அக்னிப்புரட்சி இன்றைய (28.07.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.102.49 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.94.39 க்கும் விற்பனை.
* தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதல் கட்டமாக 36,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
* தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் தொடங்கியது.
திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, நீட்தேர்வு, பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு போன்றவற்றையும் நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டி போராட்டம்.
தேனியில் ஓபிஎஸ் - எடப்பாடியில் இபிஎஸ் ஆர்ப்பாட்டம்:
திமுக அரசை கண்டித்து தேனி மாவட்டம் போடியில் தனது இல்லம் முன்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆர்ப்பாட்டம்
சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம்.
திமுக சொன்னீங்களே செஞ்சீங்களா?!
திமுக அரசு பொறுப்பேற்று 3 மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் தேர்தல் வாக்குறுதிகளில் முதன்மையானவை ஒன்றை கூட நிறைவேற்ற வில்லை என திமுகவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று அஇஅதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.
* கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்பு:
ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வராக பதவியேற்றார் பசவராஜ் பொம்மை.
பசவராஜ் பொம்மைக்கு ஆளுநர் தாவர்சந்த் ஹெலாட் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
* சங்கரய்யாவுக்கு ’தகைசால் தமிழர்’ விருது:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர்' விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.
* டெல்லியில் ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களுடன் சந்திப்பு:
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குகிறது பா.ஜ.க. அரசு- ராகுல் காந்தி.
பெகாசஸ் விவகாரத்தில் அத்தனை எதிர்க்கட்சிகளும் ஒன்றாக திரண்டுள்ளோம்.
நாட்டு மக்களை அரசாங்கமே உளவு பார்ப்பதை எப்படி ஏற்க முடியும்?
பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரத்தில் தெளிவான பதிலை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்-ராகுல்.
* 10 லட்சம் ரூபாயை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குவதாக சங்கரய்யா அறிவிப்பு.
தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது சங்கரய்யாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
விருது தொகை 10 லட்சத்தை கொரோனா நிவாரண நிதிக்கு மொத்தமாக வழங்குவதாக சங்கரய்யா அறிவிப்பு.
* உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் பகுதி மறுவரையறை மற்றும் இட ஒதுக்கீட்டினை இறுதி செய்வது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்தில் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
* பெகாசசு உள்ளிட்ட விவகாரங்களை கையில் எடுத்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வரும் பத்திற்கும் மேற்பட்ட காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்த கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்காத வகையில் இடை நீக்கம் செய்ய நடுவண் அரசு முடிவு
* மேகதாதுவில் அணையை கட்டியே தீருவோம் - கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திட்டவட்டம்.
மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகத்திற்குதான் அதிகப்பலன் - பசவராஜ் பொம்மை.
* அபராதம் கட்ட தயாராக இல்லை - விஜய்.
கொரோனா நிவாரண நிதியாக அரசிடம் 25 லட்சம் ரூபாயை ஏற்கனவே கொடுத்துள்ளதாகவும், சொகுசு கார் வழக்கில் அபராதமாக விதிக்கப்பட்ட தொகையை நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை எனவும் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி முன்பு விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1,756 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் 29 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இன்று ஒரே நாளில் 2,394 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
* ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தொடங்கின
வாக்குச்சாவடிகள் அமைத்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் ஆக்கம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்.
* ஒரு கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை மருந்துகள் வழங்கும் "மக்களை தேடி மருத்துவம்" எனும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் வருகின்ற 5ம் தேதி கிருஷ்ணகிரியில் துவக்கி வைக்கிறார்.
No comments:
Post a Comment