தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளை கொண்டாடும் உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். - Agnipuratchi

தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளை கொண்டாடும் உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

Share This

தியாகத் திருநாளாம்  பக்ரீத்  திருநாளை கொண்டாடும் உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

இஸ்லாமிய இறைதூதர்களில் ஒருவரான இப்ராகிம் நெடுநாட்களுக்கு பிறகு தமக்கு பிறந்த மகன் இஸ்மாயிலை கனவில் கிடைத்த இறைவனின் கட்டளையை மதித்து உயிர்ப்பலி கொடுக்கத் துணிந்தார். தமக்காக மகனையே தியாகம் செய்யத் துணிந்த இறைதூதரை எண்ணி வியந்த இறைவன், உடனடியாக வானவரை அனுப்பி இஸ்மாயில் பலிகொடுக்கப்படும் நிகழ்வை தடுத்து நிறுத்தியதுடன், அதற்குப் பதிலாக ஆட்டைக் கொடுத்து பலியிடும்படி கேட்டுக் கொண்டார். இறைதூதர் இப்ராகிமின் தியாக உள்ளத்தைப் பாராட்டும் விதமாகவே உலகம் முழுவதும் பக்ரீத் கொண்டாடப்பட்டு வருகிறது. இது திருவிழா மட்டுமல்ல... இறைபக்தியை நினைவூட்டும் நாளும் கூட.

இஸ்லாமியர்கள் அனைவருமே இறைபக்தியில் மட்டுமின்றி, ஈகையிலும், தியாகத்திலும் இணையற்று திகழ்கின்றனர். தியாகத் திருநாள் என்று போற்றப்படும் பக்ரித் திருநாளில் இஸ்லாமியர்கள் அனைவரும்  தங்களிடத்தில் இருப்பதில் ஒரு பகுதியை இல்லாத பிறருக்கு ஈந்து தங்களின் ஈகை குணத்தையும், மனிதநேயத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். அது தான் இஸ்லாத் கற்றுக் கொடுத்த பாடம் ஆகும்.

உலகில் எந்த மதத்தின் திருநாளாக இருந்தாலும் அது மக்களுக்கு போதிப்பது அன்பு செலுத்துங்கள்; இல்லாதவர்களுக்கு உதவுங்கள் என்ற செய்தியைத் தான். இன்னும் கேட்டால் இல்லாதவர்களுக்கு  எதாவது கிடைக்க வேண்டும் என்பது திருநாள்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கங்களின் ஒன்றாகும். பக்ரித் திருநாள் உருவாக்கப்பட்டதன் நோக்கங்களில் ஒன்றும் இல்லாதவர்களுக்கு உதவுவது தான்.

உலகில் எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்பட்டு விட்டால், இல்லாமை என்பதே இருக்காது. அத்தகைய நிலை ஏற்பட வேண்டும்; அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம், மகிழ்ச்சி, வளம் உள்ளிட்ட அனைத்தும் தழைத்தோங்க வேண்டும் என்று கூறி, அத்தகைய நிலையை உருவாக்குவதற்கு உழைக்க இந்த நன்னாளில்  சபதம் ஏற்போம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages