அக்னிப்புரட்சி இன்றைய (08.08.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.102.49 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.94.39 க்கும் விற்பனை.
* தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி (87) காலமானார்.
திண்டிவனம் ராமமூர்த்தியின் உடல் சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைப்பு.
* ஆகஸ்ட் 10ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது சபாநாயகர் தலைமையிலான தமிழ்நாடு சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்.
பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாள் நடத்துவது என்று 10ம் தேதி முடிவு செய்யப்பட உள்ளது.
* சேலம் மாவட்டத்தில் நாளை முதல் அனைத்து கடைகளும் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி -ஆட்சியர்.
வணிக வளாகங்கள், ஜவுளி நகைக்கடைகள், பல்பொருள் அங்காடி, உள்ளிட்டவை தினமும் மாலை 6 வரையே திறக்க அனுமதி.
சேலத்தில் செயல்படும் 2 வாரசந்தைகளுக்கும் மறு உத்தரவு வரும்வரை தடை விதிப்பு.
* உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக விவாதிக்க திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் நடைபெறுகிறது.
* ஆகஸ்ட் 13ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் -அரசு தலைமை கொறடா கோவி.செழியன் அறிவிப்பு.
* கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து போடுவது பாதுகாப்பானது; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது-ஐசிஎம்ஆர்.
கொரோனா வைரசுக்கு எதிராக நம் நாட்டில் 'கோவாக்சின் கோவிஷீல்டு' என இரண்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஒவ்வொருவருக்கும் ஒரே நிறுவனம் தயாரித்த இரண்டு 'டோஸ்' தடுப்பூசி வழங்கப் படுகிறது.
கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை கலந்து போடுவது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் கிடைத்த முடிவுகள் தொடர்பாக ஐசிஎம்ஆர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசியை கலந்து அளிப்பது தொடர்பான ஆய்வுகளில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளது.
அப்படி போடுவது பாதுகாப்பானது மட்டும் அல்லாமல், சிறந்து நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது என தெரிவித்து உள்ளது.
* 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:
நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.
* தமிழக அரசின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை நாளை ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது வெளியிடுகிறார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
* டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகள் நிறைவு பெற்றன.
ஜப்பானில் ஜூலை 23-ம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன.
206 நாடுகளில் இருந்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றனர்.
39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் என 113 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம்.
38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம் என 88 பதக்கங்களுடன் சீனா 2வது இடம்.
27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என 58 பதக்கங்களுடன் போட்டியை நடத்தும் ஜப்பான் 3வது இடம்.
ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் இந்தியா 48வது இடம் பெற்றது.
*:ஓரிரு நொடிகளில் கோரோனா தடுப்பூசி சான்றிதழ்:
+91 9013151515 எண்ணை கைபேசியில் பதிவு செய்யவும்.
‘covid certificate' என டைப் செய்து OTP அனுப்பி தடுப்பூசி செலுத்திய சான்றிதழை பதிவிறக்கம் செய்துக்கொள்ளவும்.
* தமிழகத்தில் புதிதாக 1,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குணமடைந்து திரும்பியவர்கள் 1,807 பேர். சிகிச்சை பலனின்றி 28 பேர் உயிரிழப்பு.
* சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடம் திட்டத்தில் தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 4 டெல்டா மாவட்டங்களில் ₹1075 கோடி செலவில் 112 கிமீ நீளத்திற்கு சாலைகள் சீரமைப்பு பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.
* சென்னையில் தி நகர், புரசைவாக்கம், உட்பட 9 இடங்களில் நாளை அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்கள் திறக்கப்படுகிறது - சென்னை மாநகராட்சி தகவல்.
* இங்கிலாந்து - இந்தியா முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது;
மழையால் கடைசி நாள் ஆட்டம் ரத்து. இங்கிலாந்து-இந்தியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிந்தது.
2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் ஆட்டம் இந்தியா - இங்கிலாந்து ட்ராவில் முடிந்ததால்.
இரு அணிகளுக்கும் தலா 4 புள்ளிகள் வழங்கப்படும்.
* நாளை பாஜகவில் இணைகிறார்?
டெல்லியில் முகாமிட்டுள்ள முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் நாளை இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment