது விவகாரம் தொடர்பாக பிரதமர், மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்.
கொரோனா 3ஆவது அலையை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை- முதலமைச்சர் ஸ்டாலின்.
தற்போது உள்ள சூழலில் பள்ளி, கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை - முதல்வர் ஸ்டாலின்.
* பத்திரிகையாளர்களின் செல்போன்கள் பெகாஸஸ் சாப்ட்வேர் மூலம் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் சுதந்திரமான விசாரணை தேவை - நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கோரிக்கை.
பெகாஸஸ் மென்பொருள் மூலம் யாரையும் உளவு பார்க்கவில்லை - நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் விளக்கம்.
எதிர்கட்சித் தலைவர்களை உளவு பார்ப்பதாக எதிர்கட்சி தரப்பு எம்பிக்கள் இரு அவைகளிலும் அமளி.
இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பு.
* திமுக மூத்த தலைவர் RS பாரதி பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவினர்களை அவமதித்ததாக கூறி அவர் மீது தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
உயர்நீதிமன்றத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியின வகுப்புகளை சேர்ந்தவர்கள் நீதியரசர்கள் ஆனது முன்னாள் முதல்வர் கருணாநிதி போட்ட பிச்சை என பேசியதற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
💥Pegasus உளவு மென்பொருள் மூலம் காங்கிரசு கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தியின் இரண்டு செல்பேசிகளும் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
💥இளநிலை மருத்துவ சேர்க்கையின் போது தேசிய ஒதுக்கீடு இடங்களை 69% இடஒதுக்கீடு முறையில் நடுவண் அரசு சேர்க்கை நடத்தாவிடில் நடைபெற உள்ள NEET தேர்வுக்கு தடை விதிக்க நேரிடும் - மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
* Neutrino திட்டத்திற்காக சுற்றுச்சூழல் அனுமதி, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. விதிகளின் படி, இந்தத் திட்டத்திற்கு மக்கள் கருத்துகேட்பு தேவையில்லை.- மத்திய அமைச்சர் அசுவினி சௌபே நாடாளுமன்றத்தில் தகவல்
No comments:
Post a Comment