அக்னிப்புரட்சி இன்றைய (04.08.2021) முக்கிய செய்திகள்.
💥 சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.102.49 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.94.39 க்கும் விற்பனை.
* ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா அசத்தல் - இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
டோக்கியோ ஒலிம்பிக்கின் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே அபாரமாக செயல்பட்டார்.
இவர் தனது முதல் வாய்ப்பில் 86.65 மீட்டர் தூரம் எறிந்து அசத்தினார்.
இதன்மூலம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெற்றார்.
ஆகஸ்ட் 7-ம் தேதி ஈட்டி எறிதலுக்கான இறுதிச்சுற்று போட்டி நடைபெற உள்ளது.
* சிந்து சமவெளி மக்கள் பேசியது மூதாதை திராவிட மொழியே! - நேச்சர் ஆய்விதழில் அறிஞர் பஹதா அன்சுமாலி முகோபத்யாயின் விரிவான கட்டுரை
https://www.nature.com/articles/s41599-021-00868-w
💥 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் : மல்யுத்த போட்டியின் 57 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கொலம்பியா வீரரை வீழ்த்தி இந்திய வீரர் ரவிக்குமார் காலிறுதிக்கு தகுதி.
டோக்கியோ ஒலிம்பிக்: பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லாவ்லினா வெண்கல பதக்கத்தை வென்றார்.
23 வயதான லாவ்லினா அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.
* தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய விரைவில் புதிய சட்டம் - தமிழக அரசு அறிவிப்பு.
அதிமுக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு உயர்நீதிமன்றம் நேற்று தடை விதித்த நிலையில் அறிவிப்பு.
உரிய விதிமுறைகள், தகுந்த காரணங்களை குறிப்பிட்டு புதிய சட்டத்தை கொண்டுவர முதலமைச்சர் உத்தரவு.
உரிய விதிமுறைகளை உருவாக்கி புதிய சட்டத்தை கொண்டுவர தடையில்லை என உயர்நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது.
* தமிழ்நாடு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.
நமது நாட்டு மீனவர்களின் உயிரையும் உடமையையும் காக்க வேண்டியது நமது கடமை என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
* சட்டப்பேரவையில் வரும் 13ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு.
* திரிணாமுல் கட்சி எம்.பிக்கள் சஸ்பெண்ட்.
மாநிலங்களவை தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு தொடர் அமளியில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்.பிக்கள் சஸ்பெண்ட்.
* அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொழில் படிப்புகளில் 7.5 % இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு.
புதிய மசோதாவை நடப்பு பட்ஜெட் கூட்டத்தில் தாக்கல் செய்யவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு.
* தமிழக அரசின் நிதி நிலை குறித்த வெள்ளையறிக்கையை வரும் 9-ஆம் தேதி வெளியிடுகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் நிதி நிலை குறித்த 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வரும் 9ம் தேதி வெளியிடுகிறார்.
* மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனை.
சென்னையில் நடந்த மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு தூக்கு தண்டனை, 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேரில் ஐயப்பன் என்பவர் அரசு தரப்பு சாட்சியமாக மாறிய நிலையில், மற்ற 9 பேரும் குற்றவாளிகள் என்று இன்று தீர்ப்பளித்துள்ளது சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம்.
பொன்னுசாமி, வழக்கறிஞர் பாசில், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் போரிஸ், முருகன், செல்வபிரகாஷ் ஆகிய 7 பேருக்கு தூக்கு தண்டனையும், மேரி புஷ்பம்,
கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி கூலிப்படையால் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து சுப்பையாவின் உறவினர் ஏ.ஏ.மோகன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அபிராமபுரம் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் மூலம் 10 பேரை கைது செய்தனர்.
💥 இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியானது:
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்த போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதியாகி உள்ளது.
ஆடவர் 57 கிலோ எடைப்பிரிவு போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்.
அரையிறுதியில் கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி ரவிக்குமார் தாஹியா வெற்றி.
இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால் தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் கிடைப்பது உறுதி.
* இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி; டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
* டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் ஹாக்கி அரையிறுதியில் அர்ஜெண்டினாவிடம் இந்தியா போராடி தோல்வி.
2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது அர்ஜெண்டினா.
3வது இடத்திற்காக போட்டியில் இந்தியா விளையாடும்.
* நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 வரை அவகாசம் நீட்டிப்பு:
செப்டம்பர் 12ல் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 6 கடைசி தேதி என இருந்த நிலையில் ஆகஸ்ட் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள ஆகஸ்ட் 11-14 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
* நடப்பு கல்வி ஆண்டுக்கான GATE தேர்வு வரும் 2022 பிப்ரவரி 5, 6, 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் செப்டம்பர் 24 வரை விண்ணப்பிக்கலாம்.
* PUBG இந்தியா, FREE FIRE கேம்களுக்கு தடை கோரி நீதிபதி கடிதம்:
PUBG இந்தியா, FREEFIRE போன்ற ஆன்லைன் விளையாட்டு செயலிகளை தடை செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு டெல்லி நீதிபதி நரேஷ்குமார் கடிதம்.
💥 தமிழகத்தில் இன்று 1,949 பேர் கொரோனாவால் பாதிப்பு; 2,011 பேர் குணமடைந்தனர், இன்று 38 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.
* செப்.1 முதல் அங்கன்வாடிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு:
சத்துணவு மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக செப்டம்பர் 1-ம் தேதி முதல் அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இரண்டு வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சத்துணவு மையங்களில் சமைக்கப்பட்ட மதிய உணவை, அவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்குவது என முடிவெடுத்துள்ளதாகவும், இது 15 நாட்களுக்குள் செயல்படுத்தப்பட உள்ளது.
மற்ற மாணவர்களைப் பொறுத்தவரை, செப்டம்பர் 1-ம் தேதி முதல் அந்தந்தப் பகுதியில் இருக்கக்கூடிய அங்கன்வாடி மையங்களின் மூலம் உணவு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
* திருப்பூர் மாவட்டத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்; அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் அரசு மதுபான கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.
💥 நாளை முதல்வர் முக ஸ்டாலினால் துவக்கப்பட உள்ள "மக்களை தேடி மருத்துவம்" எனும் திட்டத்திற்கு தமிழக அரசு அரசாணை வெளியீடு.
* 183 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து:
இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் 183 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து அணி.
பும்ரா - 4, ஷமி - 3, தாக்கூர் - 2, சிராஜ் - 1 விக்கெட்கள் எடுத்து அபாரம்.
No comments:
Post a Comment