அக்னிப்புரட்சி இன்றைய (22.08.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (22.08.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (22.08.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் விலை 15 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 99.32 க்கும், டீசல் விலை 18 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் டீசல் ரூ.93.66 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

* தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் 24 மணிநேரமும் கொரோனா தடுப்பூசி மையம் செயல்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

* மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் நியமனம்:
பாஜக மூத்தத் தலைவர் இல.கணேசன், மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம்.

* மாநிலங்களவைத் தேர்தல் திமுக வேட்பாளர் அறிவிப்பு:

செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் எம்.எம்.அப்துல்லா போட்டி - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

💥 தமிழிசை சௌந்தராஜனை தொடர்ந்து தமிழக பாஜகவை சேர்ந்த இல. கணேசனும் ஆளுநர் ஆகிறார். மணிப்பூர் மாநில ஆளுநராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

* M.E., M.Tech., M.Arch., M.Plan., ஆகிய முதுநிலை படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வரும் செப். 22 ஆம் தேதி  வரை annauniv.edu/tanca2021 என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - அண்ணா பல்கலைக்கழகம்.

* புது வகையான திருட்டு  😳
ஹலோ மேடம்/சார் நான் பெங்களூரில் இருந்து பேசுகிறேன் UPSC EXAM எழுத என்னுடைய நம்பருக்கு பதிலாக தவறுதலாக உங்களுடைய நம்பரை மாற்றி கொடுத்து விட்டேன்.உங்கள் தொலைபேசிக்கு வரும் OTP எண்ணை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
என்று யாரேனும் கேட்டால் கொடுத்து விடாதீர்கள். - திருப்பூர் காவல்துறை.

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,630 பேருக்கு கொரோனா உறுதி.
1,827 பேர் குணமடைந்த நிலையில் 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages