அக்னிப்புரட்சி இன்றைய (13.08.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.102.49 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.94.39 க்கும் விற்பனை.
* இங்கிலாந்தின் பிளைமவுத் நகரில் நடந்த பயங்கர துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 5 பேர் உயிரிழப்பு.
குண்டு பாய்ந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை போலீஸ் சுட்டுக்கொன்றது.
* உரிமை கோரிய நித்யானந்தா - மதுரை ஆதீன அறைக்கு சீல்வைப்பு:
மதுரை ஆதீனம் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், ஆதீனத்தில் ஆவணங்கள், நகைகள் இருக்கும் ரகசிய அறைக்கு சீல் வைப்பு.
மதுரை ஆதீனம் ஏப்ரல் 27, 2012 அன்று என்னை 293வது ஆதீனமாக அறிவித்து முடிசூட்டியதால் எல்லாப் பொறுப்புகளையும், அதிகாரங்களையும் பெற்றுள்ளேன்- நித்யானந்தா அறிக்கையால் சர்ச்சை.
* தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது:
காகிதமில்லா நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், வழக்கமான முறையில் இல்லாமல் கையடக்க கணினியுடன் சட்டமன்றத்திற்கு வந்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
* அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு:
பட்ஜெட் தாக்கல் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அதிமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு.
அரசியல் காழ்புணர்சியோடு முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சட்ட ரீதியாக வழக்குகளை அதிமுக எதிர்கொள்ளும். -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
* பெட்ரோல் மீதான தமிழ்நாடு மாநில அரசின் வரி ரூ 3 குறைப்பு - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு.
தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - நிதிதுறை செயலாளர் பேட்டி
* கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை அடமானம் வைத்தவர்களின் விவரங்களை கோரியது கூட்டுறவுத்துறை.
பயனாளிகளின் கேஓய்சி மற்றும் குடும்ப அட்டை விவரங்களை தயாராக வைத்திருக்க கூட்டுறவு வங்கிகளுக்கு உத்தரவு.
* புதுச்சேரி: தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 26 ம் தேதி துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.
26 ஆம் தேதி மாலை துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும்; முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
செப்டம்பர் 9ம் தேதி புதிய சட்டப்பேரவை வளாகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழ நடைபெறவுள்ளது.
வரும் 23ம் தேதி டெல்லி சென்று பிரதமர், உள்துறை மற்றும் நிதித்துறை அமைச்சர்களை முதல்வர் ரங்கசாமி சந்திக்க உள்ளார்- சட்டப்பேரவை சபாநாயகர் செல்வம்.
* ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை.
2022 ஜூலை 1ம் தேதி முதல் தடை உத்தரவு அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவிப்பு.
ஒரு முறை பயன்படுத்தி தூக்கியெறியக் கூடிய பிளாஸ்டிக் பைகள், கோப்பைகள், தட்டுகளுக்கு மத்திய அரசு தடை.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டுக்கு ஜூலை 1, 2022 முதல் தடை.
* தொலைத்துர கல்வி மூலம் சட்டப்படிப்புகளை அண்ணாமலை பல்கலைகழகம் வழங்க முடியாது, மாணவர் சேர்க்கையும் நடத்த கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
* ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு வரும் செப்டெம்பர் 18-ம் தேதி நடைபெறும்
கொரோனா வெருவிப் பரவல் காரணமாக தேதி குறிப்பிடாமல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் அறிவிப்பு.
: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் உமா மகேஷ்வரி அறிவிப்பு.
* பெயருக்காக விலை குறைப்பு: அதிமுக சாடல்
“Gentlemanஆக இருந்தால் மக்களை ஏமாற்ற கூடாது, பேருக்காக பெட்ரோல் வரி மட்டும் குறைக்கப்பட்டுள்ளது; தமிழக பட்ஜெட் மக்களுக்கு பெருத்த ஏமாற்றம், யானை பசிக்கு சோளப்பொறி போல உள்ளது”
: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
💥 குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் பரப்புரையில் அறிவித்திருந்த நிலையில் தற்போது அது மிகவும் ஏழ்மையான குடும்பத் தலைவிகளுக்கானது மட்டுமே என தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை குறைப்பு வரவேற்கப்படவேண்டிய ஒன்று. ஆனால் டீசல் விலையை குறைத்தால்தான் வாடகை குறையும், அதன் மூலம் பொருட்களின் சந்தை விலை குறையும். அரசு உடனே டீசல் விலையை குறைக்க வேண்டும்
: தன்ராஜ், மாநில சரக்குந்து உரிமையாளர்கள் சம்மேளனம்
* முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பு தொடர்பாக 90% விசாரணை முடிந்துவிட்டது சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆறுமுகச்சாமி ஆணையம் தரப்பில் பதில்
* சென்னையில் ஒரே குடியிருப்பில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
* மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவை புரிந்த சிறந்த மாவட்ட ஆட்சித்தலைவர்களாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா மற்றும், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி தேர்வு
* கொரோனா தொற்றால் உயிரிழந்த 32 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹25 லட்சம் நிதி வழங்குவதற்கான அரசாணை வெளியீடு
* தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,933 பேருக்கு கொரோனா உறுதி; 1,887 பேர் குணமடைந்த நிலையில் 34 பேர் சிகிச்சை பலனின்றி மரணம்.
* இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 364 ரன்களில் இந்தியா ஆட்டமிழந்தது.
லார்ட்ஸ் அரங்கில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி 10 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்தது.
* 1 முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் குறைப்பு:
கொரோனா தொற்று காரணமாக 1 முதல் 12 ம் வகுப்புவரையிலான பள்ளி பாடத்திட்டத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை குறைத்துள்ளது.
இதனையடுத்து 1 முதல் 12 ம் வகுப்புவரையிலான பள்ளி பாடத்திட்டம் 50 சதவீதம் வரையில் குறைக்கப்பட்டுள்ளது.
1,2 ம் வகுப்புகளுக்கு 50 சதவீதம்
3,4 ம் வகுப்புகளுக்கு 49 சதவீதம்
5 ம் வகுப்பிற்கு 48 சதவீதம்
6 ம் வகுப்பிற்கு 47 சதவீதம்
7,8 ம் வகுப்புகளுக்கு 46 சதவீதம்
9 ம் வகுப்பிற்கு 38 சதவீதம்
10 ம் வகுப்பிற்கு 39 சதவீதம்
11,12 ம் வகுப்புகளுக்கு 35சதவீதம் வரையிலும் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டித் தேர்வில் பங்கேற்க விரும்புவர்கள் முழு பாடத்திட்டத்தையும் படித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
* பெட்ரோல் மீதான வரியில் ₹3 குறைத்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
வரி குறைப்பு இன்று நள்ளிரவு முதல் செயல்பாட்டுக்கு வருகிறது
* மதுரை ஆதீனம் உடல்நலக்குறைவால் காலமானார்.
உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் (77) உயிரிழந்தார்.
No comments:
Post a Comment