அக்னிப்புரட்சி இன்றைய (09.08.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.102.49 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.94.39 க்கும் விற்பனை.
* நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் (கடலூர்) திலீபன் உடல் நலக்குறைவால் காலமானார்
* அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் ஒய்வுபெற்ற நீதிபதி கலையரசன்.
* பட்ஜெட் தாக்கல் செய்யும்போது செலவு கணக்கு தாக்கல் செய்வது வழக்கமான நடைமுறைதான்.
அதிமுக ஆட்சியில் நிர்வாக சீர்கேடு நடந்துள்ளது என்பது தவறான கருத்து- அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு எந்த பெரிய திட்டத்தையும் இதுவரை நிறைவேற்றவில்லை.
சட்டமன்றத்தையே 100 நாட்கள் கழித்துதான் கூட்டுகின்றனர்.
அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்ட கடன்தொகை வளர்ச்சித் திட்டங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது.
ராஜேந்திரபாலாஜி குறித்து திட்டமிட்டு அவதூறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன; அவர் அதிமுகவில்தான் உள்ளார், பாஜகவில் இணைய மாட்டார்-எடப்பாடி பழனிசாமி.
* பாலியல் வழக்கில் ராஜேஷ்தாஸூக்கு ஜாமின்:
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு ஜாமின் வழங்கி விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு.
* தமிழக நிதிநிலை: வெள்ளை அறிக்கை வெளியீடு.
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டார் தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
* 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது.
கடந்த 3 மாதங்களாக தமிழ்நாடு அரசு செயல்படுகிற பாங்கை பார்க்கிற போது , தமிழ்நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
வெள்ளை அறிக்கை வெளியிட்ட பிறகு அதிமுக வினர், தங்களது ஆட்சியின் சாதனைகள் என்று கூற முடியாத அளவிற்கு கடந்த 10 ஆண்டுகால ஆட்சியின் அவலங்களை தோலுரித்துக் காட்டப்பட்டிருக்கிறது- கே.எஸ்.அழகிரி, காங்.,தலைவர்
* தமிழகத்தில் புதிதாக 1,929 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குணமடைந்து திரும்பியவர்கள் 1,886 பேர். சிகிச்சை பலனின்றி 23 பேர் உயிரிழப்பு.
* மேகதாது அணை கட்ட விரைவில் அனுமதி கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது
விரிவான அறிக்கையை ஏற்கனவே அரசுக்கு வழங்கியுள்ளோம்.
:கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை
* வரிச்சட்டங்கள் (திருத்தம்) முன்வரைவு 2021 மாநிலங்களவையில் நிறைவேறாமல் திருப்பி அனுப்பப்பட்டது
💥 மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு
சட்டத்திற்கு புறம்பாக பணப் பரிமாற்றம் செய்ததாக வழக்குப்பதிவு செய்து வரும் 11-ம் தேதி நேரில் வந்து விளக்கம் அளிக்க ஆணை
No comments:
Post a Comment