அக்னிப்புரட்சி இன்றைய (16.08.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (16.08.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (16.08.2021) முக்கிய செய்திகள்.

💥 சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 99.47 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.94.39 க்கும் விற்பனை.

💥 காபூல் விமான நிலையத்திற்குள் புகுந்த தாலிபான்  படைகள்!

தற்போது பரந்த அளவில்  அமெரிக்க வான் படைகள் தனது நாட்டு மக்களை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றி வருகிறது.

விமான நிலையத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூடு காரணமாக நிலைய ஊழியர்கள் அச்சமுற்று வெளியே ஓடி விட்டனர். தற்போது காபூல் விமான நிலையம் மூடப்பட்டது என பொருள் கொள்ளலாம்.

தாலிபான் அமைக்கப்போகும் ஆட்சிக்கு அங்கீகாரம் செய்யக்கூடாது
- பிரிட்டன் (Britain) அரசு

💥 குழப்பங்கள் மற்றும் குற்ற செயல்களை தடுக்கும் நோக்கில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள காபூல் நகருக்குள் தாலிபான் படைகள் நுழைய உள்ளது. யாரும் பதற்றம் அடைய வேண்டாம் என தாலிபான் அமைப்பு அறிக்கை வெளியீடு

💥 ஆப்கன் தலைநகர்  காபூல் நகருக்குள் நுழைய, தனது படைகளுக்கு தாலிபான் அமைப்பு ஆணையிட்டுள்ளது.

* புதுச்சேரியில் உணவகங்கள் இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் 10 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது

💥 ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கைப்பற்றியது தலிபான்கள்.

காபூலை கைப்பற்றியதை அடுத்து அதன் அதிபர் அஷ்ரப் கானி பதவியை ராஜினாமா செய்தார்.

💥 அஷ்ரப் கானி தஜிகிஸ்தானுக்கு தப்பியோடியதாக தகவல்.

💥 ஏர் இந்தியா விமானம் மூலம் 120-க்கும் மேற்பட்ட இந்தியர்களை அழைத்து சென்றது.

💥 இன்னும் ஓரிரு நாளில் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை தலிபான்கள் கையில் எடுப்பர்.

ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய அமீரகம் என பிரகடனப்படுத்துவோம்- தலிபான்கள்.

💥 ஹைதி நிலநடுக்கம் உயிரிழப்பு எண்ணிக்கை 1297 ஆக அதிகரிப்பு.

* B.F.Sc, B.Tech, BBA, B.Voc படிப்புகளில் சேர வரும் 19-ம் தேதி முதல் tnjfu.ac.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் அறிவிப்பு.

💥 அதிபர் மாளிகையை கைப்பற்றிய தாலிபான் இயக்கத்தினர். நேரலை வீடியோ வெளியிட்டு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.

💥 ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்ததாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.

20 ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

காபூலை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து ஆப்கன் எம்பிக்கள் இந்தியாவில் தஞ்சம்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி அதிபராக இருந்த அஷ்ரப் கானியை வெளியேற்றினர்.

ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் கட்டுக்குள் கொண்டு வரும்போதே இந்தியா வந்த எம்பிக்கள்.

ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய அரசியல்வாதிகள் இந்தியாவில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தஞ்சம்.

💥 ரத்தக் களறியை தவிர்க்கவே அதிபர் பதவியிலிருந்து விலகினேன்- ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி.

நாட்டை விட்டு வெளியேறுவது அல்லது தலிபான்கள்வன்முறை என்ற இரு கடினமான தேர்வுகளை கடந்தேன்.

20 ஆண்டுகளாக நாட்டை பாதுகாக்க என் வாழ்நாளையே அர்ப்பணித்தேன்.
மக்கள்தான் முக்கியம் என்பதால் பதவியை ராஜினாமா செய்தேன்.

நாட்டின் செழிப்பு, மரியாதையை காக்க இனி தலிபான்கள்தான் பொறுப்பு.

காபூலை தலிபான்கள் கைப்பற்றியதும் நாட்டை விட்டு வெளியேறினார் -அஷ்ரப்.

நாட்டை விட்டு வெளியேறிய சில மணி நேரத்தில் பேஸ்புக்கில் விளக்கம் அளித்த அஷ்ரப்.

