அக்னிப்புரட்சி இன்றைய (20.08.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (20.08.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (20.08.2021) முக்கிய செய்திகள்.

💥 சென்னையில் பெட்ரோல் விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 99.47 க்கும், டீசல் விலை 18 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் டீசல் ரூ.93.84 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

* 10ம் வகுப்பு மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.

10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் வரும் 23 முதல்  dge.tn.gov.in இணையதளத்தில் பிறந்த தேதி, பதிவு எண்ணை உள்ளிட்டு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.

💥 தலைநிமிரும் தமிழகம் - நூற்றாண்டின் திசையில் நூறு நாட்கள்" தமிழரசு இதழின் சிறப்பு மலரை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.

💥 இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினரை மாநில அரசே தீர்மானிக்கும் அரசியல் சாசனத்தின் 105 வது திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

* அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சேதம் விளைவித்து, கட்டடம் சரியில்லை என செய்தியை கிளப்பிவிட்டால்,  வைப்புத் தொகையான ₹1,50,000 செலுத்த தேவையில்லை என்று சிலர் தூண்டிவிட்டதன் காரணமாகவே புளியந்தோப்பு குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பற்றி அவதூறு பரப்புகின்றனர்

:PST கட்டுமான நிறுவனம் செய்தி அறிக்கை வெளியீடு

💥 சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று காணொலி மூலம் முக்கிய ஆலோசனை.

பாஜகவுக்கு எதிராக இணைந்து செயல்பட எதிர்க்கட்சி தலைவர்களுடன் சோனியா ஆலோசனை.

சரத்பவார், மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசனையில் பங்கேற்கிறார்கள்.

சோனியா தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்கிறார்.

* சென்னை புளியந்தோப்பில் தரமற்ற குடியிருப்பு கட்டப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில் உதவிப் பொறியாளர் பாண்டியன் மற்றும் உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து அரசு ஆணை

* கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வரும் திங்கள் கிழமை சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என அக்கட்சியின் சட்டப்பேரவை தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்

💥 இந்தியாவில் 12 முதல் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி பரிசோதனை நடத்த அனுமதி கோரி ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அரசிடம் அனுமதி கோரியுள்ளது.

💥 ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு, அவ்வப்போது கனமழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம்.

💥 மகப்பேறு விடுப்பு வழங்கும் போது எந்த பாகுபாடும் காட்ட கூடாது-தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.

வரன்முறை செய்யப்பட்ட ஊழியர்களுக்கும், வரன்முறைப் படுத்தப்படாத ஊழியர்களுக்கும் இடையே பாகுபாடு காட்ட கூடாது.

அனைவருக்கும் ஒரே மாதிரியாக மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம்.

* ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற இருந்த ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு.
நாளை நடைபெறும் என அறிவிப்பு.

* வடசென்னை அனல்மின் நிலையத்தின் நிலை இரண்டில் 23.8 கோடி கிலோ  நிலக்கரி மாயம்.  நிலக்கரியில் ஊழல் செய்தவர்கள் குறித்து விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
: மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி

💥 மலேசியாவின் புதிய பிரதமராக இசுமாயில் சபரி யாகூப் பதவியேற்பார் என மலேசிய அரசர் அறிவிப்பு

* போராட்டத்திற்கு ட்ராக்டரில் ஊர்வலமாக வந்த பிரேமலதா:

மேகதாது பகுதியில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓசூரில், பிரேமலதா தலைமையில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முன்னதாக ட்ராக்டரில் ஊர்வலமாக வந்த பிரேமலதா, பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது கர்நாடக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் பேசிய பிரேமலதா, தமிழ்நாடு ஏற்கனவே வறண்ட பூமியாக உள்ளது; மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாடு பாலைவனம் ஆகும். 

தஞ்சைக்கு நீர் வரவில்லை என்றால் விவசாயம் கேள்விக்குறியாகும் என தெரிவித்தார்.

* அருணா ஜெகதீசன் ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிப்பு:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு.

ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையத்தின் பதவிக்காலம் பிப்.22, 2022 வரை நீட்டிப்பு.

💥 2024 தேர்தலுக்கு தயாராகுங்கள் - எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு:

2024ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் இந்த ஒற்றுமை தொடர வேண்டும்;
தேர்தலுக்காக தற்போதே திட்டமிடுதலை தொடங்க வேண்டும்.

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேச்சு.

கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் ஒன்றாக செயல்பட்டோம்.

இந்த ஒற்றுமை வருங்காலத்திலும், நாடாளுமன்றத்துக்கு வெளியே நடத்தவேண்டிய போராட்டத்திலும்  தொடரும் என நம்புகிறேன்.

நமக்குள் பல்வேறு கருத்துகள் இருந்தாலும் நம் தேச நலனுக்காக, தேசத்தின் தேவைக்காக ஒன்றாக ஒரே குறிக்கோளுடன் இணைந்து செயல்பட வேண்டும்- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

* தாயிடம் பால் பெறமுடியாமல் அவதியுறும் அரையடி கன்றுக்குட்டி:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே நலன் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன் என்ற விவசாயி. இவர்  வீட்டு பசுவொன்று, மூன்றாவது முறையாக கன்று ஒன்றை ஈன்றுள்ளது.
ஆனால் அந்த கன்று உயரம் குறைவாக தரையோடு தரையாக தவழ்ந்து செல்லும் அளவுக்குதான் இருக்கிறது. இதனால் தாய் பசுவிடம் பால் குடிக்க முடியாமலும் நடக்க முடியாமலும் தவித்து வருகிறது கன்று.

கன்றை பார்த்து கண்ணீர் வடிக்கிறது தாய்ப்பசு. இதனால் பசுவை வைத்திருக்கும் விவசாயி விஜயன் குடும்பத்தினர் மிகப்பெரிய சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏற்கெனவே இதே பசு இரண்டு கன்றுகளை ஈன்றபோது சரியான அளவில்தான் கன்றுகள் இருந்துள்ளன. இந்த கன்றுக் குட்டியை பார்க்க சுற்றுவட்டார பகுதி மக்கள் அந்த பகுதியில் தொடர்ச்சியாக வந்தவண்ணம் உள்ளனர். குழந்தைகளை விட மிகக் குறைவான உயரத்தில் இருப்பதால் அந்தக் கன்றுக்குட்டி மீது அந்த குடும்பத்தினர் அதிக பாசத்துடன் இருந்துவருகின்றனர்.

💥 புதுச்சேரியில் உள்ள இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வரும் 23 ஆம் தேதி முதல் மீண்டும் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு தொடக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1 ஆண்டுக்கு மேலாக  கொரோனா மருத்துவமனையாக செயல்பட்டு வரும் நிலையில் தற்போது புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மீண்டும் தொடக்கப்பட உள்ளது.

💥 தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,668 பேருக்கு கொரோனா உறுதி; 1,887 பேர் குணமடைந்த நிலையில் 24 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

💥 Zydus Cadilla நிறுவனத்தின் Zycov-D கொரோனா தடுப்பூசிக்கு நடுவண் அரசு அனுமதி

இந்த தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் போடலாம் என்பது குறிப்பிடத்தக்கது

💥 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

வரும் 23-ம் தேதி முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரை கலந்தாய்வை நடத்தி மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவுறுத்தல்

💥 நடுவண் அரசை கண்டித்து செப்டம்பர் 20 முதல் 30 வரை நாடு தழுவிய போராட்டம் நடத்தவிருப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages