அக்னிப்புரட்சி இன்றைய (27.07.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.102.49 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.94.39 க்கும் விற்பனை.
* அஞ்சல் வாக்குகளால் தான் வென்றேன்! என் கட்சியினரே என்னை முதுகில் குத்தி விட்டனர். - அமைச்சர் துரைமுருகன்
மக்களை வாக்கு போடவிடாமல் தடுத்துவிட்டு, குடித்துவிட்டு எதிர்கட்சியிடம் பணம் வாங்கி கொண்டனர்.
உள்ளாட்சித் தேர்தல் முடிந்தவுடன் அவர்களின் பட்டை உரிக்கப்படும்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்டம்
* ஒலிம்பிக் ஹாக்கி லீக் போட்டியில் ஸ்பெயின் அணியை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது இந்திய ஆடவர் அணி.
* தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை:
தலைமைச்செயலகத்தில் மாலை 5 மணிக்கு கூட்டம் என தகவல்.
அமைச்சர்கள் நேரு, பெரியகருப்பன், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டிய சூழல்.
இந்த ஆண்டு இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க அரசு திட்டம்.
* கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தோட்ட தொழிலாளியாக இருந்த செல்வமாரி படித்து பட்டம் பெற்று ஆசிரியராக பணி ஏற்று இருக்கிறார். மேலும் முனைவர் பட்டம் பெற பயின்று கொண்டிருக்கிறார்.
* 33 லட்சம் மதிப்புள்ள பணிகள் நடைபெற்றதாக நாளிதழில் பொய் செய்தி. திமுகவை சேர்ந்த திருவாரூர் மாவட்டம் மாங்குடி ஊராட்சி மன்றத் தலைவரை கண்டித்து ஊர் முழுக்க சுவரொட்டிகளை ஒட்டி பொதுமக்கள் கண்டனம்.
* துப்பாக்கி சுடுதலில் இந்திய இணை பதக்க வாய்ப்பை இழந்தது!
10 m Air Pistol கலப்பு குழு பிரிவின் 2 வது தகுதி சுற்றில் 7 வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தது மானு பாகர், செளரப் செளத்ரி இணை
* வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சிறப்பு ஒதுக்கீட்டை 26-2-2021 முதல் செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியீடு
அனைத்து கல்விச் சேர்க்கைகளும் புதிய சிறப்பு ஒதுக்கீட்டு முறையின் அடிப்படையிலேயே நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு.
9 முதல் 12 வரை உள்ள வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
பிற மாநிலங்களில் உள்ள நிலவரம் பற்றி முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்ற பின் உரிய முடிவு எடுக்கப்படும்- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.
* பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது; யாரும் விருப்பப்பட்டு பிச்சை எடுப்பதில்லை, மாறாக வறுமையால் தான் ஒருவர் பிச்சை எடுக்கிறார் - உச்சநீதிமன்றம்
வசதிபடைத்தவர்களின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்க விரும்பவில்லை-உச்சநீதிமன்றம் கருத்து.
பிச்சை எடுப்பவர்களுக்கு மறுவாழ்வு மையத்தை ஏற்படுத்தி தர வேண்டும்.
அவ்வாறு இருக்கும் குழந்தைகளுக்கு கல்வி வழங்க வேண்டிய அவசியம் - உச்சநீதிமன்றம்.
* நடிகர் விஜய்க்கு ரூ 1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ்.
சொகுசு காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடியை எதிர்த்த நடிகர் விஜய் வழக்கு
நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்க்கவில்லை - சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தரப்பு விளக்கம்.
நீதிமன்றத்தை நாடியதற்காக அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்று விஜய் தரப்பு வாதம்.
* மருத்துவப் படிப்பு அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது பற்றி விரைந்து முடிவு எடுக்கப்படும் - பிரதமர் மோடி.
ஓ.பி.சி. இடஒதுக்கீடு பிரச்சனைக்கு உயர் முன்னுரிமை கொடுத்து தீர்வு காண பிரதமர் மோடி அறிவுறுத்தல்.
* முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொத்து குவிப்பு வழக்கில் மீண்டும் சோதனை.
சென்னை, அண்ணா நகரில் உள்ள ரவிக்குமார் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை.
எச்சரிக்கை
ஒரு சர்வதேச அழைப்பை பெறும்போது,உங்கள் போனில் ஒரு இந்திய எண் அல்லது எண் இல்லை என்று காட்டப்பட்டால்,தயவுசெய்து 1800110420/1963 என்ற டோல்பிரீ எண்ணிற்கு தெரிவிக்கவும்.
* அமலானது 10.5% இட ஒதுக்கீடு:
கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு உடனடியாக அமலானது.
பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் MBC ( V ) என்ற பிரிவு சேர்க்கப்பட்டது.
* தமிழக அரசின் சார்பில் புதிய விருது!
தமிழினத்தின் வளர்ச்சிக்கு பாடுப்பட்டவர்களுக்கு "தகைசால் தமிழர்" என்ற பெயரில் புதிய விருதை உருவாக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை.
* இந்திய கிரிக்கெட் வீரர் க்ருனால் பாண்டியாவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
க்ருனால் பாண்டியாவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று இரவு நடக்கவிருந்த இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு.
* டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற சென்னைப் பல்கலைகழக தொலைதூரக்கல்வி தேர்வு முடிவுகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும்.
ideunom.ac.in என்ற இணையதளத்தில் முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என சென்னைப் பல்கலைக்கழகம் தகவல்.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த விவாகாரத்தில், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நேரில் வருகை புரிய வேண்டுமென சிறப்பு நீதிமன்றம் ஆணை
அமைச்சர் என்பதால் நீதிமன்றத்தில் வருகை தருவதில் இருந்து விலக்களிக்கவோ, சலுகை வழங்கவோ முடியாது என நீதிமன்றம் திட்டவட்டம்.
* Torrent Gas நிறுவனம் வல்லூரில் எரிவாயு வழங்கலுக்காக நிறுவியுள்ள Mother station மற்றும் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் அமைத்துள்ள 25 CNG நிலையங்களை இன்று முதலமைச்சர் திறந்து வைத்தார்.
மாசுபாட்டைக் குறைக்க மாற்று எரிபொருள்களை ஊக்குவிக்கும் முன்னெடுப்புகளை அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு
* கர்நாடக முதல்வராக மூத்த அமைச்சர் பசவராஜ் பொம்மை தேர்வு.
முன்னாள் முதல்வர் எஸ்.ஆர். பொம்மை மகன் பசவராஜ் பொம்மை.
எடியூரப்பாவுக்கு நெருக்கமான பசவராஜ் பொம்மை உள்துறை அமைச்சராக இருந்தார்.
கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை நாளை பதவியேற்க உள்ளார்!
* தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ரயில்வே ஐ.ஜி.,யாக இருந்த சுமித் சரன் ஊர்க்காவல் படை ஐ.ஜி.,யாக நியமனம்.
பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.,யாக இருந்த தினகரன், சிலைகடத்தல் தடுப்பிரிவு ஐ.ஜி.,யாக நியமனம்.
திருச்சி ஆயுதப்படை டிஐஜியாக இருந்த கயல்விழி, சென்னை காவல்துறை பயிற்சி பிரிவு டிஐஜியாக நியமனம்.
திருவாரூர் எஸ்.பி.,யாக இருந்த சீனிவாசன் திண்டுக்கல் எஸ்.பியாக நியமனம்.
சென்னை குற்றப்பிரிவு சிஐடி சிறப்பு பிரிவு எஸ்.பி.,யாக இருந்த விஜயகுமார் திருவாரூர் எஸ்.பி.,யாக நியமனம்.
திண்டுக்கல் எஸ்.பி.,யாக இருந்த ரவளிபிரியா தஞ்சாவூர் எஸ்.பி.,யாக நியமனம்.
தஞ்சாவூர் எஸ்.பி.,யாக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய் ராணிப்பேட்டை எஸ்.பி.,யாக நியமனம்.
ராணிப்பேட்டை எஸ்.பி.,யாக இருந்த ஓம் பிரகாஷ் மீனா சென்னை சைபர் குற்றப்பிரிவு 2 எஸ்.பி.,யாக நியமனம்.
சென்னை சிறப்பு சிஐடி குற்றப்பிரிவு 2 எஸ்.பி.,யாக விக்ரமன் நியமனம் .
சென்னை சைபர் குற்றப்பிரிவு 3 எஸ்.பி.,யாக தேவராணி நியமனம்.
சென்னை பெருநகர துணை ஆணையராக அருண் பாலகோபாலன் நியமனம்.
சென்னை, பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு துணை ஆணையராக ஷியாமளா தேவி நியமனம்.
* நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி, கு. ராமகிருஷ்ணன், திராவிடர் கழகம் குமரேசன் ஆகியோரது செல்பேசிகளில் "பெகாசசு மென்பொருள்" இருந்ததாக தி வயர் கட்டுரையில் தகவல் வெளியாகியுள்ளது
* கொரோனா பாதிப்பை குறைக்க போராடும் கேரளம்!
கேரளா மாநிலத்தில் இன்று மட்டும் புதிதாக 22129 கொரோனா பாதிப்புகள் பதியப்பட்டுள்ளது.
* வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்" என கூட்டாக மக்களவையில் முழக்கம் எழுப்பிய எதிர்க்கட்சியினர்!
சட்ட வரைவுகளை வாதமின்றி அவையில் நிறைவேற்றிய நடுவண் அரசை கண்டித்து இன்று மக்களவையில் பஞ்சாப் காங்கிரசு கட்சி உறுப்பினர் ஜஸ்பீர் சிங் கில் "வேண்டும்… வேண்டும் ..." என்று தமிழில் முழங்க,
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட்டாக
நீதி வேண்டும்"
என பின்பற்றி முழக்கமிட்டனர்.
இந்த அரிய நிகழ்வை முன்னாள் நடுவண் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment