அக்னிப்புரட்சி இன்றைய (17.08.2021) முக்கிய செய்திகள்.
💥 சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 99.47 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.94.39 க்கும் விற்பனை.
💥 தாலிபான்களை எதிர்க்க வேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு இல்லை - அதிபர் ஜோ பைடன்.
ஆப்கான் விவகாரம் குறித்து பைடன் வெள்ளை மாளிகையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது:
அதிகாரிகளுடன் இணைந்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம், ஆப்கானில் நாட்டை கட்டமைக்கும் பணிக்காக அமெரிக்க படைகள் அங்கு செல்லவில்லை, அது எங்கள் வேலையும் இல்லை.
அல்கொய்தாவை முறியடிக்கவும், ஒசாமாவை பிடிக்கவும் இந்த போர் தொடுப்பு நடத்தப்பட்டதாகவும்,எப்போது படைகளை வாபஸ் வாங்கினாலும் இதுதான் நடந்திருக்கும் எனவும் பைடன் கூறியுள்ளார்.
ஆப்கான் அரசும், படையும் தாலிபானை எதிர்க்காத பட்சத்தில் நாம் ஏன் அவர்களை எதிர்க்க வேண்டும்? ஆப்கான் படைகளே தங்கள் நாட்டை காக்காத போது, அப்படி ஒரு போரை நடத்த வேண்டிய அவசியம் அமெரிக்க படைகளுக்கு கிடையாது, போரில் அமெரிக்கர்கள் தங்கள் உயிரை பறி கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
💥 கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 அதிகரிப்பு.
வீடுகளுக்கான சமையல் எரிவாயு மானிய சிலிண்டரின் விலை மேலும் ரூ.25 அதிகரித்து ரூ.875.50க்கு விற்பனையாகிறது.
* அதிமுக பிரமுகர் வீட்டில் சோதனை நிறைவு:
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அதிமுக பிரமுகர் வெற்றிவேல் வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் நடத்திய சோதனை நிறைவு.
நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி காலை 6.30 மணி வரை நடைபெற்றது.
வெற்றிவேல் வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ.11.80 லட்சம் பறிமுதல் என தகவல்.
வெற்றிவேல் முன்னாள் அமைச்சர் வளர்மதியின் உதவியாளராக இருந்துள்ளார்.
💥 ஆப்கானிஸ்தானில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் ஃபேசாபாத்திலிருந்து தென்கிழக்கு 83 கி.மீ. தூரத்தில் நிலநடுக்கம்.
தலிபான்கள் வசமாகியுள்ள ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் மேலும் இன்னலுக்குள்ளாகியுள்ளனர்.
💥 தனியார் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் காலமானார்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
💥 ஆப்கானியர்களுக்கு மின்னணு விசா: ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா வருவோருக்கு மின்னணு விசா முறை அறிமுகம்.
ஆப்கனில் நிலவும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு வெளியுறவு அமைச்சகம் முடிவு.
இந்தியாவினுள் நுழைவோருக்கு விரைவாக விசா வழங்கும் வகையில் நடவடிக்கை.
💥 நாடு திரும்பும் இந்திய தூதர்:
ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகள் உடனடியாக நாடு திரும்புவார்கள் என வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவிப்பு.
ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை.
* மெட்ரோ ரயில் 2 -ஆம் கட்ட பணிகள் காரணமாக சென்னை கோடம்பாக்கம் பவா் ஹவுஸ் சந்திப்பில் இருந்து போரூா் சந்திப்பு வரை போக்குவரத்து மாற்றம்.
கோடம்பாக்கம் - வடபழனி செல்ல வேண்டிய வாகனங்கள் ஆற்காடு சாலையில் பவா் ஹவுஸ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி அம்பேத்கா் சாலை, அசோக்நகா் 2-ஆவது அவென்யூ சாலை, ஜவஹா்லால் நேரு 100 அடி சாலை வழியாக வடபழனி சந்திப்பை அடையலாம்.
போரூா் மாா்க்கத்தில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் ஆற்காடு சாலையில் செல்லலாம்.
* மாவுப்பூச்சி தாக்கும் சேதம் அதிகளவில் உள்ளது.
சேலம் ஈரோடு,கள்ளக்குறிச்சி, விழுப்புரம் பெரம்பலூர் உள்ளிட்ட 10 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுக்காக்க தகுந்த நிதி ஒதுக்கி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்; மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும்- சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி.
2020 ஆம் ஆண்டு இந்த பூச்சி ஊடுருவியது அப்போது தடுத்திருந்தால் இந்தளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்காது.
இதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்- வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பதில்.
* செப்.13 ல் தமிழ்நாட்டில் மாநிலங்களவைத் தேர்தல்:
தமிழகத்தில் காலியாக உள்ள 3 ராஜ்யசபா இடங்களில் ஒரு இடத்துக்கு செப்.13-ல் தேர்தல்.
அதிமுக ராஜ்யசபா எம்.பி. முகமதுஜான் காலமானதால் ஏற்பட்ட இடத்துக்கு செப்.13-ல் தேர்தல்.
தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஆக.24-ல் தொடங்குகிறது; ஆக.31 கடைசிநாள்.
💥 7 பேர் விடுதலை விவகாரத்தில் நீதிமன்றம் எந்த முடிவும் எடுக்க முடியாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
விடுதலை கோரிய நளினியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் இந்த மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு.
29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தன்னை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு.
* வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் விலக்கு கோரி சூர்யா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
வருமானவரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் 3 ஆண்டுகளுக்கு பிறகு முடிவு செய்ததால் தனக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் -சூர்யா.
வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைக்கு சூர்யா முழு ஒத்துழைப்பு தராததால் வட்டி விலக்கு பெற உரிமையில்லை- வருமான வரித்துறை.
ரூ.3 கோடி வரி நிர்ணயம் செய்ததை எதிர்த்து நடிகர் சூர்யா வழக்கு.
💥 தலிபான் தொடர்பான மற்றும் அவர்களுக்கு ஆதரவான கணக்குகளை முடக்குகிறது ஃபேஸ்புக் நிறுவனம்.
அமெரிக்க சட்டப்படி தலிபான்கள் தீவரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால் ஃபேஸ்புக் நடவடிக்கை.
* தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு- சபாநாயகர்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 13ஆம் தேதி முடிவடைகிறது- அலுவல் ஆய்வு குழு கூட்டத்திற்கு பிறகு சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.
ஏற்கனவே செப்.21ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
* சிவபெருமான் புட்டுக்கு மண்சுமந்த உற்சவம்: பொதுமக்கள் பங்கேற்க அனுமதி இல்லை - மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் புட்டுக்கு மண் சுமந்த உற்சவம் நாளை மறுநாள் காலை 8 மணிக்கு கோயில் வளாகத்திற்குள்ளேயே நடைபெறுகிறது.
நான்கு ஆடி வீதிகளில் புறப்பாடு நிகழ்ச்சியுடன் - திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி எழுந்தருள்வார்.
வருகின்ற 19ம் தேதி காலை பொதுமக்கள் தரிசனத்திற்கு கோயில் வளாகத்திற்குள் அனுமதி இல்லை.
19ம் தேதி மட்டும் சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்ய மாலை 4 மணி - இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி.
வழிகாட்டு நெறிமுறைகளின்படி வெள்ளி, சனி, ஞாயிறு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. -மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம்.
* 2019ம் ஆண்டு டெல்டாவில் வரவிருந்த 6 ஹைட்ரோகார்பன் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு திருத்தியமைப்பு.
காவிரி டெல்டா முழுவதும் செயல்படும் ஹைட்ரோகார்பன் திட்டங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய்வதற்காக பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவாக திருத்தி அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.
* சிவசங்கர் பாபா ஜாமீன் மனு தள்ளுபடி: தங்களின் உணர்வுகளுக்கு துரோகம் செய்யும் போலி சாமியார்களிடமிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
சிவசங்கர் பாபுவுக்கு ஜாமீன் வழங்கினால் புகார்தாரர்களுக்கும், விசாரணைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்- சென்னை உயர்நீதிமன்றம்.
மக்களின் மன பிரச்னைகளுக்கு தீர்வளிப்பதாக கூறும் போலி சாமியார்களும், மத குருமார்களும் சமுதாயத்தில் காளான்களை போல் பெருகியுள்ளனர்.
மக்களின் மன பிரச்னைகளை தீர்த்து வைப்பதாக கூறும் போலி சாமியார்கள், குருக்களின் கைகளிலேயே மக்கள் சிக்கிக்கொள்கின்றனர்.
அனைத்து தரப்பட்ட வயதினரும் சாமியார்கள் மீதான குருட்டு நம்பிக்கையால் பாதிக்கப்படுகின்றனர்.” - சென்னை உயர்நீதிமன்றம்.
* 36 மாதங்களுக்குள்ளாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எதிர்பார்க்கிறது.- மதுரைக்கிளை நீதிபதிகள்.
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என அறிவிக்கப்பட்டு பிற மாநிலங்களில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் ஏறத்தாழ முடியும் நிலையில் உள்ளன.
தமிழகத்தில் பணிகள் அவ்வளவு துரிதமாக நடைபெற்றதாக தெரியவில்லை- மதுரைக்கிளை நீதிபதிகள்.
மனுதாரர் ஒவ்வொரு நகர்வுக்கும் நீதிமன்றத்தை நாடியே உத்தரவு பெற்றுள்ளார்.
நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திராமல், எய்ம்ஸ் பணிகளை துரிதப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்- மதுரைக்கிளை நீதிபதிகள்.
💥ஆப்கன் அதிகார குழப்பம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
💥தடுப்பூசியை அதிக அளவில் செலுத்தியதில் தென்காசி மாவட்டம் முதலிடம்
கன்னியாகுமரி, செய்யாறு, திருச்சி, சிவகாசி உள்ளிட்ட மாவட்டங்கள் முதல் 5 இடத்தில் உள்ளது
* இலங்கை அரசு, சீனாவிடமிருந்து 6150 கோடி இலங்கை ரூபாய் மதிப்பு கடன் பெறுவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது
💥 எழுவர் விடுதலை குறித்து தற்போது முடிவு எதுவும் எடுக்க முடியாது: தமிழக அரசு
எழுவர் விடுதலை செய்வது குறித்து, தமிழக சட்டப்பேரவை தீர்மானத்தை, தமிழக ஆளுநர், குடியரசு தலைவருக்கு அனுப்பி உள்ளார். அவர் ஒப்புதலுக்காக காத்திருப்பில் உள்ளது.
இந்த நிலையில் தற்போது எந்த முடிவும் எடுக்க இயலாது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிப்பு
💥 தமிழகத்தில் 4.5% இளம் வயதினர் புகையிலை பயன்படுத்துகின்றனர்
ஆய்வறிக்கை
💥 ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதை வரவேற்றும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தமிழகத்தை சேர்ந்த சிலர் சமூக வலைதளங்களில் தகவல்களை பகிர்ந்து வரும் நிலையில் தமிழகத்தில் தாலிபான்களுக்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டவர்கள் விவரங்களை உளவுத்துறை சேகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
* அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வருமானத்திற்கு அதிகமாக ரூ.76.65 கோடி சொத்துக்களை குவித்துள்ளார் என "அறப்போர் இயக்கம்" லஞ்ச ஒழிப்புத்துறையிடம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது
💥 சென்ற அரசாங்கத்தில் பணியாற்றிய அனைத்து அரசு அலுவலர்களுக்கும் 'பொது மன்னிப்பு' அளிக்கப்பட்டுள்ளதாக தாலிபான் அறிவிப்பு
வழக்கம் போல், அரசு அதிகாரிகள் பணிக்குத் திரும்புமாறு கேட்டுக் கொள்கிறோம். - தாலிபான் அமைப்பு அறிக்கை
* சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு விலையில்லா Wi-Fi சேவையை பெருநகர சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது
💥 தமிழகத்தில் மேலும் 1,804 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 32 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.
இன்று 1,917 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்.
No comments:
Post a Comment