💥 ஆப்கன் விவகாரம் குறித்து விவாதிக்க ஐநா இன்று அவசர ஆலோசனை.

எஸ்டோனியா, நார்வே நாடுகளின் கோரிக்கையை ஏற்று ஐநா இன்று அவசர கூட்டம்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இன்று அவசர ஆலோசனை நடைபெறுகிறது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் உடனடியாக தாக்குதலை நிறுத்துமாறு ஐநா வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

* தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது; பட்ஜெட் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெறும் என்று அறிவிப்பு.

* ஸ்டெர்லைட் ஆலையில் தொடர்ந்து ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி அளிக்க வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்கு.

வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு,

சிப்காட் மற்றும் புதியம்புதூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு.

💥 விமானத்தின் இறகில் ஒளிந்து கொண்டு நாட்டை விட்டு தப்பி செல்ல முயன்ற ஆப்கானியர்கள் வானில் இருந்து கீழே விழுவதாக காட்டப்படும் வீடியோ  வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

💥 மலேசிய அரசின் முதன்மை அமைச்சர் முகைதீன் யாசின் பதவி விலகினார்

கொரோனா வெருவித் தொற்றை கட்டுப்படுத்த முடியாமை, பொருளாதார நெருக்கடி குறித்து கூட்டணி கட்சிகள் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை அடுத்து பதவி விலகினார்.

தாலிபான்களுடன் நட்புறவை பேண நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாக சீனா தகவல்

💥 ஆப்கன் அதிபர் அசுரப் காணி ஓமன் நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக சீன அரசு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

* திமுகவிடம் பணம் வாங்கி "சார்பட்டா" பரம்பரை எடுக்கப்பட்டுள்ளது

திமுகவுக்கும் குத்துச்சண்டைக்கும் சம்பந்தம் இல்லை.

சார்பட்டா பரம்பரை திமுக பரப்புரை படம். அதில் உள்நோக்கோடு உண்மைக்கு மாறான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

💥 காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு மற்றும் 13 பேர் படுகாயம்.

💥 இந்தியர்களுடன் ஏர் இந்தியா விமானம் காபூலில் இருந்து கிளம்ப தவித்து வருகிறது

நாட்டை விட்டு பெரும்பாலானோர் வெளியேற முயன்று வருவதால் காபூல் விமான நிலையம் குழப்பத்தின் உச்ச களமாக உள்ளது.

இன்று காலை 8.30 மணிக்கு இந்தியர்களை ஏற்றி செல்லும் பொருட்டு கிளம்ப ஆயத்தமாய் இருந்த ஏர் இந்தியா விமானத்தின் பயணம் 12.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஆப்கன் வான்வழி போக்குவரத்து தற்போது மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதால்  விமானத்தை இயக்க முடியாமல் தவித்து வருகிறது ஏர் இந்தியா.

* முன்னாள் அமைச்சர் SP வேலுமணியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

* மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் பட்ஜெட் அறிக்கையை தயார் செய்யும் போது குட்டி பூனையை தாய் பூனையை கவ்வுவது போல இருக்க வேண்டும், பூனை எலியை கவ்வுவது போல இருக்க கூடாது
- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

💥 தாலிபான்களின் துப்பாக்கிச்சூட்டிற்கு நடுவில் காபூல் விமான நிலையத்தில் மக்கள் குவிந்து வருகின்றனர்.

குவிந்து வரும் மக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் விமான  நிலையத்தில் அமெரிக்க ராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு

சிறப்பு குடியேற்ற விசா திட்டத்தின் கீழ் 30,000 ஆப்கானியர்களை அமெரிக்காவுக்கு குடியேற்ற அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

ஆப்கானில் உள்ள அமெரிக்கர்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்காமல், முடிந்த வரை பலரை விமானத்தில் ஏற்ற அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்.

சிறப்பு விசா திட்டத்தின் கீழ் தகுதி பெறாதவர்களை, P-2 & P-1 இசைவுகளின் (Visa) கீழ் கூடுதல் ஆப்கானியர்களை வெளியேற்றவும் அமெரிக்க அரசு திட்டமிட்டு வருகிறது

💥 ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வீடு வீடாக சோதனை நடத்தும் தலிபான்கள்.

