அக்னிப்புரட்சி இன்றைய (26.07.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.102.49 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.94.39 க்கும் விற்பனை.
* பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் வினியோகம் தொடங்கியது.
ஆகஸ்ட் 25-ம் தேதி ரேண்டம் எண்ணும், செப்டம்பர் 4-ம் தேதி தரவரிசைப் பட்டியலும் வெளியிட திட்டம்.
* கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா.
பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவுற்ற நிகழ்ச்சியில் எடியூரப்பா அறிவிப்பு.
ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளேன் - எடியூரப்பா.
* ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை அரசு முடக்குவதாக குற்றச்சாட்டு - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் விழுப்புரத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.
* தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை மசோதா குறித்து வரும் 28-ம் தேதி ஆலோசனை.
தமிழகம், புதுச்சேரி, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த எம்.பி.க்களுக்கு மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபலா அழைப்பு.
* மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69% இட ஒதுக்கீட்டை 2021-22 ஆம் கல்வியாண்டில் அமல்படுத்துவது குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு வார காலம் அவகாசம் கேட்டுள்ளது மத்திய அரசு.
* தமிழகம் நீர் பற்றாக்குறை மாநிலமாக உள்ளது, எனவே கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம்- எடப்பாடி பழனிசாமி.
தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க வலியுறுத்தினோம்.
மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா
மாவட்டங்கள் பாலைவனம் ஆகிவிடும் என தெரிவித்தோம் - டெல்லியில் பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பிறகு ஈபிஎஸ் பேட்டி.
* நடப்பாண்டு 50 எம்பிபிஎஸ் மாணவர்களை 3 மருத்துவ கல்லூரிகளில் சேர்க்க மத்திய அரசிடம் பரிந்துரை.
எய்ம்ஸ் மருத்துவமனை சார்பாக தற்காலிகமாக மதுரை, தேனி, சிவகங்கை மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை.
* உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு பதில் மனு.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க தயாராக உள்ளோம் - தமிழக அரசு.
* தமிழகத்தில் மேலும் 1,785 பேருக்கு கொரோனா தொற்று.
தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 26 பேர் உயிரிழப்பு.
தமிழகத்தில் கொரோனாவுக்கு 22,762 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் மாணவர் சேர்க்கையில் நடப்பாண்டு முதல் வன்னியர் களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு பின்பற்றப்படும் - தமிழ்நாடு அரசு.
வன்னியர்கள் மற்றும் சீர்மரபினர்கள், இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசாணை வெளியீடு.
சிறப்பு ஒதுக்கீட்டை பிப்.26 முதல் செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியீடு.
* நடைமுறைக்கு வந்த 10.50% வன்னியர் இட ஒதுக்கீடு : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவர் இராமதாசு அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நன்றி
1. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டை 26.02.2021 முதல் நடைமுறைப்படுத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று ஆணையிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. முதலமைச்சருக்கு உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
2. தொழிற்கல்வி மாணவர் சேர்க்கை அறிவிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டாலும், அதிலும் 10.50% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது மனநிறைவளிக்கிறது. பணி நியமனங்களிலும் இந்த ஒதுக்கீடு நடைமுறையாகி விட்டது!
3. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10.50% நடைமுறைப்படுத்தப் பட்டிருப்பதால் மிக மிக பின் தங்கிய நிலையில் உள்ள வன்னிய மக்களின் நிலைமை படிப்படியாக மேம்படும்.
4. வன்னியர்களின் கல்வி - வேலைவாய்ப்புகள் மேம்பட வழிவகுக்கும் இந்த சட்டத்தை இயற்றிக் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி , முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோருக்கும் நன்றிகள்!
https://twitter.com/drramadoss/status/1419687692103675908
நடைமுறைக்கு வந்த 10.50% வன்னியர் இட ஒதுக்கீடு : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நன்றி
1. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டு வழங்குவதற்காக நிறைவேற்றப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆணையிட்டிருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
2. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள வன்னியர்களின் முன்னேற்றத்திற்காக மருத்துவர் அய்யா அவர்கள் 42 ஆண்டுகளாக நடத்திய போராட்டத்தின் பயன் இது. சமூகநீதிக் காவலர் மருத்துவர் அய்யா வழி நடப்பதில் பெருமிதம் கொள்வோம்!
No comments:
Post a Comment