அக்னிப்புரட்சி இன்றைய (02.08.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.102.49 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.94.39 க்கும் விற்பனை.
* நாகை: கோடியக்கரை கடற்பகுதி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு.
இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் நாகை மீனவர் கலைச்செல்வன் காயம்.
* மகளிர் ஹாக்கி - இந்தியா வரலாற்று சாதனை:
ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டி ; காலிறுதி சுற்றில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
காலிறுதியில் ஆஸ்திரேலிய அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி.
* இன்று காலை 11:30 மணிக்கு பூமிக்கு மிக அருகில் வருகிறது சனி
இந்தியாவில் பகல் நேரம் என்பதால் இதனை வெறும் கண்களால் பார்க்க முடியாது.
இருப்பினும் எங்கெல்லாம் இரவு நேரமாக உள்ளதோ அங்கே வெளிச்சமான சனிக் கோளை வெறும் கண்களால் காணமுடியும்...
* புதிய குடும்ப அட்டை வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்ட வட்ட வழங்கல் அதிகாரிகள் 2 பேர் தற்காலிக பணியிடை நீக்கம்
முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
- அமைச்சர் சக்கரபாணி
* குழந்தைகளுக்கான வழக்கமான தடுப்பூசி பணிகளில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா.
கடந்த ஆண்டு தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மட்டுமே 90% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
* தமிழகத்திற்கு 5 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தடைந்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் உருவப்பட திறப்பு விழாவில் குடியரசுத்தலைவர் இன்று பங்கேற்கிறார்.
குடியரசுத் தலைவரை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
" மகளிருக்கான கட்டணமில்லா பயணத்தால் ஏற்படும் இழப்புகளை ஆண்களிடம் விதிக்கும் நடைமுறைகளை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
* 1977ல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் காமராஜர் படத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்
அதன் பின்னர் தற்போது முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் படத்தை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் வந்திருக்கிறார்.
சட்டப்பேரவையில் வேறு எந்த தலைவர்களின் படங்களும் குடியரசுத் தலைவரால் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
* நான் யாருக்கும் பணிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. என் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் அவதூறு பரப்புகிறார்கள். கை கட்டுவது என்னுடைய நடத்தையியல்பு.
- விசிக தலைவர் தொல் திருமாவளவன் விளக்கம்
* வியாபாரிகள் அதிகளவில் கூடியதால் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையை தற்காலிகமாக மூட மதுரை ஆட்சியர் உத்தரவு.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
முகக் கவசம் அணியாதவர்களை வணிக நிறுவனங்களுக்குள் அனுமதிக்கக் கூடாது- மதுரை மாவட்ட ஆட்சியர்.
* இன்றும் நாளையும் மயிலாடுதுறையில் மாவட்டத்தில் உள்ள (சீர்காழி வைதீஸ்வரன் கோயில் மற்றும் மயிலாடுதுறை) கோவில்களை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது!!
* பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம்:
சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி உள்பட இருவர் மீதான குற்ற வழக்கை டிச. 20 ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
* தமிழகத்தில் ஒரேநாளில் 1,957 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
2,068 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
20,385 பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
* சிபிஎஸ்இ பிளஸ் 2 துணைத் தேர்வு ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
12-ஆம் வகுப்பு மதிப்பெண் முறையில் திருப்தி இல்லாத மாணவர்கள் துணைத்தேர்வை எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் ஆகஸ்ட் 4 தேதி தமிழக அமைச்சரவைக் கூடுகிறது.
தமிழக நிதிநிலை அறிக்கை தொடர்பாக அமைச்சரவையுடன் ஆலோசிக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
No comments:
Post a Comment