அரசியல் தலைவர்கள், போர் வீரர்களின் குடும்பங்கள், பத்திரிகையாளர்களை தேடும் தலிபான்கள்.

காபூலில் உள்ள அனைத்து வீடுகளிலும் சோதனை நடத்தி வரும் தலிபான் அமைப்பினர்.

விமான சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்.

மக்கள் வீடுகளுக்குள் முடங்கிய நிலையில், சோதனையை தொடங்கிய தலிபான் அமைப்பு.

* முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கடந்த ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை திரும்பப்பெறுவது தொடர்பாக உயர்நீதிமன்ற ஒப்புதலை பெற சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தல்.

மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்கை வாபஸ் பெற உயர்நீதிமன்றத்தின் ஒப்புதல் அவசியம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது - சிறப்பு நீதிமன்றம்.

அவதூறு வழக்கை வாபஸ் பெற முடிவெடுத்திருப்பதாக சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தகவல்.

* முன்னாள் முதல்வர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தொடர்ந்த அவதூறு வழக்குகள் தொடர்பான விசாரணை செப். 17-ம் தேதிக்கு தள்ளிவைப்பு.

💥 அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு "டோக்கியோ பாராலிம்பிக்" போட்டிகளில் பார்வையாளர்களுக்கு தடை விதிக்க உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தகவல்

"அமெரிக்காவின் தோல்வி", ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பாக அமைய வேண்டும்

: தாலிபான் அமைப்புக்கு ஆதரவு அளிக்கும் வகையில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி கருத்து.

இதுவரையில் சீனா, ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் தாலிபானுக்கு ஆதரவாக கருத்துக்கள் வெளியிட்டு உள்ளன.

* தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட 130 அவதூறு வழக்கை திரும்பப்பெறுவதற்கு முடிவெடுத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது

இது தொடர்பாக உயர் நீதிமன்ற ஒப்புதலை பெறும்படி தமிழக அரசிற்கு சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தல்

💥 தாலிபான்கள் அடிமைத்தனத்தின் பிணைப்பை உடைத்துவிட்டனர் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பெருமிதம்

💥 ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் நாட்டை புனரமைத்து, எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்க வேண்டும். ஆப்கானிஸ்தானை அமைதியான, நிலையான, வளமான தெற்காசிய நாடாக நாங்கள் பார்க்க விரும்புகிறோம். : வங்கதேச அரசு அறிக்கை

💥 ஆப்கானில் தலிபான்கள் ஆட்சி: விமானத்தில் தப்பி செல்ல இடம்பிடிக்க அலைமோதும் மக்கள்

ஆப்கானிஸ்தான்: விமானத்தின் இறகில் பயணித்த இருவர் கீழே விழுந்து பலி

💥 மயிலாடுதுறை - நாகப்பட்டினம் மீனவர்கள் இடையே மோதல் பதற்றம்!

அண்மை காலமாக  கடலில் மீன்பிடிப்பதில் ஏற்பட்டுள்ள முரண்கள் தொடர்பாக  மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்களிடம் எழுந்திருக்கும் மோதல் மற்றும் அதன் காரணமாக  நிகழ்ந்தேறிய வன்முறை அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட கடற்பரப்பில்  தடைசெய்யப்பட்ட வலையை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த  "சிறிய படகில்" உள்ள மீனவர்களை இடித்து தள்ளிய விசைப்படகு. இதன் காரணமாக படகு கவிழ்ந்ததில் இரு மீனவர்கள் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர். இது தொடர்பாக பூம்புகார் காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.

💥 தமிழகத்தில் இன்று 1,851 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 28 பேர் இன்று உயிரிழப்பு.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 1,911 பேர் இன்று டிஸ்சார்ஜ்.

தற்போது 20,370 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* சென்னை MGR நகரில் உள்ள அதிமுக உறுப்பினர் வெற்றிவேல் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

💥தற்போது ஒன்றிய நாடுகள் (UN) பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்று வருகிறது

ஆப்கானிஸ்தானின் கோடிக்கணக்கான மக்களின் சார்பில் பேசுகிறேன். கோடிக்கணக்கான பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தங்கள் கல்வி, வேலையை இழக்கவிருக்கின்றனர். : ஆப்கன் அலுவல் நிகராளர் பேச்சு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages