அக்னிப்புரட்சி இன்றைய (06.08.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (06.08.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (06.08.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.102.49 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.94.39 க்கும் விற்பனை.

* தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை.

கொரோனா தொற்று அதிகரிப்பதால், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் ஆலோசிக்க வாய்ப்பு.
மத்திய சிறைகளில் போலீசார் சோதனை:

* புழல், கடலூர் மற்றும் பாளையங்கோட்டை சிறையில் கைதிகள் செல்போன், கஞ்சா, ஆயுதங்கள் வைத்துள்ளனரா என போலீசார் திடீர் சோதனை.

* சென்னை தண்டையார்பேட்டையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி.

ஓ.பி.எஸ் மற்றும் இணை இருகிணைப்பாளர் இ.பி.எஸ்க்கு முதல்வர் மு.க ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

* டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்திய மகளிர் அணி போராடி தோல்வி.

ஒலிம்பிக் ஹாக்கியில் வெண்கலத்தை கைப்பற்றுவதற்கான இந்திய மகளிர் அணியின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வென்றது பிரிட்டன் ஹாக்கி மகளிர்  அணி.

* காலிறுதியில் பஜ்ரங் பூனியா:
மல்யுத்தம் 65 கிலோ எடைப் பிரிவில் கிர்கிஸ்தான் வீரரைத் தோற்கடித்தார்.

ஆட்டம் 3-3 என முடிந்தாலும், High scoring point எடுத்ததன் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

* கொரோனா வெருவித் தொற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்பு பணிக்குழு அமைத்து தமிழ்நாடு அரசு ஆணை

மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 13 பேர் கொண்ட பணிக்குழு அமைத்து அரசாணை வெளியீடு

* அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மறைவு தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை

* அரையிறுதியில் பஜ்ரங் பூனியா:
காலிறுதிப் போட்டியில் இரான் வீரரை PIN செய்து அபார வெற்றி பெற்றார்.

அட்டாக் செய்யவில்லையென்று இரண்டு முறை பெனால்டி பெற்ற பஜ்ரங், அட்டாக் செய்யத் தொடங்கிய 30 விநாடிகளில் போட்டியையே முடித்துவிட்டார்.

* ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் வீராங்கனைகள் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தினர் - பிரதமர் மோடி.

பதக்கத்தை இழந்தாலும் மகளிர் அணியின் திறமையான ஆட்டம், பலரையும் ஊக்குவிக்கும் - பிரதமர் மோடி.

* 2021-22ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாகவும், 2022 -23 ஆம் நிதியாண்டில் 17.2 சதவீதமாக இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

2021-22ஆம் நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி கணிப்பில் எவ்விதமான மாற்றமும் இல்லை - ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ்.

ஜூலை மாதத்தில் பல வளர்ச்சி காரணிகள் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

நாணய கொள்கை கூட்டத்தின் உறுப்பினர்கள்  5:1 வாக்குகள் அடிப்படையில் ஒப்புதல்.

நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் ரெப்போ விகிதம் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாகவும், எம்எஸ்எப் விகிதம் 4.25 சதவீதமாகவும், வங்கி விகிதம் 4.25 சதவீத வட்டி விகிதம்  அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தொடரும்.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் ரெப்போ விகிதத்தை மாற்றவில்லை- ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ்.

* கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்பு பணிக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 13 பேர் கொண்ட பணிக்குழு அமைத்து அரசாணை வெளியீடு.

* தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்பு.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 9-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் ஆலோசனை.

* திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் விழுப்புரம் மாவட்ட மாணவர்களிடம் முதுகலை படிப்பில் சேர விண்ணப்பங்களை வரவேற்ற அறிவிப்பு ரத்து.

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

பல்கலைக்கழக எல்லை வரையறையை மீறி அறிவிப்பு வெளியிட்ட பல்கலை. பதிவாளரின் அறிவிப்பு ரத்து.

* கேல் ரத்னா விருது பெயர் மாற்றம்:
விளையாட்டுத்துறைக்கான வழங்கப்படும் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, ஹாக்கி ஜாம்பவான் தயான்சந்த் கேல் ரத்னா என பெயர் மாற்றம்.

* பேராசிரியர்கள் கல்லூரிக்கு வர உத்தரவு:

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் வரும் 9ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் – உயர்கல்வித்துறை.

* அனைத்து பேராசிரியர்கள், பணியாளர்களும் வரும் 9ஆம் தேதி முதல் கல்லூரிக்கு வர உத்தரவு.

அனைத்து வேலை நாட்களிலும் கட்டாயம் வருகை தர உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவு.

* இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தார் பஜ்ரங் பூனியா:

மல்யுத்தம் 65 கிலோ பிரிவு அரையிறுதியில் அஜெர்பெய்ஜான் வீரர் அலியேவுக்கு எதிராக 12-5 என தோல்வியடைந்தார்.

நாளை வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் விளையாடுவார்.

* முதுநிலை நீட் தேர்வுக்கு (NEET - PG) விண்ணப்பித்தவர்கள் OBC & EWS இட ஒதுக்கீடு கோர விரும்பினால் 16ம் தேதி முதல் 20ம் தேதிக்குள் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம்  - மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு.

* டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: 4 x 400 ஓட்டத்தில் இந்திய அணி 4ம் இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்தது.

எனினும், 3:00:25 என்ற நேரத்தில் இலக்கை அடைந்து புதிய ஆசிய சாதனையை படைத்துள்ளது.

* தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு- தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடை- தமிழ்நாடு அரசு உத்தரவு.

* செப்.1 முதல் 9, 10, 11, 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க உத்தேசம்.

மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

அனைத்து தரப்பு கருத்துக்களைப் பெற்று ஆய்ந்து, செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9,10,11,12 ஆம் வகுப்புகள் 50% மாணவர்களுடன் தொடங்க உத்தேசம்-தமிழக முதலமைச்சர்.

பள்ளிகள் உரிய கொரோனா கட்டுபாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழக அரசு உத்தரவு.

இறைச்சி மற்றும் மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு திறந்தவெளியில் தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்வதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்- தமிழ்நாடு அரசு.

* விளையாட்டுத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இனி மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக நடுவண் அரசு அறிவிப்பு.

* தமிழகத்தில் உள்ள அனைத்து வகை கல்லூரிகளிலும் வரும் 9ம் தேதி முதல் இணைய வழி வகுப்புகள் தொடங்கும்.
: உயர்கல்வித் துறை ஆணை

* செப்டெம்பர் 11-ம் தேதி நடைபெற உள்ள NEET - PG தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் 27% OBC or 10% EWS இட ஒதுக்கீட்டில் உரிமை கோர விரும்பினால் வரும் 16 முதல் 20-ம் தேதிக்குள்ளாக தங்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்துகொள்ளலாம். - மருத்துவக் கல்வி தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு

* போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை  முடித்து வைத்தது  சென்னை உயர் நீதிமன்றம்

அரசு தரப்பு ஏதும் எதிர்ப்பு தெரிவிக்காததாலும், பணத்தை திருப்பி தந்து விட்டதாக குற்றம் சுமத்தியவர்கள் கூறியதை அடுத்தும் வழக்கு முடித்து வைப்பு.

💥 செப்டெம்பர் 1ம் தேதி - 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகிறது.

* விழுப்புரம் Dr. ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழக அதிகார வரம்புக்குட்பட்ட பகுதியில் கல்வி மையத்தின் மூலம் முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்று வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு விலக்கம்.

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து 1,908 பேர் குணமடைந்துள்ளனர்.

30 பேர் உயிரிழப்பு; தற்போது 20,185 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

* முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 278 ரன்களுக்கு ஆல் அவுட்.

95 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை இங்கிலாந்து அணி தொடங்கியது.

* 10, 11ஆம் வகுப்புத் துணைத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு.

11ஆம் வகுப்பு துணைத் தேர்வு செப்டம்பர் 15இல் தொடங்கி 30 வரை நடைபெறும்.

இந்தத்துணைத் தேர்வுகளுக்கு ஆகஸ்டு 7 முதல் 11 வரை சேவை மையங்கள் வாயிலாக
விண்ணப்பிக்கலாம்.

* லஞ்ச ஒழிப்புத்துறையால் பரிந்துரை செய்யப்பட்ட 7 சார் பதிவாளர்,15 உதவியாளர், 2 இளநிலை உதவியாளர், 6 அலுவலக உதவியாளர் பணியிட மாற்றம் செய்து செயலாளர் ஜோதி நிர்மலாசாமி ஆணை.

💥 நாடு முழுவதும் செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 50 கோடியை எட்டியது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages